ஞானத்தின் வடிவாகத் தோன்றிய ஹயக்ரீவர் ஆடி மாத பௌர்ணமி தினத்தில் அவதரித்தவர் என்பதால், இன்றுதான் ஹயக்ரீவ ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது...
குதிரை முகமும், மனித உடலும் கொண்ட நாராயண மூர்த்தியின் ஹயக்ரீவ வடிவம் அஞ்ஞானத்தை அழித்து ஞானத்தை அளிக்கக் கூடியது...
மது மற்றும் கைடபன் என்ற அரக்கர்கள் பிரம்மாவிடமிருந்த வேதங்களை திருடிச் சென்றதால் உலகில் சிருஷ்டி நின்றுபோனது.
வேதங்களை மீட்டுக் கொடுக்குமாறு தேவர்கள் திருமாலிடம் தஞ்சமடைந்தனர். அதற்காக குதிரை முகம் கொண்ட பரிமுகராக அவதாரம் எடுத்தார் விஷ்ணு
குதிரை முக அவதாரம் எடுத்த விஷ்ணு, அசுர சகோதரர்களுடன் போர் புரிந்து அசுரர்களை அழித்து வேதங்களை மீட்டார்
வேதங்களை மீட்டு சிருஷ்டியை மீண்டும் தொடங்கச் செய்த ஹயக்ரீவர், தேவர்களுக்கு ஞானமளிக்கும் மந்திரங்களை கற்றுத் தந்தார்.
ஹயக்ரீவரின் மடியில் லட்சுமிதேவி இருப்பார். லட்சுமி ஹயக்ரீவரை வணங்கினால், செல்வ வளமும், ஞானமும் ஒருங்கே கிடைக்கும்
ஹயக்ரீவர் தோன்றிய ஆவணி மாத பௌர்ணமி நாளான இன்று லட்சுமி ஹயக்ரீவரை வணங்கினால் ஞானம் அதிகரிக்கும்
பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது