இன்றைய ராசிபலன்.. இந்த 2 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டும்!

Today Rasi Palan March 06 Friday: இன்று மார்ச் 06 வெள்ளிக்கிழமை மாசி 22, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்ரைய பலன்கள் குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.   

Written by - R Balaji | Last Updated : Mar 6, 2026, 06:13 AM IST
  • இன்று மார்ச் 06 வெள்ளிக்கிழமை ராசி பலன்
  • மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள்
  • யார் யாருக்கு அதிர்ஷ்டம்
இன்றைய ராசிபலன்.. இந்த 2 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டும்!

Today Rasi Palan (March 06) 

Add Zee News as a Preferred Source

மேஷம்

மனதில் இருந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவும் புத்துணர்ச்சி பிறக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

அஸ்வினி : புத்துணர்ச்சி பிறக்கும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை :  திறமைகள் வெளிப்படும்.

ரிஷபம்

மனதில் இருந்த கவலைகள் குறையும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் துணையாக இருப்பார்கள். உடல் ஆரோக்கிய இன்னல்கள் விலகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். இடமாற்ற முயற்சி கைகூடும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

கிருத்திகை : கவலைகள் குறையும்.
ரோகிணி : இன்னல்கள் விலகும்.
மிருகசீரிஷம் : முயற்சி கைகூடும்.

மிதுனம்

உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்
திருவாதிரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
புனர்பூசம் :  பொறுப்புகள் கிடைக்கும். 

கடகம்

விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழல் உண்டாகும். அடிப்படை கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

புனர்பூசம் : வரவுகள் உண்டாகும்
பூசம் : வாய்ப்புகள் அமையும்.
ஆயில்யம் : முடிவுகள் கிடைக்கும். 

சிம்மம்

உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகளால் மேன்மை ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் விலகும். வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்து செயல்படவும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். திடீர் பயணங்களால் மாற்றங்கள் ஏற்படும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

மகம் : பொறுப்புகள் கிடைக்கும்.
பூரம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திரம் : மாற்றங்கள் ஏற்படும். 

கன்னி

தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். வர்த்தக பணிகளில் முதலீடுகளை குறைத்து கொள்ளவும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உடன் இருப்பவர் பற்றிய புரிதல் அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். சாதனை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : முதலீடுகளில் கவனம்.
அஸ்தம் : புரிதல் அதிகரிக்கும். 
சித்திரை : முடிவுகள் பிறக்கும்.

துலாம்

மார்ச்  6, 2026சம வயதினர் மூலம் மாற்றமான தருணங்கள் உருவாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வியாபார நிமித்தமான முதலீடுகள் மேம்படும். கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து செல்லவும். எதிர்பாராத திடீர் பயணங்கள் மூலம் நெருக்கடிகள் தோன்றி மறையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

சித்திரை : மாற்றமான நாள்.
சுவாதி : அனுசரித்து செல்லவும். 
விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும். 

விருச்சிகம்

பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபார முயற்சிகளில் சிறுசிறு மாற்றங்கள் உண்டாகும். சமூக பணிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். தோற்றப்பொழிவுகளில் சில மாற்றங்கள் உண்டாகும். காப்பீடு பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் காணப்படும். தந்தைவழி தொழில் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உருவாகும். நற்செயல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

விசாகம் : மேன்மை ஏற்படும்.
அனுஷம் : மாற்றங்கள் உண்டாகும். 
கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு

உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். விலகி இருந்தவர் விரும்பி வருவார்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு கௌரவம் அதிகரிக்கும். மற்றவர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக செயல்படுவீர்கள். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். அலுவலகப் பணிகளில் மறைமுக விமர்சனங்கள் உண்டாகும். சோர்வு விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்

மூலம் : மதிப்புகள் கிடைக்கும்.
பூராடம் : உதவிகளை செய்வீர்கள்.
உத்திராடம் : விமர்சனங்கள் உண்டாகும்.

மகரம்

மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். ஆராய்ச்சி சிந்தனை மனதில் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்களில் இருந்து வந்த இழுபறி குறையும். விவசாய பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். திருப்பணி செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசி கிடைக்கும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : காரியசித்தி உண்டாகும்.
திருவோணம் :  இழுபறி குறையும்.
அவிட்டம் : ஆசி கிடைக்கும். 

கும்பம்

புத்திரர்களால் அலைச்சல்கள் ஏற்படும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். பணியாட்கள் மூலம் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். தூர தேச பயண செயல்களில் விவேகம் வேண்டும். உயர்நிலை கல்வியில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். இணைய முதலீடுகளில் பொறுமை வேண்டும். செயல்படும் விதத்தில் மாற்றம் காணப்படும். சாந்தம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

அவிட்டம் : சிந்தனைகளில் கவனம்.
சதயம் : விவேகம் வேண்டும். 
பூரட்டாதி :  பொறுமை வேண்டும்.

மீனம்

சமூகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சகோதரர்கள் வழியில் ஒற்றுமை பிறக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சுப காரிய எண்ணங்கள் கைகூடும். பணி நிமித்தமான முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்

பூரட்டாதி : ஒற்றுமை பிறக்கும். 
உத்திரட்டாதி :  முன்னேற்றம் ஏற்படும்.
ரேவதி : எண்ணங்கள் ஈடேறும். 

மேலும் படிக்க: சூரியன் - புதன் சேர்க்கையால் 4 ராசிக்காரர்களுக்கு பண மழை பெய்யும், வங்கி இருப்பு இரட்டிப்பாகும்

மேலும் படிக்க: சனி - சுக்கிரன் சேர்க்கை.. 3 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்! நகை, பணம் சேரும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News