மார்ச் 29ம் தேதி சனி பெயர்ச்சி இல்லை... திருநள்ளாறு சனி பகவான் கோவிலின் முக்கிய அறிவிப்பு

சனி பகவானின் பிரசித்தி பெற்ற கோவிலான, திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம், மார்ச் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி இல்லை என்று தெரிவித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 25, 2025, 12:16 PM IST
  • சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை.
  • வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும்.
  • திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் பக்தர்கள் கூட்டம்.
மார்ச் 29ம் தேதி சனி பெயர்ச்சி இல்லை... திருநள்ளாறு சனி பகவான் கோவிலின் முக்கிய அறிவிப்பு

ஜோதிடத்தில், நீதிக்கடவுள், கர்மகாரகர் என அழைக்கப்படும் சனீஸ்வரனின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சனிப்பெயர்ச்சி வரும் 29ஆம் தேதி நிகழும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது கும்ப ராசியில் இருக்கும் சனி பகவான் மீன ராசிக்கு செல்கிறார் என  கூறப்பட்டது. ஆனால் சனி பகவானின் பிரசித்தி பெற்ற கோவிலான, திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம், மார்ச் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி இல்லை என்று தெரிவித்துள்ளது.

வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும்

சனிப்பெயர்ச்சி அன்று திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் வெகு விமர்சையாக பூஜைகள் நடைபெறும் பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் 29ஆம் தேதி, சனிப்பெயர்ச்சி இல்லை என்றும், வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. வாக்கிய பஞ்சாங்க முறைப்படி, 2026 ஆம் ஆண்டில் தான் சனி பெயர்ச்சி நிகழும் என கோவில் நிர்வாக கூறியுள்ளது.

சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரம்பரிய கணக்கு முறைப்படி, 2025 மார்ச் மாதம் 29ஆம் தேதி நிகழாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். வரும் 29ஆம் தேதி, திருநள்ளாறு கோவிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும். 2026 ஆம் ஆண்டு தான் சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. சனிப்பெயர்ச்சி நடைபெறும் தேதி பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

சனிப்பெயர்ச்சி பலன்கள் 

ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி உள்ளிட்டவை வாழ்க்கையில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட காரணமாக உள்ள நிலையில், சனிப்பெயர்ச்சி பலன்கள் குறித்து, ஜோதிடர்கள் பலர் ராசி மற்றும் நட்சத்திரங்களுக்கு ஏற்ற பலன்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம், இன்று அறிக்கை வெளியிட்டு சனி பெயர்ச்சி இல்லை என கூறியுள்ளது.

திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

கோடை விடுமுறை காலம் என்பதால் திருநள்ளாறு, சனிபகவான் கோவிலுக்கு வருபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் கூட்ட நெரிசல் காரணமாக அவதிக்குள்ளாவதை தடுக்கவும், சுவாமி தரிசனத்தை சிறப்பாக செய்யவும் கோயில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் அங்குள்ள நள தீர்த்தத்தில், புனித நீராடவும் ஏற்பாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ராகு கேது பெயர்ச்சி 2025... இந்த 5 ராசிகளுக்கு அற்புதமான விடியல் காத்திருக்கு

மேலும் படிக்க | வெள்ளி பாதத்தில் நுழையும் சனி பகவான்... இந்த 3 ராசிகளின் எல்லா பிரச்னையும் தீரும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News