)
4 Zodiac Signs Born To Torture : 12 ராசிகளில் ஒவ்வொரு ராசியை சேர்ந்தவர்களுக்கும் தனித்துவமான சில குணங்கள் இருக்கும். ஒரு சில ராட்சையை சேர்ந்தவர்கள் இயல்பாகவே பிறருக்கு அதிர்ஷ்டம் கொடுப்பவர்களாகவும், ஒரு சில ராசி சேர்ந்தவர்கள் பிறருக்கு துரதிர்ஷ்டம் கொடுப்பவர்களாகவும் இருப்பார்களாம். இதில் சில ராசியை சேர்ந்த பெண்கள் தன்னை சுற்றி இருப்பவர்களை டார்ச்சர் செய்வதற்கென்று பிறந்தவர்களாக இருப்பார்களாம். அவர்கள் யார் யார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
கன்னி ராசியை சேர்ந்த பெண்கள் புத்திசாலித்தனம் மிகுந்தவர்களாக இருப்பார்களாம். ஆனால் அதே சமயத்தில், இவர்களுக்குள் கடுமையான குணமும் நிறைந்திருக்குமாம். பல விஷயங்களை உன்னிப்பாக கவனிக்கும் இவர்கள், அதில் ஏதேனும் மாறுதல் தெரிந்தால் அதைப் பிடித்துக் கொண்டு கேட்டுக் கொண்டே இருப்பார்களாம். இது பழைய சமையலின் அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. புதன் கிரகத்தால் ஆளப்படும் இவர்களுக்கு, அறிவாளித்தனத்தில் ஒரு குறையும் இருக்காதாம். ஆனால் தனது கட்டுப்பாட்டுக்குள் தன்னை சுற்றி இருப்பவர்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பார்களாம். எங்கு சென்றாலும் தான் முதன்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் இவர்களது எண்ணமே இவர்களை வெறுப்பேற்றக்கூடியவராக மாற்றிவிடும்.
மகர ராசியை சேர்ந்த பெண்கள் சமநிலையின் கிரகமாக போற்றப்படும் சனிபகவானால் ஆளப்படுகிறார். நம்பகத்தன்மை வாய்ந்தவர்களாகவும், நம்பிக்கை கூறியவர்களாகவும் இருக்கும் இவர்கள் பிறரிடம் இருந்து பாதுகாப்பையும் ஒழுக்கத்தையும் எதிர்பார்ப்பார்கள். இவர்களுடன் பழகும் சிலரால் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாது. இதனால் பல சமயங்களில் அவர்களிடம் இவர்கள் கடுமையாக நடந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதேபோல இந்த ராசியை சேர்ந்த பெண்கள் தனக்கு பிடித்தவர்களுக்காக அளவுக்கு அதிகமாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்வார்களாம். ஆனால், தங்களுக்கு பிடிக்காதவர்களை மதிக்கவே மாட்டார்களாம். எந்த அளவிற்கு இவர்கள் வெறுப்பை வெளியில் கொடுக்கிறார்களோ அதே அளவுக்கு வெறுப்பு இவர்களையும் எதுவும் வந்து சேரும் என கூறப்படுகிறது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியை சேர்ந்த பெண்களுக்கு, பிறரை அடியால் அல்லது வெளி காயத்தால் காயப்படுத்த தெரியாது. ஆனால், கோபத்தில் இவர்கள் பேசும் சில வார்த்தைகள் ஆழமான காயத்தை ஏற்படுத்தி விடும். இதனாலேயே இவர்களிடம் பழகுபவர்கள் கொஞ்சம் பார்த்து பதமாக நடந்து கொள்வர். தனக்கு ஒருவர் கெட்டது நினைக்கிறார், அல்லது ஏதேனும் கெட்ட செயலை செய்து விட்டார் என்றால், அதை இவர்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்கவே மாட்டார்களாம். பழி வாங்குகிறார்களோ இல்லையோ, அதனை மனதில் எப்போதும் வைத்துக்கொள்வர்.
அதே போல, இவர்களை விரும்பி அருகில் வரும் நண்பர்கள் கூட இவர்களுடன் ஏதேனும் பிரச்சனை வந்துவிட்டது என்றால் உடனே இவர்களை விட்டு விலகி விடுவார்களாம். விருச்சிக ராசிக்கார பெண்களுக்கு அவர்களின் வாயும் வார்த்தையுமே விஷமாகி விடுமாம்.
மிதுனம்:
மிதுன ராசியை சேர்ந்த பெண்கள், தன்னை சுற்றி இருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்பவர்களாக இருப்பார்களாம். திறந்த மனம் கொண்ட இவர்கள், சில சமயங்களில் பிறருக்கு வலிக்கிறதா இல்லையா என்று பாராமல் மோசமான நகைச்சுவைகளை தூவி விடுவார்களாம். அதே போல, இந்த ராசிக்கார பெண்களின் மனமானது அடிக்கடி மாறிக்கொண்டே இருக்குமாம். இதனால், எப்போதும் பிறரால் வெறுக்கப்படும் ராசிக்கார பெண்களின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ