2026ல் இந்த 4 ராசிகளுக்கு காதல் செட்டாகும்.. திருமணம் கைகூடும்! யாரெல்லாம் தெரியுமா?

Zodiac Signs To Get Love Marriages In 2026: 2026ஆம் ஆண்டில் எந்தெந்த ராசிகளுக்கு காதல் திருமணம் கைகூடும் என்பதை இங்கு பார்ப்போம்.

Written by - Umabarkavi K | Last Updated : Dec 8, 2025, 05:01 PM IST
  • 2026ல் அதிர்ஷ்டம் தான்
  • காதல் திருமணம் கைகூடும் 5 ராசிகள்
  • லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா?
2026ல் இந்த 4 ராசிகளுக்கு காதல் செட்டாகும்.. திருமணம் கைகூடும்! யாரெல்லாம் தெரியுமா?

Zodiac Signs To Get Love Marriages In 2026: 2026ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கப்போகிறது. 2026ஆம் ஆண்டு பல்வேறு கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற உள்ளது. இதனால், 12 ராசிகளுக்கு 2026ஆம் ஆண்டு ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நேர்மறையான ஆற்றல் அல்லது எதிர்மறையான ஆற்றலையும் ஏற்படுத்தலாம். இருப்பினும், 2026ஆம் ஆண்டும் பெரும்பாலான ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றலை இருக்கும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

இந்த நிலையில், 2026ஆம் ஆண்டு சில ராசிகளுக்கு காதல் திருமணம் கைகூடும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. நீண்ட காலமாக காதலித்து வந்தவர்கள், காதல் திருமணத்திற்கு வீட்டில் சம்மதம் போன்ற நல்ல விஷயங்கள் 2026ல் நடக்கக் கூடும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, அது என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.

எந்தெந்த ராசிகள்?

ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026ல் காதல் திருமணம் கைகூடலாம். நீண்ட காலமாக காதலித்த வந்தவர்களுக்கு 2026ல் அவர்களுக்கு திருமணம் கைகூடும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்கு மேல் காதல் திருமணம் கூடும். மேலும், காதலும் செட்டாகும். உங்களுக்கான துணை 2026ல் உங்களுக்கு கிடைக்கும். உங்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். சிக்கிளாக இருந்து வருபவர்களுக்கு 2026ஆம் ஆண் அற்புதமான ஆண்டாக இருக்கும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

கடகம் - 2026ஆம் ஆண்டு கடக ராசிகளுக்கு காதல் திருமணம் கைகூடும். ஏனென்றால், கடக ராசிக்குள் குரு வருகிறார். இதனால், நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்து நடக்கும். நீங்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்பார்கள். அதனால், கடந்த சில வருடங்களாக காதலித்து வந்திருந்தால், அவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். அதோடு, 2026ல் உங்களது காதலை ஆண்/பெண் ஏற்கவும் செய்வார்கள். நீங்கள் கேட்கும் விஷயத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிப்பார்கள். அந்த அளவுக்கு 2026ஆம் ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும்.

துலாம் - 2026ஆம் ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடலாம். இந்த காதல் 2026ல் திருமணம் கூட நடக்கும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு புதிய உறவுகள் அமையக் கூடிய சூழல் ஏற்படும். காதல் வெற்றி அடையும். நீண்ட நாட்களாக சிங்கிளாக இருப்பவர்களுக்கு 2026ஆம் ஆண்டு காதல் செட்டாகும். உங்களூக்கு காதலன், காதலி கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆசைப்பட்டப்படி நீங்கள் விரும்பி நபரை திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். பெற்றோரும் உங்களது காதல் திருமணத்திற்கு சம்மதிப்பார்கள்.

தனுசு, மிதுனம் - 2026ஆம் ஆண்டு இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கு காதல் வெற்றி அடையும். ஆனால், திருமணம் சந்தோஷத்தை கொடுக்குமா என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால், தனுசு ராசிக்கு 4ஆம் இடத்தில் சனி இருந்து கொண்டு, ராசியை பார்க்கிறார். மிதுன ராசிக்கு 10ஆம் இடத்தில் சனி இருந்து கொண்டு 7ஆம் இடத்தை பார்க்கிறார். எனவே, இந்த இரண்டு ராசிக்கும் காதல் வெற்றி அடையும். இருப்பினும், நீங்கள் தவறான முடிவுகளை எடுப்பீர்கள். தடுமாற்றத்தை சந்தீப்பீர்கள். எனவே, உங்கள் துணையை தேர்வு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். எனவே, காதல், திருமண விவகாரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க: மருமகளை கண்டாலே பிடிக்காது! இந்த 3 ராசி மாமியார்களால் ஒரே தலைவலி தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News