இந்த ஜூன் 2025 ஆம் ஆண்டின் இறுதி வாரத்தில் சந்திரன், குரு, சூரியன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் தங்கள் இடத்தை மாற்றி தொடர்ந்து மூன்று ஆதித்ய யோகங்களை உருவாக்கி உள்ளது. சூரியனுடன் புதன் இணைந்து மிதுன ராசியில் ‘புத ஆதித்ய யோகம்’ உண்டாக்கி வரும் ஜூன் 22 வரை நீடிக்கிறது. அதேநேரம், குருவுடன் சூரியன் சேர்ந்து, மிதுன ராசியில் ‘குரு ஆதித்ய யோகத்தை’ உண்டாக்குகிறது. வரும் ஜூன் 24 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சியாகும் சந்திரன், சூரியனுடன் இணைந்து ‘ஷஷி ஆதித்ய யோகத்தை’ உண்டாக்குகிறார்.
இந்த ஒரே வாரத்தில் அடுத்தடுத்து மூன்று ஆதித்ய (த்ரீ ஆதித்ய) யோகங்கள் உண்டாக்கி 5 ராசிக்காரர்களுக்கு மகத்தான பலனைத் தரப் போகிறது. குறிப்பாக இந்த ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, தொழில் வளர்ச்சி உண்டாகும். இந்நிலையில் சுப பலன் பெறப் போகும் அந்த ஐந்து ராசிக்காரர்கள் எவை என்பதை தெரிந்துக்கொள்வோம்.
மிதுனம் (Gemini Zodiac Sign): மிதுன ராசிக்காரர்களுக்கு த்ரீ ஆதித்ய யோகம் பல நன்மைகளைத் தரும். தொழில் மற்றும் வணிகத்தில் நன்மைகள் ஏற்படலாம். இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வசதிகள் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்களின் சமூக செல்வாக்கும், கௌரவமும் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் தொடங்கப்பட்ட வேலைகள் முடிவடையும் வாய்ப்புள்ளது. பொறுமையாக இருப்பது நன்மை தரும். இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள்.
கன்னி (Virgo Zodiac Sign): கன்னி ராசிக்காரர்களுக்கு த்ரீ ஆதித்ய யோகம் காரணமாக நல்ல பலன்கள் கிடைக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். அரசு வேலைகளில் சிறப்பான வெற்றி கிடைக்கும். அரசு ஒப்பந்தங்களுக்கான முயற்சிகள் வெற்றியடையக்கூடும். நிதி நிலைமை மேம்படும். அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபடுபவர்களின் மரியாதை அதிகரிக்கும்.
தனுசு (Sagittarius Zodiac Sign): தனுசு ராசிக்காரர்களுக்கு த்ரீ ஆதித்ய யோகம் பல துறைகளில் நன்மை பயக்கும். தொழில் முதல் குடும்பம் வரை அனைத்திலும் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகள் வரலாம். புதிய வேலையைத் தொடங்க இது ஒரு நல்ல நேரம்.
கும்பம் (Aquarius Zodiac Sign): கும்ப ராசிக்காரர்களுக்கு த்ரீ ஆதித்ய யோகம் நன்மைகளை தரும். படைப்பு மற்றும் அறிவுசார் வேலைகளைச் செய்வதன் மூலம் லாபம் ஈட்ட முடியும். மூத்த அதிகாரிகளிடமிருந்து பாராட்டு மற்றும் ஆதரவைப் பெறுவார்கள். முதலீடுகள் மூலம் மிகப்பெரிய நன்மைகளைப் பெறலாம், மாணவர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும். மன அமைதியைப் பெறுவீர்கள்.
மீனம் (Pisces Zodiac Sign): மீன ராசிக்காரர்களுக்கு த்ரீ ஆதித்ய யோகம் நன்மை பயக்கும். நேரம் சாதகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்கலாம். நெருங்கிய நண்பர்களிடமிருந்து முழு உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ