இன்று மார்ச் 05 வியாழக்கிழமை: இன்றைய ராசிபலன்.. யார் யாருக்கு எப்படி?

Today Horoscope Match 05 Thursday: இன்று (மார்ச் 05) மாசி மாதம் 21 வியாழக்கிழமை, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்கள் குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம். 

Written by - R Balaji | Last Updated : Mar 5, 2026, 06:16 AM IST
  • இன்று மார்ச் 05 வியாழக்கிழமை ராசிபலன்
  • மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்கள் இங்கே
இன்று மார்ச் 05 வியாழக்கிழமை: இன்றைய ராசிபலன்.. யார் யாருக்கு எப்படி?

மேஷம்

Add Zee News as a Preferred Source

நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் புதுவிதமான சூழல்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களால் பொறுப்புகள் குறையும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. உலகியல் நடவடிக்கை மூலம் சில மாற்றம் மனதளவில் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்

அஸ்வினி : பிரார்த்தனைகள் நிறைவேறும். 
பரணி : பிரச்சனைகள் குறையும். 
கிருத்திகை : மாற்றம் ஏற்படும். 

ரிஷபம்

தன வரவுகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உடன் இருப்பவர்களால் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். நண்பர்கள் வழியில் சில உதவிகள் கிடைக்கும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தடங்கல் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
ரோகிணி : பயணங்கள் உண்டாகும். 
மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.

மிதுனம்

பொருளாதார நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபார பணிகளில் இருந்த மந்தத்தன்மை விலகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை :  மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும்.
திருவாதிரை : மாற்றம் உண்டாகும்.
புனர்பூசம் :  சிந்தித்து செயல்படவும்.

கடகம்

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். செயல்களில் திருப்தியான சூழல் அமையும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் அதிகரிக்கும். தகவல் தொடர்பு துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.  விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

புனர்பூசம் : ஆதரவான நாள்.
பூசம் : முன்னேற்றமான நாள்.
ஆயில்யம் : பிரச்சனைகள் குறையும். 

சிம்மம்

குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்

மகம் : மாற்றம் பிறக்கும்.
பூரம் : வாய்ப்புகள் அமையும். 
உத்திரம் : கலகலப்பான நாள்.

கன்னி

உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். தவறிய சில வாய்ப்புகளால் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் பொறுமை வேண்டும். மனதில் புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : அனுசரித்து செல்லவும். 
அஸ்தம் : சஞ்சலங்கள் நீங்கும். 
சித்திரை : புதுமையான நாள்.

துலாம்

நண்பர்களிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். இறை பணிகளில் ஆர்வம் ஏற்படும். உணவுகளில் சற்று கவனம் வேண்டும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். செலவுகளால் சில நெருக்கடியான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் 

சித்திரை :  விவேகத்துடன் செயல்படவும்.
சுவாதி : பிரச்சனைகள் குறையும்.
விசாகம் : பேச்சுகளில் கவனம்.

விருச்சிகம்

பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனை விற்பனையில் லாபம் மேம்படும். உத்தியோகம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

விசாகம் : செல்வாக்கு அதிகரிக்கும். 
அனுஷம் :  இன்னல்கள் குறையும்.
கேட்டை : அனுபவம் ஏற்படும். 

தனுசு

உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வியாபார பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். குழந்தைகள் வழியாக மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். விளையாட்டு விஷயத்தில் கவனத்துடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை :  வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : அனுசரித்து செல்லவும்.
பூராடம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திராடம் : விழிப்புணர்வு வேண்டும்.

மகரம்

ஆன்மீக செயல்பாடுகளில் தெளிவுகள் அதிகரிக்கும். ஆராய்ச்சி செயல்களில் கவனத்துடன் இருக்கவும். சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

உத்திராடம் : தெளிவுகள் அதிகரிக்கும். 
திருவோணம் : முன்னேற்றமான நாள்.
அவிட்டம் :  ஒத்துழைப்புகள் ஏற்படும். 

கும்பம்

சிந்தனை போக்கில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். உயர் கல்வியில் சிறு குழப்பம் தோன்றி மறையும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.
சதயம் : ஆர்வமின்மை உண்டாகும்.
பூரட்டாதி :  புரிதல்கள் அதிகரிக்கும்.

மீனம்

மனதில் புதிய இலக்குகள் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். வர்த்தகப் பணிகளில் லாபம் உண்டாகும். கடன் சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை நிறம்

பூரட்டாதி : இலக்குகள் பிறக்கும்.
உத்திரட்டாதி : லாபம் உண்டாகும். 
ரேவதி : கனவுகள் நிறைவேறும். 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க: சுக்ராதித்ய ராஜயோகம்.. 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! வருமானம் அதிகரிக்கும்

மேலும் படிக்க: சூரியன் - புதன் சேர்க்கையால் 4 ராசிக்காரர்களுக்கு பண மழை பெய்யும், வங்கி இருப்பு இரட்டிப்பாகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

About the Author

Trending News