செல்வத்தை வேண்டாம் என்று சொல்பவர்கள் யாராவது இருக்க முடியுமா என்ன... தங்களிடம் உள்ள பர்ஸ், ஹாண்ட்பேக், வாலெட், பணப்பெட்டி ஆகியவற்றில், பணம் நிறைந்திருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். இன்றைய காலகட்டத்தில், பணத்தின் இடத்தை கிரெடிட் கார்டுகள் டெபிட் கார்டுகள் பிடித்துக் கொண்டாலும், அவையும் பணத்திற்கான மாற்றுப் பொருளாகவே கருதப்படுகின்றன.
செல்வம் குறையாமல் இருக்க உங்கள் பர்ஸில் வைக்க வேண்டியவை
சில பொருட்களை உங்கள் பர்ஸில் வைத்திருப்பதால், உங்களிடம் பணத்திற்கு குறைவே இருக்காது என்றும், பணத் தட்டுப்பாடு என்பதே இருக்காது என்றும் வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனால் அன்னை லட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும், கூறப்படுகிறது.
1. உங்கள் என்பதே இருக்காது லட்சுமி குபேர எந்திரத்தை வைத்துக் கொள்வதால் செல்வம் குறையாமல் இருக்கும். இதனை மஞ்சள் துணியில் சுற்றி வைத்திருப்பது நிதி நிலையை பலப்படுத்தும் என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள்.
2. பர்ஸில் அட்சதயை வைத்திருப்பதால் செல்வம் பெருகும் என்று கூறப்படுகிறது. அரிசி செழிப்பின் சின்னமாக கருதப்படும் நிலையில், மஹாவிஷ்ணு மற்றும் அன்னை லட்சுமியின் பாதத்தில் வைக்கப்பட்ட அட்சட்தையை, தனது பர்ஸில் வைத்துக் கொள்வதால் செல்வம் பெருகும்.
3. கோமதி சக்கரம் அன்னை மகாலட்சுமிக்கு மிகவும் பிரியமானது. இதனை உங்கள் பர்ஸில் வைத்துக் கொள்வதால் கடன் தொல்லையிலிருந்து விடுதலை பெறலாம். மஞ்சள் குங்குமம் இட்ட கோமதி சக்கரத்தை, உங்கள் பஸ்ஸை கட்டாயம் வைத்துக் கொள்ளவும். , 'ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் கம்லே கம்லாலயே ப்ரஸித் ப்ரஸித், ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மஹாலக்ஷ்மி நமஹ' என்ற லக்ஷ்மி மந்திரத்தை உச்சரித்து, கோமதி சக்கரத்தை பர்ஸில் வைக்கவும்.
4. வெள்ளி நாணயம், செழிப்பை தரும் நாணயமாக கருதப்படுகிறது. பர்ஸில் வெள்ளி நாணயம் வைத்திருப்பது செல்வ செழிப்பை அதிகரிக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். லட்சுமி தேவியிடம் அர்ப்பணித்த வெள்ளி நாணயத்தை பச்சை பாலில் சிறிது நேரம் வைத்திருந்து, பின்னர் அதனை எடுத்து சுத்தமான துணியால் துடைத்து, மஞ்சள் குங்குமம் எட்டு உங்கள் பர்ஸில் வைத்துக் கொள்ளலாம்
5. தாமரை விதையை பரிசில் வைத்துக் கொண்டால், பணம் தங்கும் என்பது ஐதீகம். இது நிதி வரவை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, மனதிற்கு நிம்மதியும் சந்தோஷமும் அளிக்கும் என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள்.
6. பர்ஸில் சிறிய அளவிலான ஸ்ரீ எந்திரத்தை வைத்திருப்பது செல்வ செழிப்பை கொடுக்கும் என்றும் அதிர்ஷ்டம் குறையாமல் இருக்கும் என்றும் வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்
7. பர்ஸில் அரசு இலையை வைத்திருப்பது, விஷ்ணு பகவான் மற்றும் மகா லட்சுமியின் அருளை ஒரு சேர பெற உதவும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அரச இலையை கங்கை நீரில் சுத்தம் செய்து, அன்னை துடைத்து, உங்கள் பர்ஸில் வைத்துக் கொள்ளலாம்.
பர்ஸில் வைக்க கூடாத சில விஷயங்கள்
பர்ஸில் சில பொருட்களை வைத்திருப்பது, எதிர்மறை ஆற்றலை ஈர்த்து, பண தட்டுப்பாடு, மன உளைச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும் என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள்.
1. பர்ஸில் பில்கள் மற்றும் ரசீதுகள் போன்றவற்றை வைத்திருப்பதால், அவை ராகு வடிவத்தை பெற்று, தேவையற்ற செலவுகள் மற்றும் பண ஆகியவற்றை ஏற்படுத்தும் ஒன்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
2. சிறிய அளவிலான கத்திகள் ஊசிகள் போன்ற கூர்மையான உலோகப் பொருட்களை பர்ஸில் வைத்திருப்பதால், அன்னை மகாலட்சுமி கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் இதனால் வறுமையின் பிடியில் சிக்க கூடும் எனவும் வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
3. பர்ஸில் வைத்திருக்கும் நோட்டுகள், கிழிந்ததாக அழுக்குகள் நிறைந்ததாக இருப்பது, எதிர்மறை ஆற்றலை கொண்டு வந்து சேர்க்கும். அதோடு நோட்டுக்களை அழகாக மடித்து வைத்திருப்பது நேர்மறை ஆற்றலை கொண்டு வரும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | சூரியனில் சனி பெயர்ச்சி.. அதிர்ஷ்டம் பொற்காலம் இந்த 5 ராசிகளுக்கு
மேலும் படிக்க | Astro: ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகளும்... அதிர்ஷ்ட பலன்களை பெறும் ராசிகளும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









