)
Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கு தனித்துவமான குணாதிசயங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. சுக்கிரன் அன்பு, காதல், ஈர்ப்பு, பேச்சாற்றல், ஆறுதல், பொருட்செல்வம், ஆடம்பரம், செல்வம் மற்றும் அழகு ஆகியவற்றின் கிரகமாகக் கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால், அவர் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்கிறார், அனைவருக்கும் பிடித்தாற்போல் இருக்கிறார். சுக்கிரன் கலை, இசை மற்றும் அழகு ஆகியவற்றை அதிகமாக அளித்து உலக இன்பங்களை அள்ளித் தந்து மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அளிக்கிறார்.
பஞ்சாங்க கணக்கீடுகளின் படி, சுக்கிரன் அக்டோபர் 6 ஆம் தேதி உத்திரம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆவார். அதைத் தொடர்ந்து, அக்டோபர் 9 ஆம் தேதி காலை 11 மணிக்கு, சுக்கிரன் சிம்ம ராசியிலிருந்து வெளியேறி கன்னி ராசியில் பெயர்ச்சி ஆவார். அதன் பிறகு அக்டோபர் 17 ஆம் தேதி, சுக்கிரன் ஹஸ்த நட்சத்திரத்தில் நுழைவார். பின்னர், மாத இறுதியில், அக்டோபர் 28 ஆம் தேதி, சுக்கிரன் ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து சித்திரை நட்சத்திரத்தில் நுழைவார். இந்த வகையில் அக்டோபர் மாதம் சுக்கிரன் 4 முறை தன் நிலையில் மாற்றம் காண்பார்.
சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இந்த அக்டோபர் மாதம் அற்புதமாய் இருக்கவுள்ளது. சுக்கிரன் பெயர்ச்சிகளின் தாக்கத்தால், இவர்கள் பல பொருளாதார நன்மைகளை பெறுவார்கள். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம் (Taurus)
அக்டோபரில் நாங்கு முறை நடக்கவுள்ள சுக்கிரன் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிக நன்மை கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாகும். நிதி நிலை வலுவாக இருக்கும். குடும்பம் மற்றும் காதல் உறவுகள் இனிமையாக மாறும். திருமணமாகாத ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயம் ஆகும். வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இந்த காலம் உறவுகள் மற்றும் தொழில் இரண்டிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
தனுசு (Sagittarius)
தனுசு ராசிக்கு, சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால் உறவுகளுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவு கிடைக்கும். தொழிலதிபர்கள் புதிய கூட்டாண்மைகளால் பயனடையலாம். குடும்பத்திற்குள் சுப நிகழ்வுகளும் நடக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். பல பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் எற்படும்.
கும்பம் (Aquarius)
சுக்கிரன் பெயர்ச்சி கும்ப ராசிக்கு நிதி ஆதாயங்களைத் தரும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இப்போது கிடைக்கும். முதலீடுகள் லாபத்தைத் தரும். கலை போன்ற படைப்புத் துறைகளில் உள்ளவர்கள் சிறப்பான வெற்றியை அனுபவிக்கலாம். கூடுதலாக, வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். அலுவலக பணிகளில் உள்ளவ்ரகளுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இந்த காலத்தில் லாபம் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும்.
வாழ்வில் அனைத்து விதமான செல்வத்தையும், புகழையும் பெற, சுக்கிரனை வணங்கி, ‘ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும் ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்’ என்ற ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்யலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ