புதுடெல்லி:  கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் சோதிடம், 12 ராசிகளுக்குமான பலன்களை கணித்து சொல்கிறது. செப்டம்பர் 17ம் தேதியன்று சுபகிருது ஆண்டின் புராட்டாசி மாதம் தொடங்கவிருக்கிறது. சூரியனின் பெயர்ச்சியும் அன்றே நடைபெறுகிறது. அனைத்து ராசிகளுக்கும் புரட்டாசி மாத எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்வோம். ஆனால் எது எப்படியிருந்தாலும், நவக்கிரகங்களுக்கும் அதிபதியான ஈசனை பணிந்து, சரணாகதி அடைந்தால், மலையென வரும் துன்பங்கள் மடுவாய் குறையும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2022 புரட்டாசி மாத ராசிபலன் 


மேஷம்:  தொழில்நுட்பப் பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.  வெகுமதிகள் கிடைக்கும் மாதம் இந்த புரட்டாசி என்பதால் கவலைகள் குறையும்.


ரிஷபம்: நண்பர்களுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு, எண்ணங்கள் கைகூடும். வர்த்தக பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்.   வழக்கு தொடர்பான பணிகளில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.  


மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்


மிதுனம்: உடல் ஆரோக்கியம் மேம்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். சுபிட்சமான மாதமாக இருக்கும் புரட்டாசி, உங்களுக்கு பிரச்சனைகளை படிப்படியாக குறைக்கும்


கடகம்: தொழில் தொடர்பான பணிகளில் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். தனவரவுகள் மேம்படும் நாள்.


சிம்மம்: குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். 


கன்னி: குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்.


Also Read | இந்த ஆண்டு நவராத்திரி ஏன் முக்கியமானது? தெரிந்துக் கொள்வோம்


துலாம்: வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்க வேண்டும். வாழ்க்கைத்துணைவருடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். அனுசரித்து செல்ல வேண்டிய நாள்.


விருச்சிகம்: உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் சுதந்திர தன்மை அதிகரிக்கும். விருப்பங்கள் நிறைவேறும் நாள்.


தனுசு: வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். தொழில் செய்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் இழுபறிகள் குறையும். குடும்பத்தினர் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும்.  


Also Read | இறைவனுக்கு உகந்த எட்டு வகையான மலர்கள் எவை? தெரியுமா?


மகரம்: வீடு மற்றும் வாகனம் தொடர்பான பணிகளில் முன்னேற்றங்கள் ஏற்படும் மாதம் இது. சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும்


கும்பம்: மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறும் மாதமாக கும்ப ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கூட்டாண்மைத் தொழிலில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். செல்வாக்கு அதிகரிக்கும். அனைவரின் ஆதரவும் அன்பும் கிடைக்கும் மாதம் இது.


மீனம்: நல்ல செய்தி வந்து சேரும் பொன்னான மாதம் இது. ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் மனம் நிறைவாக இருக்கும். பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்களிடம் அனைத்தையும் அப்படியே சொல்ல வேண்டாம். விழிப்புணர்வுடன் செயல்பட்டால் எந்நாளும் உங்களுக்கு நன்னாளே....


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ