ஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட ராசிகள்.. இவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்!

Published by: Vidya Gopalakrishnan | Jul 27, 2023

ஆகஸ்ட் மாதத்தில், முதலில், சுக்கிரன் ஆகஸ்ட் 7 ஆம் தேதி கடகத்தில் நுழைகிறார். அதன் பிறகு சூரியன் சிம்ம ராசியில் ஆகஸ்ட் 17ஆம் தேதி பிரவேசிக்கிறார். அடுத்த நாளே, செவ்வாய் சிம்ம ராசியில் இருந்து விலகி, கன்னி ராசிக்குள் நுழைவார். ஆகஸ்ட் 24 அன்று, புதன் சிம்மத்தில் வக்ர பெயர்ச்சியாகிறார்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 27, 2023

மேஷம்

எடுத்த வேலை அனைத்திலும் உண்டாகும். உங்கள் காதல் வாழ்க்கையிலும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். நிதி வரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். நண்பர்களின் சந்திப்பால் தடைபட்ட காரியங்கள் முடிவடையும்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 27, 2023

மிதுனம்

அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்படும், உங்கள் திட்டங்கள் முன்னேறும். வாழ்க்கையில் செல்வாக்கு மிக்க நபர்களை சந்திப்பீர்கள், இது எதிர்காலத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.திருமணத்திற்கு நல்ல உறவை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இந்த நேரத்தில் நல்ல வாழ்க்கை துணை கிடைக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 27, 2023

சிம்மம்

வாழ்க்கையில் வெற்றியைப் பெறுவதோடு, நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து புதிய தொழிலில் முதலீடு செய்யலாம். எதிர்காலத்தில் இந்தத் திட்டங்களின் மூலம் நல்ல பணம் சம்பாதிக்கலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 27, 2023

விருச்சிகம்

குடும்பம் மற்றும் நண்பர்களுடனான உங்கள் உறவு சுமூகமாக இருக்கும். வேலையில் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். தொழில் ரீதியாக நீங்கள் விரும்பிய வெற்றியைப் பெறலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 27, 2023

தனுசு

கடந்த காலத்தில் செய்த முதலீடுகள் மற்றும் பண விஷயத்தில் நீங்கள் நன்மை அடைவீர்கள். நிதி வரவு மகிழ்ச்சியை கொடுக்கும். தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்

Published by: Vidya Gopalakrishnan | Jul 27, 2023

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.

Published by: Vidya Gopalakrishnan | Jul 27, 2023

VIEW ALL

Read Next Story