முருகப்பெருமான் அவதரித்த நாளான வைகாசி விசாகநாளில், அவனை நினைத்து பூஜித்து விரதம் இருந்து வழிபடுவோருக்கு, துன்பங்கள் அனைத்தும் நீங்கி, இன்னலற்ற வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம். அதோடு முருகன் செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி என்பதால், செவ்வாய் தோஷம் உள்ளிட்ட பல தோஷங்களை நீக்க வைகாசி விசாக விரதம் மிகவும் உதவும் என்கின்றன சாஸ்திரங்கள்.
வாழ்க்கையில் இன்னல்கள் நீங்கி இன்பம் பிறக்க உதவும் முருக வழிபாடு
திருமண யோகம், குழந்தை வரம் ஆகியவற்றைப் பெற வைகாசி விசாக நன்னாளில் முருகனை நினைத்து விரதம் இருந்து வழிபடுவது சிறந்தது என்கின்றன புராணங்கள். வைகாசி விசாகத் திருவிழா, சுமார் ஒரு வார காலங்களுக்கு முருகக் கோவில்களில் கொண்டாடப்படுகிறது. முருகனின் அருளை பரிபூரணமாக பெறவும், வாழ்க்கையில் இன்னல்கள் நீங்கி இன்பம் பிறக்கவும் முருகனுக்கு பால்குடம் காவடி எடுத்து வழிபாடும் செய்யும் வழக்கம் பக்தர்கள் இடையே காணப்படுகிறது. அதோடு அறுபடை வீடுகளுக்கு சென்று முருகனை தரிசித்தால் வாழ்க்கையில் எல்லா வளங்களையும் பெறலாம்.
வைகாசி விசாக நன்னாளில் செய்யப்படும் தானங்கள் மற்றும் பரிகாரங்கள்
முருகனுக்கு உகந்த வைகாசி விசாக நாளன்று, மோர் பானகம் தயிர் சாதம் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் வழங்குவதால், திருமண யோகம் கைகூடும், புத்திர பாக்கியம் உண்டாகும். செவ்வாய் தோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நீங்கும். ஏழைகளுக்கு அன்னதானம் அளிப்பதும், தமிழ் கடவுள் முருகனை விரதம் இருந்து வணங்குவதும்,இன்னல்கள் நீங்க உதவும் சிறந்த பரிகாரங்களாக (Astro Remedies) இருக்கும்
வைகாசி விசாகம் விரதம் மற்றும் பூஜை செய்யும் முறை
வைகாசி விசாக நன்னாளில், அதிகாலையில் எழுந்து குளித்து பூஜை அறையில், முருகன் படத்திற்கு மாலை அணிவித்து சந்தனம் குங்குமம் எட்டு, விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு. முருகனுக்கு உகந்த பஞ்சாமிர்தத்தை, நிவேதனம் செய்து, அனைவருக்கும் விநியோகிக்கலாம். ஆறெழுத்து மந்திரமான ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை ஜெபிப்பதும், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் பலன் தரும். அன்று முழுவதும் பால் பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். இதனால் முருகனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
வைகாசி விசாக முருக வழிபாடும் பலன்களும்
வைகாசி விசாக நன்னாளில் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வதால் ஆயுள் கூடும் என்கின்றனர் சாஸ்திரங்கள். கடன் தொல்லை பிரச்சனை இல்லை ஆனால் அவதிப்படுபவர்கள், பச்சரிசி மாவில் அபிஷேகம் செய்தால் தொல்லை நீங்கி நிம்மதியை அடையலாம். காரிய சித்தி பெற நினைப்பவர்கள், சிவ குமரனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வது பலன் கொடுக்கும். பன்னீர் அபிஷேகம் செய்து வழிபடுபவர்களுக்கு பெயரும் புகழும் வந்து சேரும். சந்தன அபிஷேகம் செய்பவர்களுக்கு, சரும பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் என்கின்றன சாஸ்திரங்கள். நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால், நன்மைகள் பல உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | கடகத்தில் உருவாகும் கஜகேசரி யோகம்... ஐப்பசி முதல் 3 ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









