செவ்வாய் ரிஷபத்தில் பெயர்ச்சியாகி உள்ளார். இதனால் அனைத்து ராசிகளிலும் தாக்கம் ஏற்படும் என்றாலும் மிக அதிக நற்பலன்களை அடையப்போகும் ஐந்து ராசிகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
செவ்வாய் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகளை அளிக்கும். மேஷத்தின் அதிபதி கிரகமே செவ்வாய்தான். ஆகையால் செவ்வாய் மேஷ ராசிக்காரர்களை அன்பாக பார்த்துக் கொள்வார்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். இந்த காலத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி அனுகூலமாக இருக்கும். பணியிடத்தில் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
செவ்வாய் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு வெற்றிகளை அள்ளித் தரும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் நிச்சயம் வெற்றி காண்பார்கள்.
செவ்வாய் பயிற்சி மகர ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். வேலை வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.