சனிப் பெயர்ச்சி 2026 செய்திகள்: உங்களுக்கு சனி தோஷம் நீங்க வேண்டுமா? 2026 சனிப் பெயர்ச்சியின் போது செய்ய வேண்டிய தானங்களும் வழிபாட்டுத் தலங்களும் குறித்தும், ஜோதிடத்தில் பஞ்சாங்கம் என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த பஞ்சாங்கத்தை அடிப்படையாக வைத்தே நாள், கிழமை, திதி, அமாவாசை மற்றும் பௌர்ணமி போன்றவற்றை நாம் தெரிந்து கொள்கின்றோம். ஜோதிடர்கள் இதனை வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் என இரண்டு வகையாகக் கடைபிடிக்கின்றனர். தற்போது திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி ஆரம்பித்துள்ளது.
ஜோதிட உலகில் எப்போதும் விவாதத்திற்கு உள்ளாகும் ஒரு விஷயம் 'பஞ்சாங்கம்'. நம் முன்னோர்கள் காலம் தொட்டு பின்பற்றி வரும் 'வாக்கிய பஞ்சாங்கம்' ஒருபுறம், நவீன வானியல் கணக்கீடுகளுக்கு ஏற்ப துல்லியமாக கணிக்கப்படும் 'திருக்கணித பஞ்சாங்கம்' மறுபுறம். எனவே திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி 12 ராசிகளுக்கான எளிய வழிபாட்டு முறைகள் மற்றும் பரிகாரங்கள் குறித்து பார்ப்போம்.
வாக்கிய பஞ்சாங்கம் என்றால் என்ன?
இது ஆதிகாலம் தொட்டே நம்முடன் தொடர்ந்து வரும் ஒரு கால அளவுகோள். நம் முன்னோர்கள் இதையே பின்பற்றி வந்தனர். ஆனால், காலநிலை மாற்றம் மற்றும் கோள்களின் செயல்பாடுகளால் இதில் சில முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கின.
திருக்கணித பஞ்சாங்கம் என்றால் என்ன?
நவீன வானியல் கணக்கீடுகளைப் பயன்படுத்தி, துல்லியமாக கணக்கிடப்பட்டு கடந்த சில நூறு வருடங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது.
சனிப் பெயர்ச்சி 2026 காலம்
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்தின் நகர்வும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சனிப் பெயர்ச்சி வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடும் என்பார்கள். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, சனிப் பெயர்ச்சியானது கடந்த ஆண்டு மார்ச் மாதம் 29-ஆம் தேதி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு நிகழ்ந்ததாக சில ஜோதிடர்கள் கூறுகின்றனர். அதேபோல வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, வருகின்ற 06.03.2026 (மாசி மாதம் 22-ஆம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 8:26 மணியளவில் சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
சனி பகவானின் முக்கிய ஸ்தலம்
சனி பகவானின் முக்கிய ஸ்தலமான திருநள்ளாறில் வாக்கிய பஞ்சாங்கத்தின் படியே சனிப் பெயர்ச்சி கொண்டாடப்படுகிறது. அந்த சமயம் சனீஸ்வர பகவானுக்கு விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற உள்ளன.
சனிப் பெயர்ச்சியின் வகைகள்
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சனிப் பெயர்ச்சியை ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் கண்டக சனி என்று ஜோதிடர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இதன் தாக்கத்தைக் குறைக்க பொதுவான சில பரிகாரங்கள் செய்யப்படுகிறது.
ஏழரை சனி பரிகாரங்கள் 2026
- "ஓம் சனீஸ்வராய நமஹ" அல்லது சனி காயத்ரியான "ஓம் காகத்வஜாய வித்மகே கட்கஹஸ்தாய தீமகி தன்னோ மந்தப் பிரசோதயாத்" என்ற மந்திரத்தை உச்சரிக்கலாம்.
- கருப்பு நிற ஆடை, எள் ஆகியவற்றை ஏழைகளுக்குத் தானமாக வழங்கலாம்.
- உடல் ஊனமுற்றோர்க்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது சனி பகவானுக்கு மிகவும் பிடிக்கும்.
- சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி எள் முடிச்சு வைத்து வழிபடலாம்.
ராசி வாரியான எளிய பரிகாரங்கள் என்னென்ன?
மேஷம்: முருகப் பெருமானை வழிபட நன்மைகள் பெருகும்.
ரிஷபம்: சிவபெருமான் மற்றும் பெருமாள் வழிபாடு மன அமைதி தரும்.
மிதுனம்: அனுமன் மற்றும் சக்கரத்தாழ்வாரை வணங்கினால் தடைகள் நீங்கும்.
கடகம்: திருக்கொள்ளிக்காடு பொங்கு சனி தலம் மற்றும் விநாயகர் வழிபாடு சிறப்பு.
சிம்மம்: காளஹஸ்தி சிவன் மற்றும் துர்க்கை அம்மன் வழிபாடு சங்கடங்களை குறைக்கும்.
கன்னி: மேல்மலையனூர் அல்லது புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபடலாம்.
துலாம்: பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் வழிபாடு நலம் தரும்.
விருச்சிகம்: அறுபடை வீடு முருகன் மற்றும் வைத்தீஸ்வரன் கோவில் வழிபாடு அவசியம்.
தனுசு: ராகவேந்திரர், சீரடி சாய்பாபா போன்ற மகான்களை வழிபடலாம்.
மகரம்: தும்பிக்கை ஆழ்வார் (விநாயகர்) வழிபாடு வாழ்க்கையில் ஏற்றத்தைத் தரும்.
கும்பம்: சிவபெருமான் மற்றும் ஆஞ்சநேயரை வழிபட துன்பங்கள் விலகும்.
மீனம்: ஜென்ம சனி என்பதால் நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு அரணாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இவை பொதுவான பலன்களே. உங்கள் ஜாதகத்தில் கிரக நிலைகள் எப்படி இருக்கிறது என்பதை ஒரு நல்ல ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று பரிகாரங்களைச் செய்வது இன்னும் சிறப்பான பலனைத் தரும்.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
மேலும் படிக்க - சனியின் பிடியில் சிக்கும் ராசிகள்.. தப்பிக்க உச்சரிக்க வேண்டிய மந்திரம் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









