படிப்பில் கெட்டியாக-வாழ்வில் சுட்டியாக விளங்கும் 3 ராசிகள்! யார் தெரியுமா?

3 Zodiac Signs That  Are Good At Studies : சில ராசிகளை சேர்ந்தவர்கள், படிப்பில் கெட்டிக்காரர்களாகவும் வாழ்வில் சுட்டியாகவும் விளங்குவர். அவர்கள் யார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Mar 4, 2025, 03:28 PM IST
  • படிப்பில் சுட்டியாக விளங்கும் ராசிகள்
  • 12ல் 3 ராசிக்காரர்கள் அப்படி இருப்பார்களாம்..
  • அவர்கள் யார் யார் தெரியுமா?
படிப்பில் கெட்டியாக-வாழ்வில் சுட்டியாக விளங்கும் 3 ராசிகள்! யார் தெரியுமா?

3 Zodiac Signs That  Are Good At Studies : ஒரு சில பேரை பார்க்கும் போதே அவர்கள் எப்படி இந்த அளவிற்கு படிப்பில் சுட்டியாக விளங்குகின்றன என கேட்க தோன்றும். தனக்கு கொடுத்திருக்கும் வீட்டு பாடங்களை சரியாக முடித்து, வைக்கும் அனைத்து தேர்வுகளிலும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவர். அதேபோல எந்த விஷயத்தையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மையும் அவர்களிடம் இருக்கும். இப்படி இருப்பவர்கள் ஒரு சில குறிப்பிட்ட ராசிகளை சேர்ந்தவர்களாக இருப்பார்களாம். அவர்கள் யார் தெரியுமா? 

Add Zee News as a Preferred Source

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்தையும் துல்லியமாக ஆராய்ந்து பார்த்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஒரு விஷயத்தை ஒழுங்கு படுத்துவதற்கும், லிஸ்ட் போட்டு வேலை செய்வதற்கும் பிடிக்கும். இது அவர்களின் படிப்பிலும் உதவும். நடைமுறை சிந்தனை கொண்ட இவர்கள், பிரச்சனைகளை எளிதாக தீர்க்கும் திறனும் உடையவர்களாக இருப்பர். இவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதம் பிடித்த பாடங்களாக இருக்கலாம். 

இவர்கள் தேர்வு நெருங்கும் சமயங்களில், கடைசி நேரத்தில் படிக்காமல் முன்கூட்டியே அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்துக் கொள்வர். அதேபோல தங்களின் எந்த புத்தகத்தின் அட்டையும் கிழியாமல் பார்த்துக் கொள்வர். இது இவர்கள் வளர்ந்து கொண்டும் சுய ஒழுக்கம் கொண்ட மனிதராக இருக்க வைக்கும். இதனால் வாழ்வில் வரும் எந்த பிரச்சினைகளையும் கூட சீரான எண்ணத்துடன் எதிர்கொள்வர்.

விருச்சிகம்: 

விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் இலக்கை நோக்கி முழுவதுடன் செயல்படும் இன்னும் கொண்டவர்களாக இருப்பர். ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவு செய்துவிட்டால் அதை தெரிந்து கொள்ளும் வரை ஓய மாட்டார்கள். அதேபோல தங்கள் கனவை அடைய 100% உழைப்பை போடவும் தயாராக இருப்பர். இந்த ராசியை சேர்ந்த பெரும்பாலானோர் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். எனவே, இது அவர்களை படிப்பிலும் சுட்டியாக விளங்க வைக்கிறது. 

விருச்சக ராசிக்காரர்கள் எப்போதும் எதையாவது புதிதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். படிக்கும் சமயங்களில் இவர்கள் சில ஆசிரியர்களுக்கு பிடித்த மாணவராகவும் விளங்குவர். 

மகரம்:

மகர ராசிக்காரர்களில் பெரும்பாலனோர் சுய ஒழுக்கம் கொண்டவர்களாகவும் கடின உழைப்பை போற்றுபவர்களாகவும் இருப்பர். ஒரு இலக்கை நிர்ணயித்து வைத்தார்கள் என்றால், அதை அடைய என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்வர். இது அவர்களை நல்ல, வெற்றி பெற்ற மாணவராக மாற்றுகிறது. தங்கள் படிப்பிற்கு நேரம் செலவிட இவர்கள் தயாராக இருப்பதால் இவர்களை தேடி, இவர்கள் யார் என்று நிரூபிக்கும் நல்ல வாய்ப்புகளும் வந்து சேரும். 

அதேபோல மகர ராசியை சேர்ந்தவர்கள் பொறுப்புணர்வு அதிகம் கொண்ட ராசிக்காரர்களாகவும் இருப்பர். அதற்கு அர்த்தம் இவர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் வேலைகளை தகுந்த நேரத்தில் முடித்துக் கொடுப்பர் என்பதுதான். மகர ராசியை சேர்ந்தவர்களின் இந்த குணங்கள், அவர்கள் வளர்ந்த பின்பும் தொடரும். இதனால், தங்களின் பணியிடங்கள் மற்றும் செய்யும் தொழில்களில் சிறந்து விளங்குவர். அதே போல, சுய ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதவர்களாக இருப்பர்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | இந்த தேதியில் பிறந்த பெண்கள் மாமியார் வீட்டில் ஆதிக்கம் செலுத்துவார்கள்!

மேலும் படிக்க | சனி பெயர்ச்சிக்கு பின் சனி உதயம்: இந்த 3 ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம், உச்சம் தொடுவார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News