Venus Transit In Taurus Horoscope In Tamil: சுக்கிரனின் ராசி மாற்றம் 12 ராசிகளையும் பல விதத்தில் பாதிக்கும். அந்த வகையில் இன்னும் கூடிய விரைவில், சுக்கிரனின் சொந்தமான ரிஷப ராசிக்குள் செல்லப் போகிறார். இந்த பயணத்தால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த பலன்கள் கிடைக்கக்கூடும். ஜோதிடத்தின் படி, சுக்கிரன் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போவதால் மாளவ்ய ராஜயோகம் உருவாகும். மேலும் ரிஷப ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும், அதேபோல் ஒரு சில ராசிக்காரர்களுக்கு கடினமான காலங்களை கொண்டு வரும்.
இந்நிலையில் ஜோதிட பஞ்சாங்கத்தின்படி, சுக்கிரன் அடுத்த மாதம் ஜூன் 29 ஆம் தேதி, 2025 அன்று பிற்பகல் 2:17 மணிக்கு ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி அடைவார். இந்த சுக்கிரனின் பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.
4 ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சியால் மிகவும் சிறப்பு வாய்ந்த பலனைத் தரும்.
மேஷம் (Aries Zodiac Sign): மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் நல்ல பலன்களைத் தரும். இதுவரை உங்களின் வேலை தடைபட்டு இருந்தால் மீண்டும் செயல்பட தொடங்கும். உங்கள் வாழ்க்கையில் பதவி உயர்வு பெறலாம். அதனுடன் பல புதிய பணிகளையும் நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் குடும்பத்துடன் எங்காவது செல்லவும் திட்டமிடலாம். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
ரிஷபம் (Taurus Zodiac Sign): சுக்கிரன் தனது சொந்த ராசியில் பெயர்ச்சி அடைவது மிகவும் நன்மை பயக்கும். சிலர் சிக்கிய பணத்தை திரும்பப் பெறுவார்கள். தொழில் நிலை மேம்படும். காதல் வாழ்க்கையில் திருப்பங்கள் ஏற்படலாம். ஊடகம், சினிமா மற்றும் வங்கித் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பள உயர்வு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
சிம்மம் (Leo Zodiac Sign): வரும் மாதத்தில் சுக்கிரனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். வருமானம் அதிகரிக்கும். வீடு மற்றும் குடும்பத்தில் செழிப்பான சூழ்நிலை இருக்கக்கூடும். தொழில் மற்றும் நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும். உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள், வெளி உணவுகளை உட்கொள்வதைக் கட்டாயம் தவிர்க்கவும். அதே நேரத்தில், வியாபாரம் செய்பவர்கள் லாபகரமான ஒப்பந்தங்களைப் பெறலாம்.
கும்பம் (Aquarius Zodiac Sign): கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் நன்மை பயக்கும். இந்த நேரத்தில் கும்ப ராசிக்காரர்கள் பணம் பிரச்சினையில் இருந்து விடுப்படலாம். உங்கள் குடும்பத்தினரிடமிருந்து முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் மன அழுத்தமின்றி இருப்பீர்கள். வியாபாரிகள் வெளிநாட்டிலிருந்து நல்ல ஒப்பந்தங்களைப் பெறலாம். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகளையும் நீங்கள் பெறலாம்.
சுக்கிர பகவானின் முழுமையான அருளைப் பெறவும் அறிவாற்றல், பேச்சாற்றல் ஆகியவற்றில் சிறந்து விளங்கவும், வாழ்க்கையில் பல வித வெற்றிகளைப் பெறவும் சுக்கிரனை வணங்கலாம். சுக்கிரன் அருள் பெற, ‘ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும் ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்’ என்ற ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்வது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | 4 கிரகங்களின் வலுவான சஞ்சாரம்: பொக்கிஷ அதிர்ஷ்டம் கிடைக்கப்போகும் 3 ராசிகள்!
மேலும் படிக்க | ஷடாஷ்டக யோகம்... செவ்வாய் - ராகுவின் நிலையால் 4 ராசிகளுக்கு சிக்கல்கள் காத்திருக்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ