எப்பாேதும் சோகத்துடன் சுற்றும் 4 ராசிக்காரர்கள்! யார் யார் தெரியுமா?

These 4 Zodiac Signs Are Always Sad : ஒரு சில ராசிக்காரர்கள், எப்போதும் ஏதோ ஒரு சோகத்துடன் சுற்றிக்கொண்டே இருப்பார்களாம். அவர்கள் யார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jul 2, 2025, 05:28 PM IST
  • சோகமாக இருக்கும் 4 ராசிகள்
  • எப்போதும் எதையாவது யோசித்துக்கொண்டே இருப்பார்கள்
  • யார் யார் தெரியுமா?
எப்பாேதும் சோகத்துடன் சுற்றும் 4 ராசிக்காரர்கள்! யார் யார் தெரியுமா?

These 4 Zodiac Signs Are Always Sad : வாழ்க்கை என்பது அனைவருக்கும் எப்போதும் நேர்கோட்டில் செல்வதில்லை. எப்போதாவது மேடு பள்ளம் வரத்தான் செய்யும். சோகங்களை எப்படி தவிர்க்க முடியாதோ மகிழ்ச்சியையும் அப்படி தவிர்க்க முடியாது. இருப்பினும் தன்னை சுற்றி எவ்வளவு மகிழ்ச்சியான விஷயங்கள் நடந்தாலும் ஒரு சில ராசிக்காரர்கள் எப்போதும் சோக மயமாகவே இருப்பார்களாம். அவர்கள் யார் தெரியுமா? 

Add Zee News as a Preferred Source

மீனம்:

12 ராசிகளில் கடைசியாக இருக்கும் மீன ராசி, அதிகம் சுகமாக இருக்கும் ராசிகளில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த ராசியை உடையவர்கள் இயல்பாகவே இரக்கமுள்ள மனம் படைத்தவர்களாக இருப்பார்களாம். பிறரது உணர்ச்சிகளையும் ஆழமாக உணரக்கூடிய தன்மை கொண்ட இவர்கள், தன் வாழ்க்கையில் இருக்கும் துன்பம் மட்டுமல்லாது உலக வாழ்க்கையில் இருக்கும் துன்பத்தையும் தனது ஆக்கிக் கொள்வார்களாம். இவர்கள் தன் மனதில் இருக்கும் வழியை தாண்டி பிறரது வழியையும் தாங்கிக் கொள்வதால் எப்போதும் ஏதோ ஒரு சோகத்தில் சிக்கிக் கொள்கிறார்களாம். இதனால் அவர்களது உணர்ச்சி நிலை எப்போதும் கீழேயே இருக்குமாம்.

கடகம்:

கடக ராசியை சேர்ந்தவர்கள் சென்சிட்டிவான மனம் கொண்டவர்களாக இருப்பார்களாம். தனக்கு ஒரு பிரச்சனை என்றால் அதற்கு சுகமாக இருக்கிறார்களோ இல்லையோ, தனது அன்புக்குரியவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் துடித்து போய்விடுவார்களாம். இதனால், தனது உணர்ச்சிகளை அவர்களால் பல நேரங்களில் கையாள முடியாமல் போய்விடும். பிறரது உணர்ச்சிகளையும் சேர்த்து உணர்வார்கள். இதனால் அவர்களுக்கு அடிக்கடி மனநிலை மாற்றங்கள் ஏற்படும், சோகமாகவும் மாறுவார்கள். இவர்கள் எப்போதும் தன்னை சுற்றி பாதுகாப்பும், நிரந்தர மனிதர்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்களாம். அப்படிப்பட்ட ஒரு நேரம் வராத போது, இவர்களை தானாகவே சோகம் ஆட்கொண்டு விடுமாம். 

விருச்சிகம்: 

விருச்சிக ராசி காரர்கள் பார்ப்பதற்கு மர்மம் நிறைந்தவர்கள் போல இருப்பார்கள். தன்னை யாரும் அசைக்க முடியாது என்பது போல காட்டிக் கொள்வார்கள். ஆனால் உண்மையில், அவர்களின் மனம் குழந்தை போன்றது. தனக்குள் என்ன உணர்ச்சி வந்தாலும் அதனை தாங்கிக் கொள்ள முடியாத இவர்கள், அதை மறைக்கத்தான் கடுமையான முகத்தை வெளியில் காட்டுகின்றனர். ஆனால் இவர்கள் தனக்குள் இருக்கும் சோகத்தையும் யாருக்கும் தெரியாமல் மறைக்கவும் செய்வார்கள். அது குறித்து பேச வேண்டிய நிலை வந்தால் எப்படி ஓட வேண்டும் என்ற ஒரே யோசனையில் தான் இருப்பார்கள். மறதி என்பது நிரந்தரமான நோயாக இருக்கும் போதும், விருச்சிக ராசிக்காரர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கு. எத்தனை வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்திருந்தாலும், தனக்கு தாக்கத்தை ஏற்படுத்திய விஷயத்தை மட்டும் மறக்கவே மாட்டார்களாம். 

மகரம்:

மகர ராசிக்காரர்கள் பிற மனதில் என்ன நடக்கிறது என்று கேட்டு தெரிந்து கொள்வார்களே தவிர, தனக்கு என்ன பிரச்சனை என்பதை வெளியே சொல்லவே மாட்டார்களாம். தனது இலக்கு என்று ஒன்று வந்துவிட்டால் அதை நோக்கி ஓடும் போது, அதற்கிடையில் எந்த உணர்ச்சி குறிப்பிடுதல் வந்தாலும் அதனை கண்டு கொள்ள மாட்டார்கள், அது தன்னுடையதாகவே இருந்தாலும் சரி. இதனாலேயே அவர்கள் அன்புக்கும் சோகம், தனிமை போன்ற அனைத்து விஷயங்களும் அவர்களுக்குள்ளேயே புதைந்து விடுமாம். இப்படி யாரிடமும் பேசாததால் இவர்களுக்குள் இருக்கும் அந்த சோகம் அப்படியே நிரந்தரமாக தங்கும் என கூறப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்கள் உண்மையில் புத்திசாலி ஆனால் வெற்றிபெற மிகவும் சோம்பேறி!!

மேலும் படிக்க | திமிரு பிடித்த 4 ராசிக்காரர்கள்..இவர்களுக்கு வரப்போகும் துணை ரொம்பவே ஸ்ட்ராங்கா இருக்கனும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News