)
Mithuna Rasi Jackot: ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அதிஷ்ட கதவுகள் உருவாக்கிட்டே இருக்கும். அந்த அதிஷ்ட கதவுகள் என்ன? அது எப்பொழுது உருவாகும் என்று தெரியாமல் ஒவ்வொருத்தரும் திணறி கொண்டு இருக்கிறோம். அதிஷ்டங்கள் நமது வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை கொடுக்க கூடியதாக இருக்கிறது. எனக்கு ஒரு நல்வழி பிறக்காதா? எனக்கு திடீர் ஜாக்பாட் அடிக்காதா? என்றஎண்ணமும் தோன்றதுக்கு காரணம் இந்த அதிஷ்டம் தான். இந்த அதிஷ்டத்தை சரியாக கணித்து, அதை பிடித்துகொண்டோம் என்றால், நமது வாழ்க்கையில் நிறைய முன்னேற்றங்கள், வெற்றிகள் அடையலாம் என்பதில் ஐயமில்லை. இந்த அதிர்ஷ்டம் என்பது நாம் செய்யும் செயல்களின் அடிப்படையில் நமது கிரகங்கள் மாறுவதன் மூலம் நமது அதிஷ்டங்களும் ஒவ்வொரு ராசிக்கு தகுந்தம் மாதிரி மாறிக்கொண்டேதான் இருக்கிறது. மிதுன ராசிகாரர்களுக்கான அதிர்ஷ்டம் என்ன என்பதைக் குறித்து பார்ப்போம்.
மிதுன ராசிக்கான அதிஷ்டம் என்பது வேலை பார்க்கும் இடத்தில் உருவாகும் வாய்ப்புகள் அதிகம். நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் நிறைய பிரச்சனைகள் உருவாகிக் கொண்டே இருக்கும். அந்த பிரச்சனை உருவாகும் இடத்தில் தான் உங்களுக்கு அதிஷ்டமும் காத்திருக்குது. அதிர்ஷ்டம் என்பது புதையல் போன்றது நிறைய பிரச்சனைகளுக்கு நடுவில் அது இருக்கிறது. அதனால் பயப்படாதீங்க. நீங்கள் வேலை பார்க்கிற இடத்தில் நிறைய ஸ்ட்ரெஸ், அழுத்தம் இருக்கிறது என்றால், அந்த அழுத்தத்தை தாங்கிகொண்டால் உங்களுக்கான அதிஷ்டம் காத்திருக்கிறது என அர்த்தம்.
இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள் எதுவென்றால், காவல் தெய்வங்களை தொடர்ந்து வழிபட வேண்டும். உங்கள் வீட்டின் அருகில் அல்லது உங்கள் அலுவலகத்தின் அருகில் இருக்கும் காவல் தெய்வத்தை வழிபடுங்கள். காவல் தெய்வம் என்றால், உங்க வீட்டுக்கு அருகில் இருக்கிற எந்த கோயில் உங்க கண்ணில் படுகிறதோ அதுதான் அந்த எல்லையை காக்கக்கூடிய தெய்வமாக இருக்கும். நீங்க வழிபாடு பண்ணும்போது உங்க அதிஷ்ட வாய்ப்புகள் கூடி வரும்.
பொதுவாக இந்த காவல் தெய்வத்தை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்றால், பிள்ளையாராக இருந்தா கைகூப்பி வணங்கிய பிறகு தேங்காய் உடைச்சிட்டு போய்கிட்டே இருங்க. அதேபோல அம்மன் காவல் தெய்வமாக இருந்தால், கற்பூரம் ஏத்தி கும்ட்டுட்டு போகணும். காவல் தெய்வத்துக்கு எந்த மலர்களை வைத்து அர்ச்சனை செய்தால் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என்றால், செங்காந்த மலரை வைத்து வழிபாடு பண்ணறது சிறப்பாக இருக்கும். நீங்கள் அடிக்கடி வந்து உளுந்த வடை செய்து மத்தவங்களுக்கு தானம் கொடுப்பது மிக சிறப்பாக இருக்கும். அதேபோல் ஆஞ்சநேயருக்கு வடமாலை சாத்துவதும் உங்களுக்கு சிறந்த நற்பலனை கொடுக்கும்.
மிதுன ராசிக்காரர்கள் இப்படி வழிபாடு செய்து வந்தால், நீங்கள் பெரிய அதிஷ்டத்தை தொடங்குவீங்க. உங்களுடைய அதிஷ்டம் வேலையில் தான் அதிகமாக இருப்பதால், திடீர் ப்ரமோஷன், சேலரி இன்கிரீஸ் போம்ற அதிஷ்டம் உருவாகறதுக்கு வாய்ப்புகள் இருக்கிறது. எனவே மிதுன ராசிக்கு அதிர்ஷ்ட கதவு தானா திறக்கும். உங்களுக்கு நிறைய மாற்றங்கள் மற்றும் அதிஷ்டத்திற்கான நேரம் உருவாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ