Sukran Nakshatra Peyarchi: 9 கிரகங்களில் முக்கிய கிரகமாக உள்ளவர் சுக்கிரன், அறிவாற்றல், ஆகர்ஷணம், அழகு, உலக ரீதியான இன்பம், பேச்சாற்றல், செல்வம், திறமை, ஆடம்பரம், காதல், செழிப்பு, கலை, திருமண வாழ்க்கை, குழந்தைகள், வசீகரம் ஆகியவற்றின் காரணி கிரகமாக அவர் உள்ளார். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால், அவர் அனைவருக்கும் பிடித்தவராக, அனைவரும் நேசிக்கும் ஒரு நபராக இருக்கிறார்.
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, சுக்கிரன் செப்டம்பர் 25, 2025 அன்று பூர நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் நடக்கும். இவர்களது ஆற்றல் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம் (Taurus):
சுக்கிரன் ரிஷப ராசியை ஆளும் கிரகம் என்பதால், இதில் சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியின் காரணமாக சுக்கிரன் செல்வாக்கு மிகவும் நேர்மறையாக இருக்கும். உறவுகள் இணக்கமாக மாறும். வணிகம் மற்றும் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். திருமண மற்றும் காதல் உறவுகள் வலுவடையும். செல்வம் மற்றும் செழிப்பை அடைவதற்கான வழிகள் பிறக்கும்.
மிதுனம் (Gemini):
சுக்கிரன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். தகவல் தொடர்பு, ஊடகம், எழுத்து, கலை மற்றும் கல்வி ஆகியவற்றில் ஈடுபடுள்ளவர்கள் சுக்கிரனின் செல்வாக்கால் வெற்றியைக் காண்பார்கள். வெளிநாட்டு பயணம் மற்றும் படிப்புக்கான புதிய வாய்ப்புகள் உருவாகலாம். உறவுகள் இனிமையாகவும் ஆதரவாகவும் மாறும். படைப்பாற்றல் மற்றும் அறிவுசார் திறன்கள் அதிகரிக்கும்.
சிம்மம் (Leo):
பூர நட்சத்திரத்தில் சுக்கிரனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கலை, இசை, திரைப்படம் மற்றும் படைப்புத் துறைகளில் ஈடுபடுபவர்கள் குறிப்பிடத்தக்க நன்மைகளை அனுபவிக்கலாம். காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக மாறும். சமூக கௌரவம் மற்றும் மரியாதையும் அதிகரிக்கும்.
துலாம் (Libra):
சுக்கிரனின் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும், ஏனெனில் இது இந்த ராசியை ஆளும் கிரகம். இந்த காலத்தில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால் கவர்ச்சி மற்றும் ஆளுமை மேம்படும். காதல் உறவுகள் மற்றும் திருமண வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் புதிய தொடர்புகள் மற்றும் வாய்ப்புகள் உருவாகும். தொழில் மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனம் (Pisces):
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். உணர்ச்சிகளில் சமநிலை இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். ஆன்மீகப் பாதையில் முன்னேற வாய்ப்புகள் உருவாகும். இசை, கலை மற்றும் படைப்பாற்றல் தொடர்பான வேலைகளில் உள்ளவர்களுக்கு அதிக நன்மைகள் ஏற்படும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும்.
வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களைப் பெறவும், சுக்கிரன் அருள் பெறவும், ‘ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும் ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்’ என்ற ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்வது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | புரட்டாசி 03 வெள்ளிக்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









