)
4 Zodiac Signs Make The Best Friends: வாழ்க்கையில் நட்பு என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் ஒரு நல்ல நண்பனின் ஆதரவு தேவைப்படுகிறது. சந்தோஷமாக இருந்தாலும், சோகமான விஷயமாக இருந்தாலும், ஒரு நல்ல நண்பரின் ஆதரவும், காதலும் கிடைப்பது ஒரு வரமாக இருக்கும். அவர்கள் நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருப்பார்கள். இப்படிப்பட்ட நட்பு குறித்து ஜோதிடத்தில் சில விஷயங்கள் கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஜோதிடத்தின்படி சில ராசிகள் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. அவர்கள் நட்புக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள் என கூறப்பட்டு இருக்கிறது. மேலும், நண்பர்களுக்கு தேவைப்பட்ட அனைத்து உதவிகளை சற்று கூட யோசிக்காமல், பட்டென செய்வார்கள் என்றும் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
கடக ராசிக்கார்கள் சந்திரனால் ஆளப்படுகிறார்கள். இவர்கள் இரக்கம், உணர்ச்சி, புரிதல் போன்ற குணங்களை கொண்டவர்கள். இவர்கள் நண்பர்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். இவர்கள் நண்பர்களை தேவைகளை அவர்கள் சொல்வதற்கு முன்பே தெரிந்து கொண்டு, அதனை செயல்படுத்துவார்களாம். நண்பர்களுக்கு மிகவும் உண்மையாகவும், அவர்களுக்கு ஆறுதலாகவும் இருப்பார்கள். நண்பர்களுக்கு இருக்கும் பிரச்னைகளை எப்போது காது கொடுத்து கேட்பார்கள். மேலும், அவர்களது துன்பதிலும் தோள் கொடுக்கும் பண்புடையவர்கள். நண்பர்கள் முன்னிலையில் எப்போது மகிழ்ச்சியாகவே காணப்படுவார்கள். எனவே, கடக ராசிக்காரர்கள் நண்பகமாக நண்பர்களில் ஒருவராக இருப்பார்கள்.
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள், தங்கள் அன்பான, தாராள மனப்பான்மையாலும் அறியப்படுகிறார்கள். மேலும், சிம்ம ராசிக்காரர்கள் நண்பர்களுக்கு உத்வேகமாக திகழ்கிறார்கள். அவர்கள் நண்பர்களுக்கு ஊக்கமளித்து, அவர்களின் திறமையை வெளிக் கொண்டு வரும் பண்புடையவர்கள். சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் விசுவாசமான நண்பர்கள். நண்பர்களுக்காக எதுவாக இருந்தாலும் அவர்கள் பக்கம் நிற்பார்கள். சிம்ம ராசிக்கார்கள் இருக்கும் இடங்கள் எப்போது பாசிட்டிவாகவே இருக்கும். நண்பர்களின் பாதுகாக்கவும் இவர்கள் செய்வார்கள். சிம்ம ராசிக்காரர்கள் நண்பர்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். அவர்களின் விசுவாசம், நம்பிக்கை மற்றும் அசைக்க முடியாத ஆதரவு அவர்களை குறிப்பிடத்தக்க நண்பர்களாக ஆக்குகின்றன.
துலாம் ராசிக்காரர்கள் நல்லிணக்கம், நியாயத்தின் அடையாளமாக திகழ்கிறார்கள். துலாம் ராசிக்கார்கள் அமைதியை விரும்புபவர்கள். அவர்கள் தங்கள் உறவுகளின் நல்லிணக்கம் உருவாக்க முயற்சி மேற்கொள்வார்கள். இந்த பண்புகள் தான் அவர்களை சிறந்த நண்பர்களாக மாற்றுகின்றன. துலாம் ராசிக்காரர்கள் மிகவும் சமூகத்தன்மை கொண்டவர்கள். இவர்களை எப்போதுமே பல நண்பர்கள் இருப்பார்கள். இவர்கள் சொல்வதை கேட்டு தான், அவர்களது நண்பர்கள் செயல்படுவார்கள். எப்போது, நண்பர்களின் பிரச்னைகளை காது கொடுத்து கேட்டு, அதற்கு தீர்வு வழங்குவார்கள். நண்பர்கள் தவறு செய்தால், அதனை மன்னித்து விட்டு, மீண்டும் பழையபடி நட்பு பாராட்டுவார்கள். இவர்கள் பெரும்பாலும் நட்பை தக்க வைத்து கொள்ள விரும்புவார்கள்.
வியாழனால் ஆளுப்படும் தனுசு ராசிக்கார்கள் சிறந்த நண்பர்களாக அறியப்படுகிறார்கள். இவர்கள் நண்பர்களுக்கு அவ்வப்போது ஆவுட்டிங் செல்ல விருப்பப்படுவார்கள். தனுசு ராசிக்காரர்கள் நண்பர்களின் துன்பத்தில் அவர்களுக்கு பக்க பலமாக இருந்து ஆறுதல் கூறுவார்கள். அவர்களை எப்போது தனியாக விடமாட்டார்களாம். எதை ஏற்றும் கொள்ளும் தன்மை கொண்டவர்கள். நண்பர்களிடையே பிரச்னை ஏற்பட்டாலும், அதனை சுமுகமாக முடிப்பார்களாம். நண்பர்களின் தவறையும் சுட்டிக் காட்டுவார்களாம். இவர்கள் ஒருவரை நண்பராக ஏற்றுக் கொண்டால், அவர்களுக்காக விசுவாசத்துடன் இருப்பார்கள். நண்பர்களின் நேர்மறையான விமர்சனங்களையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் குணம் படைத்தவர்களாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ