கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரிய பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்லும் போது வைகாசி மாதம் பிறக்கிறது. இதனால் வைகாசி மாதம் ரிஷப மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியன் மே மாதம் 15 ஆம் தேதி, ரிஷப ராசியில் பெயர்ச்சியாகி உச்சம் பெறுகிறார். இந்நிலையில், மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்கு சூரிய பெயர்ச்சியின் அடிப்படையில், வைகாசி மாதம் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
மேஷ ராசிக்கான வைகாசி மாத பலன்கள்
பொருள் இன்பங்களை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நிதி ஆதாரங்களை அதிகரிக்க புதிய வழிகளை தேடுவதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். முதலீடுகள் லாபம் கொடுக்கும்.
ரிஷப ராசிக்கான வைகாசி மாத பலன்கள்
வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் வந்து சேரும். மன தெளிவுடன் விஷயங்களை அணுகி உங்களுக்கு சாதகமான பலன்களை பெறுவீர்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
மிதுன ராசிக்கான வைகாசி மாத பலன்கள்
அன்றாட வாழ்க்கை பணிகளில் இருந்து விலகி, உங்களுக்கென நேரம் செலவழிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். அதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். நிதிநிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத சில நிகழ்வுகள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
கடக ராசிக்கான வைகாசி மாத பலன்கள்
மனதில் உற்சாகம் இருக்கும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவதில் வெற்றி பெறுவீர்கள். ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் நேரத்தை செலவழித்து சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள். அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.
சிம்ம ராசிக்கான வைகாசி மாத பலன்கள்
வாழ்க்கையில் வளர்ச்சி மற்றும் புகழை பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை மாற்றம் சாதகமாக இருக்கும். வேலையில் தொழிலில், கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
கன்னி ராசிக்கான வைகாசி மாத பலன்கள்
மனதில் தெளிவு இருக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகம் இருக்கும். வருமானம் அதிகரிக்கும் என்றாலும், செலவுகளும் அதனை மிஞ்சும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
துலாம் ராசிக்கான வைகாசி மாத பலன்கள்
குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்க முயற்சி எடுக்க வேண்டும். முக்கிய முடிவுகளை குடும்பத்தினருடன் ஆலோசித்து எடுப்பது பிரச்சினைகளை தவிர்க்க உதவும். சோம்பலை தவிர்ப்பதால், கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
விருச்சிக ராசிக்கான வைகாசி மாத பலன்கள்
வீடு மனை வாங்க முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். காரிய தடைகள் நீங்கும். எனினும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்பதால், எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வெளி உணவுகளை தவிர்ப்பதால் உடல்நலம் கெடாமல் இருக்கும்.
தனுசு ராசிக்கான வைகாசி மாத பலன்கள்
வேலைகளை தடையில்லாமல் செய்ய உடல் நல ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கல்வி தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எனினும் உங்கள் முயற்சியால் கடன் வாங்காமல் தவிர்க்கலாம்.
மகர ராசிக்கான வைகாசி மாத பலன்கள்
வித்தியாசமாக முயற்சி செய்ய மனதில் ஆர்வம் இருக்கும். வேலையில் உங்கள் திறன் பாராட்டப்படும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நீடித்திருக்கும்.
கும்ப ராசிக்கான வைகாசி மாத பலன்கள்
அசையா சொத்து வாங்குவதில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தினர் உங்கள் முடிவிற்கு ஆதரவாக இருப்பார்கள். எனினும் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால் சிக்கல் ஏற்படலாம்.
மீன ராசிக்கான வைகாசி மாத பலன்கள்
பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. இதனால் ஆதாயமும் கிடைக்கும். கொஞ்சம் செலவுகளை கட்டுப்படுத்துவதால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பேச்சுத் திறன் சிறப்பாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | 4 கிரகங்களின் வலுவான சஞ்சாரம்: பொக்கிஷ அதிர்ஷ்டம் கிடைக்கப்போகும் 3 ராசிகள்!
மேலும் படிக்க | ஷடாஷ்டக யோகம்... செவ்வாய் - ராகுவின் நிலையால் 4 ராசிகளுக்கு சிக்கல்கள் காத்திருக்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









