தீபாவளி ராசி பலன்.... தீப ஒளியாய் வாழ்க்கை பிரகாசிக்கும்!

';

மேஷம்

கடினமான செயல்களையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். சகோதரர் வழியில் ஒற்றுமை மேம்படும்.

';

ரிஷபம்

மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும். செய்யும் பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். அரசு காரியங்களால் ஆதாயம் ஏற்படும்.

';

மிதுனம்

பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நெருக்கமானவர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். பணிபுரியும் இடங்களில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வியாபாரப் பணிகளில் மந்தமான சூழல் ஏற்படும்.

';

கடகம்

பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். தந்தைவழி சொத்துக்களில் நிதானத்துடன் செயல்படவும். மனதில் இனம்புரியாத சில தேடல்கள் பிறக்கும். வாசனைத் திரவியங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும்.

';

சிம்மம்

எதிலும் பொறுமையுடன் செயல்பட்டால் ஆதாயம் அதிகரிக்கும். நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். தவறிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். பணியில் ஆதரவான சூழல் ஏற்படும்.

';

கன்னி

தனவரவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர் பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். விருப்பமான உடைகளை வாங்கி மகிழ்வீர்கள்.

';

துலாம்

எதிலும் திருப்தியற்ற சூழல் உண்டாகும். பணியில் மந்தமான சூழல் அமையும். உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். வெளியூர் பணி வாய்ப்புகள் சாதகமாக இருக்கும். வித்தியாசமான கனவுகள் தோன்றி மறையும்.

';

விருச்சிகம்

கடன் சார்ந்தப் பிரச்சனைகள் குறையும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கல்வி நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாகும்.

';

தனுசு

மனதளவில் தெளிவு பிறக்கும். நம்பிக்கையானவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நினைத்த காரியங்கள் கைகூடிவரும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடும்.

';

மகரம்

தனவரவுகள் தாராளமாக இருக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

';

கும்பம்

கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பணிகளில் பொறுமை வேண்டும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

';

மீனம்

உணர்வுப்பூர்வமாகப் பேசுவதைவிடச் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும்.உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story