கையில் காசே இல்லையென்றாலும் மகிழ்ச்சியாக வாழும் 3 ராசிகள்! யார் தெரியுமா?

Zodiac Signs Will Find Happiness In Little Things : ஒரு சில ராசிக்காரர்கள், தங்கள் கைகளில் காசே இல்லையென்றாலும் கூட ராஜா போல வாழ்வார்களாம். அவர்கள் யார் யார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Mar 24, 2025, 04:40 PM IST
  • பணம் இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியாக இருக்கும் ராசிகள்..
  • சின்ன சின்ன அன்பில் மகிழ்ச்சியை தேடுவர்..
  • எந்தெந்த ராசிகள் தெரியுமா?
கையில் காசே இல்லையென்றாலும் மகிழ்ச்சியாக வாழும் 3 ராசிகள்! யார் தெரியுமா?

Zodiac Signs Will Find Happiness In Little Things : “நீரின்றி  அசையாது உலகு” என்பது போல “பணமின்றி ஒரு அனுவும் அசையாது” என்ற புதுமொழியையும் புகுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம். நாம் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளா விட்டாலும் பணம்தான் எல்லாமே என்ற நிலைக்கு வந்துவிட்டோம். 

Add Zee News as a Preferred Source

நாம் வாழ்வது செல்வந்தர் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, எளிமையான வாழ்க்கையாக இருந்தாலும் சரி, அவை அனைத்திற்கும் பணம் என்பது தேவைப்படும் ஒரு விஷயம் ஆகிவிட்டது. இதனால், “பணம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க முடியாது” எனும் மனநிலைக்கு அனைவருமே வந்துவிட்டோம். ஆனால், இங்கு சில ராசிக்காரர்கள் தங்கள் கையில் பணமே இல்லை என்றாலும் கூட, தனக்கு கிடைக்கும் எளிய விஷயங்களை வைத்துக்கொண்டு இன்பமாக இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் யார் யார் தெரியுமா?

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிரனால் ஆளப்படும் ராசிக்காரர்கள் ஆவர். இதனால் இவர்களுக்கு வாழ்வில் எப்போதும் ஆறுதலான மனிதர்கள் கிடைத்துக்கொண்டே இருப்பார்களாம். இவர்கள், உணவு விஷயத்தில் இருந்து தன்னை சேர்ந்த எதுவாக இருந்தாலும் அவை எளிமையாக இருக்க வேண்டும் என நினைப்பார்களாம். 

இதனால், இவர்களுக்கு மகிழ்வான தருணங்கள் என்பது நடந்துக்கொண்டே இருக்குமாம். அதே போல, இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி தரும் ஆனால் சிறிது காலம் மட்டுமே இருக்கும் விஷயங்களை விரும்புவதில்லை. ஒரு விஷயம், தன்னுடன் நிலையாக இருந்தால், அது தனக்கு நிரந்தர மகிழ்ச்சியை கொடுத்தால் மட்டுமே அதனை ஏற்றுக்கொள்கின்றனர். அதே போல, இவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமென்றால் ஆடம்பரமாக எல்லாம் எதையும் செய்ய வேண்டாம். சிறிதாக இவர்களுடன் நேரம் செலவிட்டாலோ அவருக்கு பிடித்த ஏதேனும் ஒரு உணவு பொருளை வாங்கி கொடுத்தாலுமே போதுமானது.

கடகம்:

கடக ராசி, சந்திரனால் ஆளப்படும் ராசியாகும். இவர்கள் தங்கள் குடும்பத்தினரிடமும் வீட்டுடனும் ஆழமான இணைப்பை உணருபவர்களாக இருக்கின்றனர். அதே போல, தன் நலனை பார்க்காத இவர்கள் தன்னை சுற்றி இருப்பவர்களும், தன்னை நம்பி இருப்பவர்களும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். இதனால், அவர்கள் மகிழ்ச்சியானாலே இவர்கள் சந்தோஷமடைவர். 

கடக ராசிக்காரர்களால், பணமாக எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்றாலும், ஒரு ஆளாக என்னென்ன முயற்சிகள் செய்ய முடியுமோ, அவை அனைத்தையும் செய்வர். தனக்கு பிடித்தவருக்கு பிடித்ததை சமைத்து தருவது, போன்ற விஷயங்களே இவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை கொடுக்கும். 

கடக ராசியை சேர்ந்தவர்கள், பணத்தை சேர்ப்பதை விட,  மனிதர்களை சேர்க்க வேண்டும் என நினைப்பர். இதனால் இவர்கள் தங்கள் கையில் பணம் இல்லை என்றாலும் கூட அதனை பெரிய விஷயமாக கருத மாட்டார்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள், புதனால் ஆளப்படுபவர்கள் ஆவர். புத்தியை ஷார்ப்பாக வைத்திருப்பதற்கு பெயர் பெற்ற அவர்கள், தங்கள் வாழ்க்கையை எளிதாக வாழ விரும்புவர். அதே போல, தினசரி செய்யும் விஷயங்களாக இருந்தாலும், அந்த விஷயங்களில் இருந்து மகிழ்ச்சி பெறும் ராசிக்காரர்கள் இவர்கள். தங்கள் வாழ்க்கையில் சிறு மகிழ்ச்சியை சேர்க்கும் விஷயமாக இருந்தாலும் அதனை பாராட்டும் குணம் கொண்ட இவர்கள், அனைத்து விஷயங்களை அணுகும் விதமும் பிராக்டிகலாக இருக்கும். இதனால், இவர்களால் எளிமையான வாழ்க்கையும் வாழ இயலும். இதனால், இவர்களுக்கு வாழ்வில் தனக்கு தேவையான முக்கிய விஷயம் எது, முக்கியமற்ற விஷயம் எது என்பது தெரிகிறது.

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை ஆகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News