Venus Natchathira Transit 2025: ஜோதிடத்தில், சுக்கிர பகவான் மகிழ்ச்சியின் காரணியாகக் கருதப்படுகிறார். சுக்கிர பகவானின் அருள் இருந்தால் நாம் வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெறலாம். அதே நேரத்தில், ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். தற்போது, சுக்கிர பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இதே ராசியில் தங்கியிருந்து சுக்கிர பகவான் நட்சத்திர பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் இரண்டு ராசிக்காரர்கள் (Lucky Zodiac Signs) பயனடைவார்கள். இந்நிலையில் தற்போது இந்த நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு பெரிய மாற்றத்தை தரப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்-
சுக்கிர பெயர்ச்சி 2025:
ஜோதிடத்தின் படி, அடுத்த மாதம் ஏப்ரல் 01, 2025 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.25 மணிக்கு சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த நட்சத்திர பெயர்ச்சி வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி பூரட்டாதி நட்சத்திரத்தில் நிகழப் போகிறது. ஏப்ரல் 25 வரை சுக்கிரன் பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணிப்பார். சுக்கிர பகவான் செல்வம், சொகுசு, அழகு, கலை, காதல் ஆகியவற்றை அளிக்க வல்லவர். அந்த வகையில், இவரது நட்சத்திர பெயர்ச்சி இந்த விஷயங்களில் சில ராசிகளுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும்.
கும்பம்: சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு (Aquarius Luck 2025) நன்மை உண்டாகும். இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் செய்யும் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம். உங்களின் முதலாளி உங்களை பாராட்டுவார். துணிகள் மற்றும் நகைகளை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் ஆசிரியர் உங்களை அன்புடனும் பாசத்துடனும் கணவித்துக் கொள்வார். தர்ம காரியங்கள் மற்றும் புண்ணிய காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கலாம். பல வழிகளில் பணம் சம்பாதிக்கலாம். கணவம் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். புதிதாக நிலம் அல்லது கட்டிடம் வாங்கலாம்.
மீனம்: சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு (Pisces Luck 2025) சுக்கிர பகவானின் முழுமையாக ஆசிகள் கிடைக்கும். ஏனெனில் இந்த ராசியில், சுக்கிர பகவான் உச்ச ஸ்தானத்தில் பயணித்து வருகிறார். வாழ்க்கையில் சிறப்புப் பலன்களைப் பெறலாம். புதிய முறையிக்க பிடித்தப் படி நீங்கள் நினைத்தப்படி வேலையைத் தொடங்கலாம். விலங்குகளிடம் கவனமாக இருக்க வேண்டும், காயம் ஏற்படலாம். புகழ் அதிகரிக்கும். பண பிரச்சினையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வாழ்வில் சொகுசுகள் கைக்கூடி வரும். குடும்பத்தினருடன் நேரத்தை சிறப்பாக செலவழிக்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | சுக்கிர நட்சத்திர பெயர்ச்சி: பண மழையில் நனையப்போகும் இந்த 4 ராசிகள்!
மேலும் படிக்க | ராகு கேது பெயர்ச்சி 2025... இந்த 5 ராசிகளுக்கு அற்புதமான விடியல் காத்திருக்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ