விநாயாருக்கு உகந்த நாட்களில் முக்கியமானது சங்கடஹர சதுர்த்தி நாள். இந்த நாளில் கணபதியை மனப்பூர்வமாக வணங்கினால் விக்னங்கள் வேருடன் அறுந்துபோகும்
ஓம் கணேசாய நம, ஓம் கண் கணபதயே நமஹ என்ற மந்திரங்களை தொடர்ந்து சங்கடஹர சதுர்த்தி நாளில் ஜெபித்துக் கொண்டே இருந்தால், அதிலும் 108 முறை சொன்னால் மனதில் அமைதி ஏற்படும்
விநாயகருக்கு உரிய விரதங்களில் முக்கியமானது சங்கடஹர சதுர்த்தி விரதம்
விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் விரதம் இருந்து வழிபடுவது எல்லாப் பலன்களைத் கொடுக்கக்கூடியது.
சதுர்த்தி தினத்தன்று காலையில் நீராடி, ஆலயத்திற்கு சென்று பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் மாலை சாற்றி, அர்ச்சனை செய்வது சுபபலன்களைக் கொடுக்கும்.
மாலை வேளையில் விநாயகருக்கு செய்யும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்வது பாவங்களை வேருடன் அறுக்கும்.
விநாயக சதுர்த்தியன்று விரதம் இருப்பது என்பது, காலை முதல் உண்ணாமல் இருந்து, மாலைவேளையில் வானில் நிலவு தோன்றிய பிறகு உணவு உண்பதைக் குறிக்கும்
தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விரதத்தை கடைபிடித்து வந்தால், வாழ்க்கையில் எல்லா நலன்களையும் பெற்று புகழுடன் வாழலாம்