சனி வக்ர பெயர்ச்சி: அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிகள் இவைதான்

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

சனி பெயர்ச்சி

சனி பகவான் ஜூன் 29 ஆம் தேதி நள்ளிரவு 12:35 மணிக்கு கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவார். நவம்பர் 15 அன்று சனி வக்ர நிவர்த்தி அடைவார்.

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

சனி வக்ர பெயர்ச்சி

சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

மேஷம்

சனி வக்ர பெயர்ச்சியால் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு இருக்கும். அரசியலுடன் தொடர்புடையவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவார்கள். அரசாங்கத்தில் உயர் பதவி கிடைக்கலாம்.

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

கடகம்

சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். செல்வம் அதிகரிக்கும். அது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்.

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

கன்னி

சனி வக்ர பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை ஆளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றமும் ஏற்படக்கூடும், ஆனால் இது அவர்களின் பதவி உயர்வுடன் சேர்ந்து நடக்கும். ஊதிய உயர்வும் கிடைக்கும்.

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

துலாம்

சனி வக்ர பெயர்ச்சி காரணமாக தொழிலதிபர்கள் வியாபாரத்தில் மகத்தான வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த காலத்தில் லாபம் அதிகரிக்கும். பயிற்சித் தொழிலில் தொடர்புடையவர்கள் துரித வேகத்தில் முன்னேற்றம் காண்பார்கள். குறிக்காக பெண் தொழிலதிபர்கள் லாபம் அடைவார்கள்.

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

மீனம்

வீடு, வாகனம், மனை, கடை வாங்க கடன் கிடைக்காதவர்களுக்கு இப்போது எளிதில் கடன் கிடைக்கும். மீன ராசி மாணவர்களுக்கு, வக்ர சனியின் தாக்கத்தால் வெளிநாட்டில் படிக்கும் ஆசை நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும்.

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

VIEW ALL

Read Next Story