)
Rishabam Aavani Matha Rasi Palan 2025: ரிஷப ராசியை பொறுத்தமட்டிலும் இந்த ஆவணி மாதம் கொஞ்சம் சூப்பரான மாதம் அப்படின்னு சொல்லலாம். ஆனால் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டிய மாதமும் கூட என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஆவணி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும். என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும். ஆவணி மாத ரிஷப பலன்களை குறித்து பார்ப்போம்.
இந்த மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் தான். இதுவரைக்கும் பட்ட துன்பங்கள், துயரங்கள், கஷ்டங்கள் என அனைத்தும் விலக போகுது. உங்களுக்கு திசாபுத்தி மட்டும் சிறப்பானதாக இருந்ததால், அருமையான அதிஷ்டங்கள் மற்றும் வரவே முடியாது, கொடுக்கவே மாட்டார்கள் என இருந்த அனைத்தும் உங்களை வந்து சேரும்.
வருமானம் பெருகும், தொழில் வளம் சிறக்கும், வண்டி வாகனங்கள் வாங்குவது, இருக்கும் வாகனங்களை அழகுபடுத்துவது, வீட்டை அழகுபடுத்துவது என பல செலவுகள் செய்வதற்கு உண்டான வழிவகைகள் அற்புதமாக உங்களுக்கு கிடைக்கும்.
அதேபோல ஆரோக்கியத்துக்காக செலவு செய்ய வேண்டியதும் உண்டு. தாயார் வகையில் திருப்தியின்மை, அதாவது நீங்கள் என்னதான் செய்தாலும், உங்கள் தாயாரை திருப்தி படுத்த முடியாது. தாயாருக்கு மருத்துவ செலவு உண்டு. அதேபோல உங்களுடைய பிள்ளைகள் வகையில் நிம்மதி மிகுந்ததாகவே இருக்கும். பெரிய அளவு பாதிப்புகள் இல்லை.
குலதெய்வ அனுகூலங்கள் சிறப்பாக இருக்கும். தந்தையார் முறைத்துக் கொள்வார். முறைத்து கொண்டே அற்புதமான தனவரவுகளை, பணவரவுகளை அள்ளி வளங்குவார். தொழில் வளம் சிறைக்கும், வியாபாரம் சிறப்பாகும்.
கட்டிய மனைவி எதிராக பேசினாலும் கூட அவர்கள் செய்வது உங்களுக்கு முழு அனுகூலத்தை கொடுக்கும். எதிராளிகள் உங்களுக்கு அனுகூலமான பலன்களைதான் வழங்குவார்களே தவிர, அவர்களே நினைத்தாலும் உங்களுக்கு தீங்கு செய்ய முடியாத நிலை இந்த ஆவணி மாதத்திலே சிறப்பாக இருக்கின்றது.
உங்களுக்கு நீங்களே ஏதாவது தீமை செய்து கொண்டால் தான் உண்டு, மற்றபடி வேறு யாரும் உங்களுக்கு எந்த விதத்திலயும் கெடுதல் செய்ய முடியாது.
நீங்களும் தீங்கு தீங்கு செய்வதற்கு உண்டான வழிவகைகளை தேட மாட்டீர்கள். அற்புதமான மாதமாக இந்த மாதம் அமைகிறது.
மகாலட்சுமி கடாட்சம் சிறப்பாக இருக்கிறது. மாதத்தின் ஆரம்ப நாளில் மகாவிஷ்ணு கோயிலுக்குச் சென்று தாயாரை வழிபட்டு தாயாரின் சன்னதிக்கு சென்று, "இந்த மாதத்தில் நல்ல விதமாக தனவரவு, பணவரவு கிடைக்க வேண்டும், இழந்ததை பேரம் பெற வேண்டும் என சொல்லி வேண்டிக்கொண்டால் அது நடக்க வாய்பிருக்கிறது.
உத்தியோகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது மாதிரியான ஒரு நல்ல காலகட்டம். பணி இட மாறுதல்கள் கிடைக்கும். ஒரு வேலை தவிர்த்து இன்னொரு வேலையில் சேர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீங்க தாராளமாக வேறு வேலைக்கு கூட முயற்சிக்கலாம்.
இந்த மாதம் முழுவதுமே "மணக்க மணக்க மல்லிகை மணப்பது போல்" உங்கள் வாழ்வு மணக்கும். எல்லா வகையிலும் நன்மை தரக்கூடிய மாதம் தான் இந்த ஆவணி மாதம்.
ஆவணி மாதத்தில் உங்களுக்கு பல நன்மைகள் நடக்க போவதால், அந்த நன்மைகள் அடுத்த காலகட்டத்துக்கு பயன்படுகிற மாதிரி நன்மைகளை நீங்களும் செய்து வந்தால், சோதனை காலத்தில் கூட நீங்கள் இன்று செய்கிற நன்மைகள் மூலம் பணம் , பொருளாதாரம், கையிருப்பு என அடுத்த காலங்களில் உதவும். உங்களுடைய முகத்தில் மகாலட்சுமி கடாட்சம் சிறப்பாக இருக்கிறது என்பதால், அந்த விதத்தில் இந்த மாதம் சிறப்பாக அமையும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ