4 Lucky Zodiac Signs In 2026: கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் சிம்ம ராசியின் அதிபதி அவார். சூரிய பகவான் ஒரு மாதத்திற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றிக்கொள்வார். அந்த வகையில், ஜனவரி 14ஆம் தேதி பொங்கலுக்கு முன்தினம் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு நுழைந்துள்ளார் சூரியன். இதனை சூரியன் பெயர்ச்சி என்கிறார்கள்.
மகர ராசியின் அதிபதி சனி பகவான். சூரியனும் சனியும் எதிர்களாக கருதப்படுகிறார்கள். இந்த சூழலில், மகர ராசிக்கு சூரியன் சென்றுப்பது மேஷம் முதல் மீன ராசி வரை என 12 ராசிகளிலும் அதன் தக்கம் இருக்கும். இது சில ராசிக்காரர்களுக்கு மோசமான தாக்கத்தை அளித்தாலும் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கிறது. அப்படி அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன? எந்த மாதிரியான நேர்மறையான பலன்களை பெற இருக்கின்றனர் என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
மேஷம்
சூரியன் மேஷ ராசியின் 10ஆம் வீட்டிற்கு சென்றிருக்கிறார். இது மேஷ ராசிக்காரர்களுக்கு அபிரிமிதமான பலன்களை கொடுக்க இருக்கிறது. அதாவது அவர்கள் தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியை அடைவார்கள். வேலை பார்ப்பவர்களுக்கு பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். பார்க்கும் வேலைக்கு மதிப்பு இருக்கும். சம்பள உயர்வு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். தந்தையுடனான உறவு வலுப்பெறும்.
ரிஷபம்
சூரியன் ரிஷப ராசியின் 9வது வீட்டில் நுழைந்துள்ளார். இது ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்க இருக்கிறது. இதனால் அவர்கள் வெற்றிகளை குவிக்க இருக்கிறார். இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்கள் கையில் எடுக்கும் காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். வேலை பார்க்கும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மேலும், பணவரவு அதிகம் இருக்கும்.
தனுசு
சூரியன் தனுசு ராசியின் 2ஆம் வீட்டில் நுழைந்துள்ளார். இது அந்த ராசியின் செல்வ வீட்டை குறிப்பதால், இந்த காலகட்டத்தில் தனுசு ராசிக்காரர்கள் செல்வத்தை குவிக்க உள்ளனர். பண வரவு அதிகரிக்கும். கூடுதல் வருமானத்திற்கான வழிகள் பிறக்கும். நிலுவையில் இருந்த பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். நிதி நிலைமை வலுபெறுவதால் பணத்தை உங்களால் அதிகம் சேமிக்க முடியும்.
மீனம்
சூரியன் மீன ராசியின் 11வது வீட்டில் நுழைந்துள்ளார். இது ;மீன ராசிக்கு வருமானத்தை அதிகரிக்க இருக்கிறது. தொழில் தொடங்க நினைப்பீர்கள். அது உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடனான வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலை பார்த்து வருபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலும், சம்பள உயர்வும் இருக்கும். இந்த காலகட்டத்தில் சொத்துக்கள் வாங்க முடியும்.
மொத்தத்தில் சூரியன் பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரர்கள் கொடிகட்டி பறக்க இருக்கிறார்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க: தை 2, மாட்டுப் பொங்கல் ராசிபலன்: இன்று எந்தெந்த ராசிகளுக்கு நல்ல நாள்...?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









