Suriyan Peyarchi Palangal: அக்டோபர் 17, 2025 அன்று, சூரியன் துலாம் ராசியில் பெயர்ச்சி ஆகிறார். சூரியன் சக்தி, தலைமைத்துவ குணங்கள், ஆற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். இதனால் அவர் பெயர்ச்சியாகும் போது மனிதர்களின் இந்த அம்சங்களில் மாற்றங்களை காண முடியும்.
சூரியன் பெயர்ச்சி பலன்கள்
சூரியன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இதனால் சில ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் உண்டாகும், இவர்களது வாழ்வில் இது ஒரு பொற்காலமாய் ஜொலிக்கும். சில ராசிகளுக்கு சூரியன் பெயர்ச்சி பிரச்சனைகளை கொண்டு வரும். இவர்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளிலும் சூரியன் பெயர்ச்சியின் தாக்கம் எப்படி இருக்கும் என இந்த பதிவில் காணலாம்.
மேஷம் (Aries)
துலாம் ராசியில் சூரியன் பெயர்ச்சி உறவுகள், கூட்டாண்மைகள் மற்றும் பொது தொடர்புகளில் உங்கள் கவனத்தை அதிகரிக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். தனிப்பட்ட அல்லது தொழில்முறை உறவுகளில் சில தவறான புரிதல்கள் ஏற்படலாம். அமைதியான மற்றும் சமநிலையான மனநிலையோடு சிந்தித்து செயல்பட்டால் அனைத்து சிக்கல்களும் நீங்கும்.
ரிஷபம் (Taurus)
சூரியன் பெயர்ச்சியின் தாக்கத்தால் உடல்நலம், சேவை மற்றும் போட்டி ஆகியவற்றில் உங்கள் கவனம் அதிகரிக்கும். சூரியன் பலவீனமான நிலையில் இருக்கும்போது, வேலையில் சவால்கள் அல்லது சக ஊழியர்களுடன் சிறிய கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஒழுக்கத்தையும் பணிவையும் பேணுவது அவசியம். உங்கள் பன்னிரண்டாவது வீட்டில் சூரியனின் பார்வை, வேலையில் மன அழுத்தம் மற்றும் தளர்வுக்கு இடையில் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
மிதுனம் (Gemini)
சூரியன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் படைப்பாற்றல், குழந்தைகள் மற்றும் கல்வியை பாதிக்கும். சூரியன் பலவீனமான நிலையில் இருக்கும்போது, உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் உங்களுக்கு சிறிது நம்பிக்கையின்மை ஏற்படலாம். இருப்பினும், பதினொன்றாவது வீட்டில் சூரியனின் பார்வை, நீங்கள் பணிவுடனும் புரிதலுடனும் செயல்பட்டால் நண்பர்கள் மூலம் நன்மைகளைத் தர உதவுகிறது.
கடகம் (Cancer)
கடக ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி லாபலரமானதாக இருக்கும். வீடு, குடும்பம் மற்றும் சொத்து மீதான உங்கள் கவனத்தை அதிகரிக்கும். குடும்பத்திற்குள் சிறிய தவறான புரிதல்கள் ஏற்படக்கூடும். உங்கள் பத்தாவது வீட்டில் சூரியனின் பார்வை இருப்பது வேலையில் பொறுமையையும் நிதானத்தையும் பராமரிக்க உதவும்.
சிம்மம் (Leo)
சூரியன் சிம்ம ராசியின் அதிபதி. சூரியன் பெயர்ச்சியில் துலாம் ராசியின் செல்வாக்கு தற்காலிகமாக தன்னம்பிக்கையைக் குறைக்கலாம். உங்கள் ஒன்பதாவது வீட்டில் சூரியனின் பார்வை பொறுமையையும் நம்பிக்கையையும் பராமரிக்க அறிவுறுத்துகிறது. உடன்பிறப்புகளுடன் ஆணவத்தைத் தவிர்த்து, உங்கள் எண்ணங்களை பணிவுடன் வெளிப்படுத்துங்கள்.
கன்னி (Virgo)
கன்னி ராசியில் சூரியன் பெயர்ச்சி நிதி, குடும்பம் மற்றும் பேச்சாற்றலில் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்காலிக நிதி ஏற்ற இறக்கங்கள் அல்லது குடும்பத்திற்குள் தொடர்பு இல்லாமை இருக்கலாம். உங்கள் எட்டாவது வீட்டில் சூரியனின் பார்வை பொறுமை மற்றும் சுயபரிசோதனை மூலம் மாற்றத்தை ஏற்படுத்த உதவும்.
துலாம் (Libra)
சூரியன் பெயர்ச்சி துலாம் ராசியில் தான் ஏற்படவுள்ளது இது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் தன்னம்பிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியன் அதன் மிகக் குறைந்த நிலையில் இருக்கும்போது, ஆற்றல் இல்லாமை அல்லது சுய சந்தேகம் ஏற்படலாம். உங்கள் ஏழாவது வீட்டில் சூரியனின் பார்வை உறவுகளில் புரிதலையும் சமரசத்தையும் பராமரிக்க உதவும்.
விருச்சிகம் (Scorpio)
சூரியன் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகள அளிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வேலையில் தவறான புரிதல்கள் அல்லது அங்கீகாரம் இல்லாமை இருக்கலாம். ஆனால் உங்கள் முயற்சிகளால் அனைத்தையும் மீண்டு வருவீர்கள். உங்கள் ஆறாவது வீட்டில் சூரியனின் பார்வை ஒழுக்கம் மற்றும் நிதானத்துடன் சவால்களை சமாளிக்க உதவும்.
தனுசு (Sagittarius)
சூரியன் பெயர்ச்சியின் தாக்கத்தால் தனுசு ராசிக்காரர்களின் லாபம், ஆசைகள் மற்றும் சமூக வட்டத்தில் தாக்கத்தை காண முடியும். சூரியன் பலவீனமான நிலையில் இருக்கும்போது, அங்கீகாரம் பெற அதிக முயற்சி தேவைப்படலாம். உங்கள் ஐந்தாவது வீட்டின் மீது சூரியனின் பார்வை பொறுமை மற்றும் கவனத்துடன் படைப்பு முயற்சிகளை வெற்றிகரமாக செய்ய உதவும்.
மகரம் (Capricorn)
சூரியன் உங்கள் எட்டாவது வீட்டின் அதிபதி மற்றும் உங்கள் பத்தாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். இது தொழில், தலைமைத்துவம் மற்றும் நற்பெயரைப் பாதிக்கிறது. சூரியன் பலவீனமான நிலையில் இருக்கும்போது, வேலையில் ஈகோ மோதல்களைத் தவிர்க்க வேண்டும். உங்கள் நான்காவது வீட்டின் மீது சூரியனின் பார்வை தொழில்முறை பொறுப்புகளுடன் உணர்ச்சி சமநிலையை பராமரிக்க உதவும்.
கும்பம் (Aquarius)
சூரியன் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். நீண்ட பயணங்கள், ஆன்மீகம் மற்றும் கல்வியில் குறிப்பிடத்தக்க புதிய விஷயங்கள் நடக்கும். சூரியன் பலவீனமான நிலையில் இருக்கும்போது, சட்டம் அல்லது கூட்டாண்மை விஷயங்களில் எச்சரிக்கை அவசியம். உங்கள் மூன்றாவது வீட்டில் சூரியனின் பார்வை அன்பான பேச்சு மற்றும் நடவடிக்கைகளை பராமரிக்க உதவுகிறது.
மீனம் (Pisces)
சூரியன் பெயர்ச்சியின் காரணமாக உங்கள் ஆரோக்கியம் மேம்படும், மறைக்கப்பட்ட திறன்கள் வெளிவரும். சூரியன் பலவீனமான நிலையில் இருக்கும்போது ஆற்றல் அளவுகள் தற்காலிகமாகக் குறையக்கூடும். இந்த காலத்தில் பல வித வெற்றிகளை பெறுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு ராஜயோகம்.... வேலை, வியாபாரத்தில் அமோக வெற்றி
மேலும் படிக்க | சுக்கிரனின் நவபஞ்ச ராஜயோகம்: 3 ராசிகளுக்கு பிரகாசமான எதிர்காலம், அதிர்ஷ்டம் குவியும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









