Weekly Astro: மேஷம் முதல் மீனம் வரை... இந்த வார அதிர்ஷ்ட ராசிகளும்... ராசிகளுக்கு ஏற்ற பரிகாரங்களும்

Weekly Horoscope: மே மதம் 12ம் தேதியுடன் துவங்கும்  இந்த வாரத்தில், சில ராசிகளுக்கு சாதகமான பலன்கள் என்றும், அதே சமயம் சில ராசிகளுக்கு சிக்கல்கள் ஏற்படலாம் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 10, 2025, 05:18 PM IST
  • நிலுவையில் உள்ள பணிகள் வேகமாக நிறைவடைவது, மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.
  • பண வரவால் நிதி பிரச்சனைகள் தீரும்.
  • விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், கஷ்டங்களைப் போக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.
Weekly Astro: மேஷம் முதல் மீனம் வரை... இந்த வார அதிர்ஷ்ட ராசிகளும்... ராசிகளுக்கு ஏற்ற பரிகாரங்களும்

வார ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் மே மாதம் 12ம் தேதியுடன் துவங்கும் இந்த வாரம் எப்படி இருக்கும் என்பதை ஜோதிடர்கள் கணித்துள்ளதை அறிந்து கொள்ளலாம். இந்த வாரத்தில் அதிர்ஷ்ட பலன்களை பெறும் ராசிகளையும், ராசிகளுக்கு ஏற்ற பரிகாரங்களையும் விபரமாக இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசிக்கான வார பலன்கள் (Aries Weekly Horoscope)

மேஷ ராசியினருக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் குறைவில்லாமல் இருக்கும். ஒதுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து முடிப்பதால், பணியிடத்தில் அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். முதலீடுகள் இலாபம் கொடுக்கும். பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் ஆகாயமும் இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. பெரியவர்களின் ஆசிகளும் அன்பும், வாழ்க்கையில் வெற்றிகளை கொண்டு வந்து சேர்க்கும். துர்க்கை அம்மனை வணங்கி வருவதால், அதிர்ஷ்டம் குறைவில்லாமல் இருக்கும்.

ரிஷப ராசிக்கான வார பலன்கள் (Taurus Weekly Horoscope) 

ரிஷப ராசியினர் வேலையில் தொழிலில் முன்னேறுவார்கள். கடின உழைப்பு மற்றும் முயற்சிகளுக்கு பலம் குறைவில்லாமல் கிடைக்கும். முக்கிய பிரச்சினைகளில் நீங்கள் எடுக்கும் முடிவு தீர்வைத் தரும். எனினும் சில வேலைகள் தொடர்பாக கொஞ்சம் அலைச்சல் இருக்கலாம். சமூகத்தில் அந்தஸ்தும் கௌரவமும் அதிகரிக்கும். சிவபெருமானை வணங்குவதும், சிவ சோஸ்திரங்களை பாராயணம் செய்வதும், அதிர்ஷ்டத்தை கொடுப்பதற்கான சிறந்த பரிகாரமாக இருக்கும்.

மிதுன ராசிக்கான வார பலன்கள் (Gemini Weekly Horoscope)

மிதுன ராசியினருக்கு, இந்த வாரம் சாதகமான பலன்கள் குறைவுதான். நிதி இழப்பு ஏற்படலாம் என்பதால் சிறிது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நினைத்த பலனை பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வேலையில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியமும் சிறிது பாதிக்கப்படலாம். வெளியில் உணவு உண்பதை தவிர்க்க வேண்டும். சங்கடங்களை நீக்கும் விநாயகர் வணங்குவது, பிரச்சனைகள் தீர உதவும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.

கடக ராசிக்கான வார பலன்கள் (Cancer Weekly Horoscope)

கடக ராசியினருக்கு, இந்த வாரம் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தினரும் நண்பர்களும் மிகவும் ஆதரவாக இருப்பார்கள். அவர்கள் உதவியால் வேலைகள் திட்டமிட்டபடி நிறைவேறும். குறைவில்லாமல் இருக்கும். பண வரவால் நிதி பிரச்சனைகள் தீரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தினுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். ஸ்ரீ யந்திர வழிபாடும், ஸ்ரீ சுத்த பாராயணமும், அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.

சிம்ம ராசிக்கான வார பலன்கள் (Leo Weekly Horoscope)

சிம்ம ராசியினருக்கு இந்த வாரம் நல்ல செய்திகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சியை கொடுக்கும். சமூக சேவையிலும் ஆன்மீகப் பணிகளிலும் ஈடுபட விருப்பம் ஏற்படும் மாணவர்கள் உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். வீட்டில் நிலவி வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். இதனால் மனதில் நிம்மதி ஏற்படும். ஸ்ரீ விஷ்ணு பகவான் வழிபாடும், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், கஷ்டங்களைப் போக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.

கன்னி ராசிக்கான வார பலன்கள் (Virgo Weekly Horoscope)

கன்னி ராசியினருக்கு இந்த வாரம் சிறந்த வாரமாகவே இருக்கும். வேலையில் மிகவும் ஆர்வமாக ஈடுபடுவீர்கள். இதனால் மேலதிகாரிகளின் பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும். இதனால் சம்பள ஒரு உயர்வு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. நிலுவையில் உள்ள பணிகள் வேகமாக நிறைவடைவது, மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். பொதுவாக வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஸ்ரீ கிருஷ்ண பகவான் வழிபாடும், ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதும், அதிர்ஷ்டத்தை குறைவில்லாமல் பெற உதவும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.

துலாம் ராசிக்கான வார பலன்கள் (Libra Weekly Horoscope)

துலாம் ராசியினருக்கு இந்த வாரம், கலமையான பலன்களை கொடுக்கும். வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பது பல பிரச்சனைகளை தவிர்க்க உதவும். மற்றவர்களை சார்ந்து இருப்பதற்கு பதிலாக, நீங்களே முக்கிய விஷயங்களை முடிவு செய்வது நல்லது. பணிகள் திட்டமிட்டபடி நிறைவேற, கூடுதல் முயற்சிகள் எடுக்க வேண்டி இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்துவதால், பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள கோவிலுக்கு செல்வதும், அங்குள்ள நவகிரக சந்நிதியில் வழிபடுவதும் நினைத்த காரியம் நிறைவேற உதவும்.

விருச்சிக ராசிக்கான வார பலன்கள் (Scorpio Weekly Horoscope)

விருச்சிக ராசியினருக்கு, இந்த வாரம் கலவையான பலன்கள் கிடைக்கும். விரும்பிய பலனை அடைய குறுக்கு வழியை பின்பற்றுவது, விதிமுறைகளை மீறுவதும் சிக்கல்களை கொண்டு வந்து சேர்க்கும். உறவுகளை பகைத்துக் கொள்வது நல்லதல்ல. பெரியவர்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பது நல்லது. சொத்து வாங்கும் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தினமும் அனுமன் வழிபாடும், அனுமன் சாலிசா பாராயணமும், சிக்கல்களை தீர்க்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.

தனுசு ராசிக்கான வார பலன்கள் ( Sagittarius Weekly Horoscope)

தனுசு ராசியினருக்கு நீண்டகால பிரச்சனைக்கு தீர்வு காணும் வாய்ப்பு கிடைக்கும். அதற்கு உறவினர்களும் நண்பர்களும் உதவுவார்கள். வேலை இல்லாதவர்களுக்கும், வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கும், இந்த வாரம் சிறந்த பாரமாக இருக்கும். ஆன்மீக யாத்திரை செல்ல திட்டமிடலாம். நிதி விஷயங்களில் திட்டமிட்டு செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும். வியாழக்கிழமைகளில் கோவிலுக்கு சென்று வழிபடுவதும், ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதும், அதிர்ஷ்டத்தை கொடுக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.

மகரம் ராசிக்கான வார பலன்கள் ( Capricorn Weekly Horoscope)

மகர ராசியினருக்கு இந்த வாரம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த வாரமாக இருக்கும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுப்பதை தவிர்க்க வேண்டும். வேலையில் நிதானம் தேவை. செலவுகள் அதிகரித்து பணத்தட்டுப்பாடு ஏற்படலாம். அதனால் கவனமாக செயல்படுவது நல்லது. சிறிய வேலையை முடிக்கக்கூட மிகவும் சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கும். உங்களை முழுத்த நினைக்கும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தினமும் பகவான் அனுமனை வழிபடுவதும், ராம பக்த அனுமானின் ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்வதும் பலன் கொடுக்கும்.

கும்பம் ராசிக்கான வார பலன்கள் (Aquarius Weekly Horoscope)

கும்ப ராசியினருக்கு, இந்த வாரம் கலவையான பலன் தரும் வாரமாக இருக்கும். வேலைகளில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். அசையா சொத்து வாங்குவதில் வெற்றி பெறலாம். ஆனால் வேலை சுமை அதிகமாக இருக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் முடிக்க இயலாமல் மன அழுத்தம் ஏற்படலாம். பஞ்சமுகி ருத்ராட்சம் அணிவதும், சிவபெருமானை தினமும் வழிபடுவதும், பிரச்சனைகளை போக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.

மீன ராசிக்கான வார பலன்கள் (Pisces Weekly Horoscope) 

மீன ராசியினருக்கு இந்த வாரம் எல்லா வகையிலும் சாதகமான சூழ்நிலை ஏற்படும். அதிலும் வாரத்தில் முதல் பாதி நீங்கள் நினைத்த அனைத்தையும் நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். எனினும் உணர்ச்சிக்கு அடிமையாகாமல் எந்த விஷயத்தையும் புத்திசாலித்தனமாக முடிவு எடுப்பது நல்லது. இதனால் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் பலவற்றில் தவிர்க்கலாம். செலவுகளிலும் கவனமாக இருக்கவும். பெருமாளை தினமும் வணங்குவதும், விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்வதும், குறையாமல் அதிர்ஷ்டம் கிடைத்த உதவும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | வளங்கள் தரும் வைகாசி... சூரியன் குரு அருளால் ஜாக்பாட் பலன்களை பெரும் சில ராசிகள்

மேலும் படிக்க | மேஷத்தில் புத-ஆதித்ய யோகம்... குறையாத செல்வம், வளமான வாழ்வைப் பெறும் 5 ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News