மேஷம்
மக்கள் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருக்கக்கூடிய குழப்பங்கள் குறையும். கால்நடைகள் மூலம் லாபங்கள் மேம்படும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். உண்மையானவர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் அமைதியற்ற சூழ்நிலைகள் காணப்படும். போட்டி நிறைந்த நாள்.
அஸ்வினி : முன்னேற்றமான நாள்.
பரணி : லாபங்கள் மேம்படும்.
கிருத்திகை : புரிதல் ஏற்படும்.
ரிஷபம்
வியாபார பணிகளில் திறமைகள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். நீண்ட நாள் கவலைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். செல்வ சேர்க்கை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடலில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி உருவாகும். அமைதி நிறைந்த நாள்.
கிருத்திகை : திறமைகள் மேம்படும்.
ரோகிணி : லாபம் மேம்படும்.
மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள்.
மிதுனம்
சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் பொறுமையை கையாளவும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். உடற்பயிற்சி சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். செயல்பாடுகளில் புதிய உற்சாகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் ஈடுபடுவீர்கள். களிப்பு நிறைந்த நாள்.
மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
திருவாதிரை : உதவிகள் சாதகமாகும்.
புனர்பூசம் : உற்சாகமான நாள்.
கடகம்
உடன் இருப்பவர்கள் மூலம் மாறுபட்ட அனுபவங்கள் கிடைக்கும். வியாபார ரீதியான பிரமுகர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகள் மூலம் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். புதிய விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
புனர்பூசம் : அனுபவங்கள் கிடைக்கும்.
பூசம் : சுறுசுறுப்பான நாள்.
ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.
சிம்மம்
செயல்பாடுகளை சோம்பேறித் தனத்தின் மூலம் கால தாமதங்கள் உண்டாகும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். பயணத்தால் அலைச்சலும் அனுபவமும் கிடைக்கும். உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்துச் செயல்படுதல் நல்லது. பொறுமை வேண்டிய நாள்.
மகம் : தாமதங்கள் உண்டாகும்.
பூரம் : மாற்றங்கள் ஏற்படும்.
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
கன்னி
நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சிக்கலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கலகலப்பான பேச்சுக்கள் மூலம் பலரின் அறிமுகங்கள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.
உத்திரம் : அனுகூலம் உண்டாகும்.
அஸ்தம் : கவனம் வேண்டும்.
சித்திரை : அறிமுகங்கள் கிடைக்கும்.
துலாம்
எதிர்பாராத தனவரவுகள் மூலம் பொருள் சேர்க்கை உண்டாகும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நேசம் மேம்படும் நாள்.
சித்திரை : வேறுபாடுகள் குறையும்.
சுவாதி : திறமைகள் வெளிப்படும்.
விசாகம் : முன்னேற்றமான நாள்.
விருச்சிகம்
கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உருவாகும். கணவன் மனைவிக்கிடையே புரிதலும் ஒற்றுமையும் உருவாகும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். பொழுது போக்கு செயல்களில் சிந்தித்து செயல்படவும். தன வரவுகளில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். பணிவு வேண்டிய நாள்.
விசாகம் : புரிதல் உண்டாகும்.
அனுஷம் : சிந்தித்து செயல்படவும்.
கேட்டை : ஒத்துழைப்பான நாள்.
தனுசு
விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தடையாக இருந்து வந்த சில செயல்களை செய்து முடிப்பீர்கள். உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் மனதில் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.
மூலம் : முடிவுகள் கிடைக்கும்.
பூராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
உத்திராடம் : புதுமையான நாள்.
மகரம்
மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதுவிதமான தெளிவுகள் பிறக்கும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். சோர்வு மறையும் நாள்.
உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.
திருவோணம் : நெருக்கம் அதிகரிக்கும்.
அவிட்டம் : ஆதாயகரமான நாள்.
கும்பம்
வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். தனவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறைந்து காணப்படும். பக்தி நிறைந்த நாள்.
அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.
சதயம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.
மீனம்
தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். ஜவுளி பணிகளில் அனுகூலமான சூழ்நிலைகள் உருவாகும். வியாபார பணிகளில் சிறு மாறுதல்கள் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். புதுவிதவிதமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.
பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க: சனி பெயர்ச்சி பலன்கள்: அடுத்த 2.5 ஆண்டுகள் இந்த 3 ராசிகளுக்கு ராஜயோக வாழ்க்கைதான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









