Surya Peryarchi On March 15th: ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு ராசிகளும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றி வருகின்றன. 9 கிரகங்களின் பெயர்ச்சியின் போது, 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தம். அந்த வகையில், மங்கள கிரகம் என கருதப்படும் சூரிய பகவான் மார்ச் 15ஆம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சூரிய பகவான் 30 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அந்த வகையில், மார்ச் 15ஆம் தேதி சூரியன் குருவின் ராசியான மீனத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். அங்கு குரு, சனி, சுக்கிரனுடம் சூரியன் இணைவார். இதன் விளைவாக சுக்கிரன், சனி, சூரியன் இணைந்து மீன ராசியில் திரிகிரஹ யோகத்தை உருவாக்குவார். இதனால், ரிஷபம், கடகம் உள்ளிட்ட ஐந்து ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
Surya Peryarchi: ரிஷபம் (Taurus)
ரிஷப ராசியின் லாப வீடான 11வது வீட்டில் சூரியன் பெயர்ச்சி அடைகிறார். இதனால், உங்களது நீண்ட நாள் கனவுகள நிறைவேறும். உங்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். அரசு வேலை மற்றும் பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். இந்த காலக்கட்டத்தில் தொழில், வேலையில் குறிப்பிடத்தக்க நன்மைகளை பெறுவீர்கள். பதவி உயர்வுகள், வருமானம் உயரும் வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவுகளை பெறுவீர்கள்.
பரிகாரம்: சூரிய பகவானுக்கு பூஜை செய்து, அருகில் உள்ள கோயிலுக்கு சென்று சூரிய பகவானுக்கு விளக்கு ஏற்ற வேண்டும்.
Surya Peryarchi: மிதுனம் (Gemini)
சூரியன் பெயர்ச்சி மிதுன ராசியின் 10வது வீட்டில் நடக்கிறது. இந்த வீடு தொழில், கௌரவம், சாதனைகளை குறிக்கிறது. இந்த நேரம் தொழிலில் மங்களகரமாக விஷயத்தை ஏற்படுத்தும். புதிய தொழில் தொடங்கவும் சிறந்த நேரமாக இருககிறது. இந்த நேரத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், புதிய பொறுப்புகளும் வந்து சேரும். தொழில் முன்னேற்றம் உங்கள் வருமானத்தை அதிகரிக்கும். உங்கள் முதலீட்டில் எதிர்பார்த்த லாபத்தை பெறுவீர்கள். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்: ஒவ்வொரு நாளும் சூரியனுக்கு தண்ணீர் அர்ப்பணித்து, ஓம் ஆதித்யாய வித்மஹே திவாகராய தீமஹி என ஓத வேண்டும். பிறகு, ஞாயிற்று கிழமை கோதுமை, வெல்லம் தானமாக அளிக்கலாம்.
Surya Peryarchi: கடகம் (Cancer)
சூரியன் பெயர்ச்சி கடக ராசியின் 9வது வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். இந்த நேரத்தில் நீங்கள் அனைத்து விஷயத்திலும் அதிர்ஷ்டத்தை பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கை துணையுடனான உங்கள் உறவு வலுவடையும். இந்த பெயர்ச்சியின் போது, நீங்கள் நீண்ட தூரம் அல்லது வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும். அரசுப்பணியில் இருப்பவர்கள் பணியிட மாறுதலுக்கு வாய்ப்புள்ளது. நிதி நிலைமை மேம்படும்.
பரிகாரம்: தினமும் காலையில் சூரியனுக்கு பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும், கோயில்களுக்கு சென்ற நவகிரகங்களை வழிபட வேண்டும்.
Surya Peryarchi: விருச்சிகம் (Scorpio)
சூரியன் பெயர்ச்சி விருச்சிக ராசியின் ஐந்தாவது வீட்டில் நடக்கிறது. இந்த நேரத்தில், நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட பணிகளை முடிப்பீர்கள். இந்த நோரத்தில் உங்களுக்கு அனைத்தும் சாதகமாக இருக்கும். குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் உங்கள் கவனம் இருக்கும். ஜோதிடம், மருத்துவ பணியில் இருப்பவர்கள் அதிக லாபத்தை பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்க வாய்ப்புள்ளது. திருமணமாகதவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது. உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது. மேலும், பழைய கடன் அடைய வாய்ப்புள்ளது.
பரிகாரம்: தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை ஓதி, ஞாயிற்றுக்கிழமைகளில் மஞ்சள் நிறப் பொருட்கள் தானமாக வழங்கலாம்.
Surya Peryarchi: மகரம் (Capricorn)
சூரியன் பெயர்ச்சி மகர ராசியின் மூன்றாவது வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். இது வீரத்தின் வீடு என அழைக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் தைரியம், தன்னம்பிக்கை உங்களுக்கு அதிகரிக்கும். இந்த பெயர்ச்சியின் போது, துணையுடனான உறவு மேம்படும். நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. ஊடகங்கள், எழுத்து மற்றும் ஆலோசனைத் துறையில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். உங்கள் உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற பலன்களை பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். நகை, சொத்து, வீடு வாங்கும் யோகம் உள்ளது.
பரிகாரம்: சூரிய உதயத்தில் சூரியனுக்கு தண்ணீர் அர்ப்பணித்து, மாணவர்களுக்கு புத்தகம், எழுது பொருட்களை தானமாக வழங்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் மார்ச் 8, ஞாயிற்றுக்கிழமை - அதிர்ஷ்டம், சந்திராஷ்டமம் யார் யாருக்கு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









