Weekly Horoscope: ஜூன் 8ம் தேதியுடன் துவங்கும் இந்த வாரத்தில், சில ராசிகளுக்கு பணவரவு, வெற்றி, சந்தோஷம் ஆகியவை கிடைக்கும் என்றும், அதே சமயம் சில ராசிகளுக்கு இது சுமாரான வராமாக இருக்கும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர். இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகளையும், ராசிகளுக்கு ஏற்ற பரிகாரங்களையும் இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
மேஷ ராசிக்கான வார பலன்கள்
மேஷ ராசியினருக்கு ஜூன் மாதம் இரண்டாம் வாரம் சந்தோஷத்தை அள்ளிக் கொடுக்கும் வரமாக இருக்கும். உறவுகள் இன்பங்களை கொடுக்கும். அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். தனிமையில் இருப்பவர்களுக்கு உறவுகள் கைகூடும் வாய்ப்பு உண்டு. தினமும் அனுமன் சாலிசா பாராயணம் செய்வது அதிர்ஷ்ட பலன்களை அதிகரிக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.
ரிஷப ராசிக்கான வார பலன்கள்
ரிஷப ராசியினருக்கு ஜூன் மாதம் இரண்டாம் வாரம் சிறிது மன சஞ்சலத்தை கொடுக்கும் வாரமாக இருக்கலாம். குடும்பத்தில் கருத்து வேற்றுமை காரணமாக மனதில் பதற்றம் ஏற்படலாம். எனினும் கவனமாக செயல்பட்டால் பல பிரச்சினைகளை தவிர்த்து விடலாம்.உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. துர்க்கை அம்மன் வழிபாடு, செல்வத்தை பெற உதவும் சிறந்த பரிகாரமாக இருக்கும்
மிதுன ராசிக்கான வார பலன்கள்
மிதுன ராசியினருக்கு ஜூன் இரண்டாம் வாரம் பண வரவை கொடுக்கும் வாரமாக இருக்கும். சவால்கள் இருந்தாலும் எளிதில் அனைத்தையும் சமாளித்து விடுவீர்கள். வெளிப்படையாக பேசுவது எப்போதுமே நன்மை பயக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். காதல் வாழ்க்கையில் உற்சாகம் காணப்படும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. விநாயகர் வழிபாடு, நற்பலன்களை அதிகம் பெற உதவும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.
கடக ராசிக்கான வார பலன்கள்
கடக ராசியினருக்கு ஜூன் மாதம் இரண்டாம் வாரம் சுமாரான பலன்களை கொடுப்பதாக இருக்கும். எனினும் பெரிய அளவில் கெடுபலன்கள் எதுவும் இல்லை. எதிலும் அவசரமாக செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் உணவிற்கு மதிப்பு கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று வழிபடுவது, மகிழ்ச்சியே பெற உதவும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.
சிம்ம ராசிக்கான வார பலன்கள்
சிம்ம ராசியினருக்கு ஜூன் மாதம் இரண்டாம் வாரம் சற்று குழப்பத்தை கொடுக்கும் பாரமாக இருக்கும். எனினும் உங்கள் மனதிற்கு நெருக்கமானவர்கள் தன் மனம் விட்டு பேசுவதால் பிரச்சனைகள் தீரும். மன பாரமும் குறையும். உங்கள் துணையின் ஆதரவும் புரிதலும் மன பலத்தை கொடுக்கும். ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திர பாராயணம் செய்வது தன்னம்பிக்கையை அதிகரித்து, தடைகள் நீங்க உதவும் சிறந்த பரிகாரமாக இருக்கும்
கன்னி ராசிக்கான வார பலன்கள்
கன்னி ராசியினருக்கு ஜூன் மாதம் இரண்டாம் வாரம், கொஞ்சம் எச்சரிக்கையா இருக்க வேண்டிய வாரம் எனலாம். மற்றவர்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பிரச்சனைகளை மனம் விட்டு பேசுவதால் தீர்வுகளை காணலாம். திருமண உறவு கைகூடும் வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகள் தொடங்கும் நன்றாக யோசித்து முடிவு எடுப்பது அவசியம். பசுவிற்கு தீவனம் அளிப்பதும், ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்ற மந்திரத்தை தினமும் 21 முறை பாராயணம் செய்வதும் பலன் தரும்
துலாம் ராசிக்கான வார பலன்கள்
துலாம் ராசியினருக்கு ஜூன் மாதம் இரண்டாம் வாரம், நல்லுறவுகளை கொடுக்கும் பாரமாக இருக்கும். பரஸ்பர புரிதல் மூலம் உணவுகள் ஆழமடையும். வெளியூர் பயணம் செய்ய திட்டமிடலாம். இதனால் ஆதாயமும் கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. தொழிலில் லாபம் ஏற்றுவதற்கான வாய்ப்பு உண்டு. உடல்நிலை சாதாரணமாக இருக்கும். அன்னை மகாலட்சுமி வழிபாடு, வாழ்க்கையில் செல்வத்தையும் வளத்தையும் பெற உதவும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.
விருச்சிக ராசிக்கான வார பலன்கள்
விருச்சிக ராசியினருக்கு ஜூன் மாதம் இரண்டாம் வாரம் பணி சுமை அதிகமாக உள்ள வாரமாக இருக்கும். அதிக எதிர்பார்ப்புகள் சச்சரவை ஏற்படுத்தலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது எனவே கவனமாக இருப்பது நல்லது. சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவது சிறந்த பரிகாரமாக இருக்கும்.
தனுசு ராசிக்கான வார பலன்கள்
தனுசு ராசியினருக்கு ஜூன் மாதம் இரண்டாம் வாரம் சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் அளிக்கும் பாரமாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் முடிவடையும். ஆன்மீக பயணம் செய்ய திட்டமிடலாம். வேலையில் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தினமும் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது அதிர்ஷ்டத்தை கொடுக்கும் நல்ல பரிகாரமாக இருக்கும்.
மகர ராசிக்கான வார பலன்கள்
மகர ராசியினருக்கு ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில், கடின உழைப்புக்கான பலன்களை பெற்று மனதில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். எனினும் குடும்ப வாழ்க்கையில் சிறிது கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். உடல் நலத்தைப் பொறுத்தவரை பெரிய பிரச்சினைகள் ஏதும் இல்லை. சனிக்கிழமைகளில் சனி சாலிசா பாராயணம் செய்வது, கஷ்டங்களை நீக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.
கும்ப ராசிக்கான வார பலன்கள்
கும்ப ராசியினருக்கு ஜூன் மாதம் இரண்டாம் வாரம் தன்னம்பிக்கை நிறைந்த வாரமாக இருக்கும். உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் பெறலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். எனினும் உடல்நல பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சனிக்கிழமை செய்யும் நவக்கிரக வழிபாடு கஷ்டங்களை தீர்க்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.
மீன ராசிக்கான வார பலன்கள்
மீன ராசியினருக்கு ஜூன் மாதம் இரண்டாம் வாரம் நம்பிக்கையை கொடுக்கும் பாரமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். சக ஊழியர்களின் ஆதரவால், வேலையில் இலக்குகளை அடைவீர்கள். உடல் நலத்தைப் பொறுத்தவரை சாதாரணமாக இருக்கும். விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், மற்றும் அன்னதானம் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் பரிகாரமாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | சனி பகவானின் அருளால்... 2027 வரை இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்திற்கு குறைவிருக்காது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









