Tirumala Tirupati Darshan Ticket: ஆந்திரா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில். உலக பணக்கார கடவுள் என அழைக்கப்படும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, தொடர் விடுமுறை நாட்கள், விசேஷ தினங்களில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் கால் கடுக்க நின்று வழிபட்டு வருகின்றனர்.
தரிசன டிக்கெட் நாளை வெளியீடு
எப்போது பார்த்தாலும், திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதுவும் இன்னும் ஒரு மாதத்தல் மார்கழி மாதம் பிறக்கப்போகிறது. இதனால், வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாளைக்கு 60,000 பக்தர்கள் வரை தேவஸ்தானம் தரிசனம் செய்ய அனுமதிக்கிறது. பக்தர்களுள் ரூ.300 தரிசனம் டிக்கெட், விஐபி டிக்கெட் போன்றவை மூலம் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.
பெரும்பாலும், ரூ.300 தரிசனம் டிக்கெட்டுகளை மூலமே பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கான டிக்கெட்டுகளையும் திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே, வைகுண்ட ஏகாதசி டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. இந்த நிலையில், தற்போது 2026 பிப்ரவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகளை நாளை (நவம்பர் 17) ஆன்லைனில் வெளியாக உள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரிசனம், சேவை மற்றும் தங்குமிட ஒதுக்கீடுகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டுகளை நாளை வெளியீடுகிறது. அதன்படி, ஆர்ஜித சேவைகளான சுப்ர பாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை, கல்யாணோத்சவம், ஊஞ்சல் சேவா, சஹஸ்ர தீபாலங்கர சேவா போன்ற பிற சேவைகளுக்கான ஆன்லைன் டிக்கெட் நவம்பர் 18ஆம் தேதியான நாளை காலை 10 மணியளவில் தேவஸ்தானம் வெளியிடுகிறது.
எந்தெந்த டிக்கெட்டுகள் எப்போது?
ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை நவம்பர் 20ஆம் தேதி காலை 10 மணி வரை மின்னணு டிப் செய்ய ஆன்லைனில் பதிவு செய்யலாம். நவம்பர் 20 முதல் 22ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் ஆர்ஜித சேவைக்கான கட்டணத்தை செலுத்தியவர்களுக்கு இந்த டிக்கெட்டுகளை வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித் பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை, ஸ்ரீவாரரி சாலகட்ல தெப்போற்சவம் உள்ளிட்ட சேவைகளுக்கான தரிசன டிக்கெட் நவம்பர் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் தேவஸ்தானம் வெளியிடுகிறது.
மேலும், அங்கப்பிரதட்சண டோக்கன்களும் நவம்பர் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகிறது. அதே நாளில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் 11 மணிக்கும், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான டோக்கன்கள் மாலை 3 மணிக்கும் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் நவம்பர் 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள அறைகளுக்கான தங்குமிட ஒதுக்கீடு அன்று பிற்பகல் 3 மணிக்கு கிடைக்கும். மேற்கண்ட டிக்கெட்டுகள் அனைத்தையும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மாதம் ரூ.21,000 சம்பளம்! பெண்களுக்கு நல்ல வாய்ப்பு.. அரசு வேலைக்கு அப்ளை பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









