Suriyan Peyarchi Rasi Palan: ஜோதிட சாஸ்திரங்களின் படி, சூரியன், தைரியம், வலிமை, புகழ், பெருமை மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்கான காரணி கிரமாக கருதப்படுகிறார். அவர் ஒவ்வொரு ராசியிலும் 30 நாட்கள் தங்கியிருந்து, அதன் பிறகு அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சூரிய பகவானின் இந்த பெயர்ச்சியானது, 12 ராசிகளின் மீதும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது.
Sun Transit in Meenam: மீன ராசியில் பெயர்ச்சி ஆகும் சூரியன்
மார்ச் மாதத்தில், சூரிய பகவான் மீண்டும் தனது ராசியை மாற்றுகிறார். அவர் தனது நட்பு கிரகமான குருவால் ஆளப்படும் மீன ராசியில் பிரவேசிக்கிறார். சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் பிரச்சனைகள் உருவாகலாம். குறிப்பாக ஐந்து ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி சாதகமானதாகக் கருதப்படவில்லை. இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும். இந்த சூரிய பெயர்ச்சி எப்போது நிகழும்? இதனால் பாதிக்கப்படும் ராசிகள் எவை? இந்த அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Suriyan Peyarchi Palangal: சூரியன் எப்போது ராசி மாறுகிறார்?
சூரியனின் ராசி மாற்றம் மார்ச் 15 ஆம் தேதி நிகழவுள்ளது. அன்று அதிகாலை 01:08 மணிக்கு, சூரிய பகவான் மீன ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். சூரியன் மீன ராசியில் ஏப்ரல் 14-ஆம் தேதி காலை 09:38 மணி வரை தங்கியிருப்பார். 5 ராசிகளைச் சேர்ந்தவர்கள் இக்காலகட்டத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் சில எதிர்மறையான விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம். சூரியன் பெயர்ச்சியின் தாக்கத்தால் பிரச்சனைகளை எதிர்கொள்ளவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம் (Aries):
சூரியன் பெயர்ச்சி, மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும். பொருளாதார ரீதியாகச் சற்றுச் சுமையான சூழல்களை சந்திக்க நேரிடலாம். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக்கொண்டிருப்பவர்கள், நல்ல மதிப்பெண்களைப் பெற வழக்கத்தை விடக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். படிப்பில் நாட்டம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சிம்மம் (Leo):
சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவான். சூரியன் மீன ராசிக்குள் பெயர்ச்சி ஆவது, சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்குக் கலவையான பலன்களை அளிக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். பெற்றோருடனான உங்கள் உறவில் கவனமாக இருங்கள். அரசு சார்ந்த ஒப்பந்தங்கள் அல்லது பணிகளுக்கு விண்ணப்பிக்க இது ஒரு சாதகமான நேரமாக அமையும். பணியிடத்தில், தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்த்துவிடுங்கள். தேவையில்லாத பேச்சை குறைப்பதும் நல்லது.
கன்னி (Virgo):
சூரியன் உங்கள் ராசியிலிருந்து ஏழாம் வீடான 'களத்திர ஸ்தானத்தில்' பெயர்ச்சி ஆவது, கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்வில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தக்கூடும். கன்னி ராசிக்காரர்கள் தங்களது இயல்பான மென்மையான மற்றும் நிதானமான குணத்தின் துணையுடன், கடினமான சூழ்நிலைகளை எளிதாகக் கையாள சூரிய பகவான் துணை நிற்பார். இருப்பினும், குடும்பத்திற்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். இந்த காலகட்டத்தில் பொறுமையை கையாள்வது மிக அவசியமாகும்.
தனுசு (Sagittarius):
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு சூரியன் பெயர்ச்சி கலவையான பலன்களை அளிக்கும். சூரியன் பெயர்ச்சியின் தாக்கத்தின் விளைவாக, தனுசு ராசியில் பிறந்தவர்கள் பல்வேறு காரணங்களால் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மற்றும் மன உளைச்சல்களை அனுபவிக்க நேரிடும். உங்கள் உடல்நலத்தில் மிகுந்த கவனம் செலுத்த வெண்டியது மிக அவசியம். நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் கவனத்துடன் நடந்துகொள்ளுங்கள். நீதிமன்றத்திற்கு வெளியே சட்ட தகராறுகள் மற்றும் நீதிமன்றம் தொடர்பான விஷயங்களைத் தீர்ப்பது புத்திசாலித்தனமாக இருக்கும். மூதாதையர் சொத்து தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும். பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை.
கும்பம் (Aquarius):
மீனத்தில் சூரியன் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்கள் மீது மிதமானதாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிகப்படியான கவனம் தேவை. குடும்பத்திற்குள் பிரிவினை அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடும். தேர்வுகளில் வெற்றி பெற மாணவர்கள் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். இந்த காலகட்டம் சற்று சவாலானதாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | குரு பகவானுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள்.. கோடீஸ்வர யோகம், சொத்து, நகை சேரும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









