ஜூலையில் அரசாளப்போகும் 3 ராசிகள்: சனியும் குருவும் சேர்ந்து அருள்வார்கள், நல்ல காலம் ஆரம்பம்

Guru Udhayam, Sani Vakra Peyarchi: ஜூலையில் சக்திவாய்ந்த கிரகங்களான குரு மற்றும் சனி இருவரும் ஒரு சிறப்பு யோகத்தை உருவாக்குகிறார்கள். இது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், பதவி உயர்வு மற்றும் திடீர் பண ஆதாயங்களுக்கான வாய்ப்புகளை அளிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 5, 2025, 02:58 PM IST
  • சனி, குரு அருளால் ஜூலை மாதம் கடக ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சிறப்பு ஆதரவு கிடைக்கும்.
  • உதயமாகும் குரு மற்றும் வக்ர சனி உங்கள் அதிர்ஷ்டத்தை வலுப்படுத்துவார்கள்.
  • தொழில் வளர்ச்சிக்கான அறிகுறிகள் இருக்கும்.
ஜூலையில் அரசாளப்போகும் 3 ராசிகள்: சனியும் குருவும் சேர்ந்து அருள்வார்கள், நல்ல காலம் ஆரம்பம்

Guru Sani Yogam: இந்த ஜூலை மாதம் ஜோதிட ரீதியாக மிகவும் சிறப்பம்சம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இந்த மாதத்தில் மிக முக்கியமான கிரகங்களான சனி பகவானும் குரு பலவானும் முக்கிய மாறுதல்களை மேற்கொள்ளவுள்ளனர். இதந் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். 

Sani Vakra Peyarchi: சனி வக்ர பெயர்ச்சி

நீதியின் கடவுளான சனி பகவான் தற்போது மீன ராசியில் உள்ளார். அவர் ஜூலை 13 ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். 

Guru Udhayam: குரு உதயம்

சுப கிரகமான குரு பகவான் தற்போது மிதுனத்தில் அஸ்தமன் நிலையில் உள்ளார். அவர் ஜூலை 7 ஆம் தேதி உதயமாகவுள்ளார். 

ஜூலை மாதம் நடக்கவுள்ள சனி வக்ர பெயர்ச்சி மற்றும் குரு உதயத்தின் தாக்கத்தால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் மாற்றங்கள் ஏற்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் ஏற்படும். ஜூலையில் இந்த நேரத்தில் சக்திவாய்ந்த கிரகங்களான குரு மற்றும் சனி இருவரும் ஒரு சிறப்பு யோகத்தை உருவாக்குகிறார்கள். இது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், பதவி உயர்வு மற்றும் திடீர் பண ஆதாயங்களுக்கான வாய்ப்புகளைத் திறக்கும். இவர்களுக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும், பணியிடத்தில் புதிய சாதனைகளை செய்வார்கள். இவர்களுக்கு இது பொற்காலமாய் ஜொலிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Taurus: ரிஷபம்

ஜூலை மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக மிகவும் லாபகரமானதாக இருக்கும். உங்கள் ஜாதகத்தின் செல்வ வீட்டில் குரு உதயமாகிறார், மேலும் சனி வருமான வீட்டில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இது வருமானத்தை அதிகரிக்கும் வலுவான வாய்ப்புகளை உருவாக்கும். பழைய முதலீடுகள் எதிர்பாராத நன்மைகளைத் தரும். புதிய முதலீடுகளுக்கும் இது ஒரு பொருத்தமான நேரம். மாத வருமானம் அதிகரிக்கும். இந்த காலத்தில் நீங்கள் நிதி ரீதியாக மிகவும் பாதுகாப்பாக உணருவீர்கள். மேலும், வணிகம் அல்லது வேலை தொடர்பாக நீண்ட பயணங்களை மேற்கொள்ளலாம். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் ஏற்படும்.

Gemini: மிதுனம்

ஜூலை மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய தொடக்கங்களுக்கும் வெற்றிக்கும் வழி திறக்கும். இதுவரை திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, இந்த நேரம் திருமணம் நிச்சயம் ஆகும். சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். குரு உதயம் பண வரவை அதிகமாக்கும். காதல் உறவுகளில் இனிமை இருக்கும். வாழ்க்கைத் துணயுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதே நேரத்தில் வேலைகளை மாற்ற விரும்புவோர் இப்போது அதற்கு முயற்சிக்கலாம். 

Cancer: கடகம்

சனி, குரு அருளால் ஜூலை மாதம் கடக ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சிறப்பு ஆதரவு கிடைக்கும். உதயமாகும் குரு மற்றும் வக்ர சனி உங்கள் அதிர்ஷ்டத்தை வலுப்படுத்துவார்கள். தொழில் வளர்ச்சிக்கான அறிகுறிகள் இருக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் கடக ராசி மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். வீட்டில் ஒரு ஆன்மீக அல்லது மங்களகரமான நிகழ்வு நடக்கலாம். இது குடும்ப சூழலை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக, இந்த நேரம் உங்கள் வாழ்க்கையில் புதுமையையும் சமநிலையையும் கொண்டுவரும்.

Guru Peyarchi: குரு பெயர்ச்சி

செல்வம், செழிப்பு, கல்வி, குடும்பம் ஆகியவற்றுக்கான காரணி கிரகமான குரு பகவான் மே மாதம் 14 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சி ஆனார். இந்த குரு பெயர்ச்சி ஜோதிட ரீதியாக அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. குரு பகவானை வணங்கி தினமும், '‘குரவே சர்வ லோகானாம், பிஷஜே பல ரோகிணாம்; நிதயே சர்வ வித்யானாம், ஸ்ரீ தட்சிணாமூர்த்தயே நமஹ" என்ற ஸ்லோகத்தை பாராயணம் செய்வது நல்லது.

Sani Peyarchi: சனி பெயர்ச்சி

மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அவர் ஜூலை 13 ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி மீன ராசியில் பெயர்ச்சி ஆனார். இந்த சனி பெயர்ச்சியும் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. சனி பகவானின் அருள் பெற, 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஜூலை 8 சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வ லாபம்?

மேலும் படிக்க | பூரத்தில் கேது பெயர்ச்சி... 2026 ஜனவரி வரை இந்த ராசிகளுக்கு ராஜயோக பலன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News