ராதாகிருஷ்ணரை வணங்கும் ராதாஷ்டமி கொண்டாட்டங்கள்! கண்ணனை ஆட்கொண்ட ராதையின் பிறந்தநாள்...

';

ராதாஷ்டமி

ஸ்ரீகிருஷ்ண பகவானின் அன்புக்காதலி ராதாராணி பிறந்தது அஷ்டமி நாளன்றுதான். ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த கோகுலாஷ்டமிக்குப் பின் வரும்15வது நாளில் வரும் அஷ்டமி தினத்தில் பிறந்தவர் ராதா

';

ராதகிருஷ்ணர்

ஸ்ரீ கிருஷ்ணரை நினைக்கும்போதே, பக்தர்களின் மனதில் ராதையும் தோன்றுவார். கிருஷ்ண பக்தர்கள், ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது , ‘ராதே கிருஷ்ணா’ என்ற கூறிக்கொள்வது வழக்கம் ஆகும்

';

ராதை பிறப்பு

உத்தரப் பிரதேசம் மதுராவில் இருக்கும் பிரம்மஸரன் என்ற மலை அடிவாரத்திலுள்ள பர்ஸானா என்ற கிராமத்தில் ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி தினத்தில் ராதாராணி பிறந்தார்

';

ராதாராணி

பர்ஸானாவில் பிறந்த ராதை, கண்ணனின் மனம் கவர்ந்தவரானது எப்படி? தெரிந்துக் கொள்வோம்...

';

ராதையின் பார்வை

ராதையின் தாய் கீர்த்திதாவும், கண்ணனின் அன்னை யசோதையும் தோழிகள். கண்ணனுக்கு மூத்தவளான ராதை பிறந்த போது கண் பார்வை இல்லை

';

கண்பார்வை

தோழியின் குழந்தையை யசோதை பார்க்கச் சென்றபோது, குழந்தை கண்ணன் ராதையை பார்த்ததும், கண் மலர்ந்து ராதை முதலில் பார்த்தது கண்ணனைத் தான். ராதைக்கு கண் தந்தவர் கண்ணன்...

';

அன்பு

கோபியர்கள் அனைவருக்கும் கண்ணன் என்றால் கரும்பு என்றால், கண்ணனுக்கு மட்டும் ராதையே உள்ளம் கவர் காதலி என உலகம் அறிய பிரலமானவர். ஸ்ரீ கிருஷ்ணரின் சக்தி ரூபம் என்பதும் மக்களின் நம்பிக்கை ஆகும்

';

ராதே கிருஷ்ணா

நாம சங்கீர்த்தனத்தில் ராதே கிருஷ்ணா என்பது மிகவும் விசேஷமானது. அதனால்தான் பாகவதர்கள் தங்களுக்குள் 'ராதே கிருஷ்ணா' என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

';

பொறுப்புத் துறப்பு

பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story