Tamil Puthandu Rasipalan On April 14th: ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றி வருகின்றன. கிரகங்களின் பெயர்ச்சியின்போது, 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் பெயர்ச்சியின்போது ராஜயோகள் உருவாகுவது வழக்கம். அந்த வகையில், தமிழ் புத்தாண்டான நாளை (ஏப்ரல் 14) இரண்டு ராஜயோகங்கள் உருவாகிறது. தமிழ் புத்தாண்டு நாளை (ஏப்ரல் 14) பிறக்கிறது. இதுவரை விசுவாவசு வருடம் நடந்து கொண்டிருந்த நிலையில், நாளை முதல் பராபவ ஆண்டு பிறக்கப்போகிறது. தமிழ் பஞ்சாங்கத்தின்படி, பராபவ ஆண்டு என்பது 40வது ஆண்டாக கருதப்படுகிறது.
தமிழ் புத்தாண்டு
தமிழ் புத்தாண்டு நாளில் இரண்டு ராஜயோகங்கள் உருவாகிறது. அதாவது, குபேர யோகம் மற்றும் அர்த்த கேந்திர யோகம் உருவாகிறது. இந்த நாளில் இரண்டு யோகங்கள் உருவாகுவது குறிப்பிட்ட ராசிகளுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கும். ஏப்ரல் 14ஆம் தேதி சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த நேரத்தில் தான் குபேர யோகம் உருவாகிறது. மேலும், ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று சுக்கிரன் வருணனுடன் சேர்ந்து அர்த்த கேந்திர ராஜயோகத்தை உருவாக்கிறது. இதனால், குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
மேஷம் (Aries)
தமிழ் புத்தாண்டில் உருவாகும் இரண்டு ராஜயோகங்களால் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், செல்வத்தை அதிகரிக்கும். உங்களுக்கு இருந்து சிறுசிறு பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள். புதிய தொழில் தொடங்க அதிக வாய்ப்புள்ளது. உயர் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டுகளை பெறுவீர்கள். உயர் பொறுப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தனிப்பட்ட பிரச்னைகள் தீரும். கடன் தொல்லைகள் நீங்கும்.
கும்பம் (Aquarius)
தமிழ் புத்தாண்டில் உருவாகும் இரண்டு ராஜயோகங்களால் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். நிதி நிலைமை மேம்படும். பல வழிகளில் இருந்து உங்களுக்கு வருமானம் உயரக் கூடும். மேலும், வீட்டில் சுப காரியங்கள நடக்கும். உங்கள் பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகளை கேட்பீர்கள். உங்களுககு இருந்து வந்த தொழில் பிரச்னைகள் தீரும். கூட்டுத் தொழிலில் எதிர்பாராத லாபத்தை பெறுவீர்கள். மேலும், பெற்றோர் ஆசியுடன் உங்களுக்கு அனைத்து காரியங்களும் வெற்றிகளில் முடிவடையும்.
சிம்மம் (Leo)
தமிழ் புத்தாண்டில் உருவாகும் இரண்டு ராஜயோகங்களால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும். குபேரனின் அருளால் உங்களுக்கு இந்தாண்டு செல்வ செழிப்புகளை ஏற்படுத்தும். மேலும், உடன்பிறந்தவர்களின் ஆதரவும் இருக்கும். மேலும், உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள். குபேர யோகத்தால் உங்களுக்கு கடன் தொல்லைகள் நீங்கும். திருமண வரன் அமையக் கூடும். வேலையில்லாதவர்களுக்கு இந்த புத்தாண்டில் நல்ல வேலை அமைய வாய்ப்புள்ளது.
தனுசு (Sagittarius)
தமிழ் புத்தாண்டில் குபேர யோகம் தனுசு ராசியின் 5வது வீட்டிலும், அர்த்த கேந்திர யோகம் 4வது வீட்டிலும் நடககிறது. இதனால், உங்கள் தொழிலில் நல்ல செய்திகள் கேட்பீர்கள். வேலையில் உள்ள பிரச்னைகள் குறையும். நீங்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். இந்த இரண்டு யோகங்ளால் நிதி நிலைமை மேம்படும். உங்கள் பிள்ளைகளுக்கு திருமண வரன் அமையும். உங்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிப்பார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க: பராபவ வருட தமிழ் புத்தாண்டு பலன்: 12 ராசிகளுக்கான தனி தனி ராசிப்பலன்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









