2026ல் உச்சம் பெறும் 5 ராசிகள்! தொழிலில் அசுர வளர்ச்சி.. யாரெல்லாம் தெரியுமா?

Zodiac Sign Big Growth In Business 2026: ஜோதிடத்தின்படி சில ராசியைச் சேர்ந்தவர்கள் 2026ஆம் ஆண்டு தொழிலில் உச்சமடைவார்கள் என கூறப்பட்டுள்ளது.

Written by - Umabarkavi K | Last Updated : Dec 12, 2025, 11:47 AM IST
  • 2026ல் தொழிலில் முன்னேற்றம்
  • 5 ராசிகளுக்கு ஜாக்பாட்
  • யார் தெரியுமா?
2026ல் உச்சம் பெறும் 5 ராசிகள்! தொழிலில் அசுர வளர்ச்சி.. யாரெல்லாம் தெரியுமா?

2026 New Year Rasipalan: 2026ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கிறது. 2026ஆம் ஆண்டு பல கிரகங்கள் நிலை மாறுகிறது. இதனால், 12 ராசிகளுக்கும் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, தொழில், வேலை, திருமணம் போன்றவற்றில் பல விதமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். என கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில், தொழில் ரீதியாக 2026ஆம் ஆண்டு சில ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. அது என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

தொழிலில் உச்சமடையும் ராசிகள்

மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். குரு பகவானின் ஆசியால் புதிய தொழில் தொடங்குவதற்கு நல்ல வாய்ப்புகள் அமையும். நஷ்டத்தில் இயங்கி வந்த தொழிலிலும் 2026ஆம் ஆண்டு கொடிக்கட்டி பறக்கும். மேலும், தொழிலை விரிவாக்கம் செய்வதற்கும் 2026ஆம் ஆண்டு நல்ல ஆண்டாக இருக்கும். கூட்டுத் தொழிலிலும் நல்ல லாபம் கிடைக்கும். உங்களது கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக பார்த்தால், 2026ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு தொழிலில் அதிர்ஷடம் கிடைக்கும்.

ரிஷபம் - தொழிலில் உங்களின் கடின உழைப்பிற்கு 2026ஆம் ஆண்டு நல்ல பலனை கொடுக்கும். முக்கிய கிரகங்கள் சாதகமான நிலையில் சஞ்சரிப்பதால், நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். ராகுவின் சஞ்சாரம் உங்களின் பொருளாதார நிலையை உயர்த்தும். 2026ஆம் ஆண்டு வருமானத்திற்கு எந்த குறையும் ஏற்படாது. நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் முடிவடையக் கூடும். சொத்து தொடர்பான விஷயங்கள் அனைத்தும் சாதகமாக அமையும். புதிய தொழில் தொடங்குவதற்கு நிதி கிடைக்கும். மேலும், உங்களது தொழிலை விரிவுப்படுத்தும் காலம் அமையும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

சிம்மம் - 2026ஆம் ஆண்டு தொழில் ரீதியாக நன்மைகள் அளிக்கும். சிம்ம ராசிக்காரர்கள் எது தொடங்கினாலும் அதிர்ஷ்டம் தான். சனி பகவானின் ஆசியால் தொழிலில் நல்ல வளர்ச்சியை பெறுவீர்கள். சிறு கடை வைத்திருந்தாலும், அதில் உங்களுக்கு எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். இதன் மூலம், உங்களுக்கு நிலுவையில் இருந்த கடன் பிரச்னைகள் தீரும். கொடுக்கல் வாங்கல் பிரச்னை தீரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். கூட்டு தொழில் செய்வதற்கு 2026ஆம் ஆண்டு நல்ல காலமாக இருக்கும். தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.

துலாம் - 2026ஆம் ஆண்டு துலாம் ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான வளர்ச்சியை தரும். 2026 ஜூன் மாதத்திற்கு பிறகு, குரு பகவானின் ஆசியால் தொழிலில் சிறப்பான வெற்றியை காண்பீர்கள். உங்களது கடின உழைப்பிற்கு ஊதியம் கிடைக்கும். வியாபாராத்தை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். பணப் புழக்கம் அதிகமாக இருக்கும். இதன் மூலம், உங்கள் கடன் பிரச்னை தீரும். தொழிலில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும், பங்குச்சந்தைகள் போன்றவற்றிலும் தாரளமாக முதலீடு செய்யலாம்.

தனுசு - 2026ஆம் ஆண்டு நிதி வளர்ச்சியாக சிறப்பான ஆண்டாக இருக்கும். குரு பகவானின் ஆசியில் தொழிலில் சிறந்து விளங்குவீர்கள். வெளிநாடுகளில் வேலை கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், நிதி ரீதியாக பலம் பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கு 2026ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாக இருக்கும். எனவே, ஓட்டுமொத்தமாக தனுசு ராசிக்காரர்கள் 2026ஆம் ஆண்டு தொழில் தொடங்குவதற்கு சிறந்த ஆண்டாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க: தை முதல் கொடிக்கட்டி பறக்கும் 4 ராசிகள்.. பணத்திற்கு பஞ்சமில்லையாம்.. யாரெல்லாம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

About the Author

Trending News