Weekly Horoscope March 31 To April 6 : மார்ச் 31 ஆம் தேதியுடன் துவங்கும் வாரத்தில், சில ராசிகளுக்கு, பண வரவு கிடைப்பதுடன் சாதகமான பலன்களைத் தரும் என்றும், அதே சமயம் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் மார்ச் 31 ஆம் தேதியுடன் துவங்கும் இந்த வாரம் எப்படி இருக்கும் என்பதை ஜோதிடர்கள் கணித்துள்ளதை அறிந்து கொள்ளலாம். இந்த வாரம் சில ராசிகள் சந்தோஷத்தையும், சில ராசிகள் சில சங்கடத்தையும் சந்திக்கலாம்.
12 ராசிகளுக்கான வார ராசிபலன் (மார்ச் 31 - ஏப்ரல் 6, 2024)
மேஷம் (Aries): இந்த வாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழிலில் நெருக்கடி அல்லது சிக்கல்கள் ஏற்படலாம். பணி இடத்தில் புதிய பொறுப்புகள் பெறலாம். தொழில் நெருக்கடியாக இருந்தாலும் முன்னேற்றம் பெரும். குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பணவரவு அதிகரிக்கும்.
ரிஷபம் (Taurus): இந்த வாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான பரிவர்த்தனைகள் மற்றும் மாற்றங்கள் ஏற்படலாம். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். நீண்ட நாள் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். மனஅழுத்தம் குறையும். செலவுகள் அதிகரிக்கலாம்.
மிதுனம் (Gemini): இந்த வாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில் வளர்ச்சி அடையும். நீண்ட பயணங்கள் அமையலாம். உறவினர்கள் மூலம் நன்மை கிடைக்கும்.
கடகம் (Cancer): இந்த வாரம் கடக ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான வாரமாக இருக்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சிம்மம் (Leo): இந்த வாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு முயற்சிகள் வெற்றியடைய உதவுகின்றன. தொழில் ரீதியாக சிறந்த முன்னேற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். உழைப்பிற்கு பொருத்தமான மதிப்பு கிடைக்கும்.
கன்னி (Virgo): இந்த வாரம் கன்னி ராசிக்காரர்களுக்கு திடீர் செலவுகள் அதிகரிக்கும். புதிய திட்டங்களை தொடங்க ஏற்ற நேரம். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் சில மனக்கசப்புகள் ஏற்படலாம். பொறுமையுடன் செயல்படுங்கள்.
துலாம் (Libra): இந்த வாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். தொழில் மற்றும் பணவரவு சிறப்பாக இருக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
விருச்சிகம் (Scorpio): இந்த வாரம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் காணலாம். குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். புதிய முதலீடுகளில் கவனம் தேவை.
தனுசு (Sagittarius): இந்த வாரம் தனுசு ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய திட்டங்களை தொடங்க ஏற்ற நேரம். சொத்து சிக்கல்கள் தீரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம் (Capricorn): இந்த வாரம் மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான வாரமாக இருக்கும். புதிய முதலீடுகள் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
கும்பம் (Aquarius): இந்த வாரம் கும்ப ராசிக்காரர்களுக்கு புதிய திட்டங்கள் வெற்றியாகும். ஆரோக்கியத்தில் சிறிய கவனத்துடன் இருக்கவும். வேலைகளில் கவனமாக செயல்பட வேண்டும். பயணங்களில் கவனம் தேவை.
மீனம் (Pisces): இந்த வாரம் மீன ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி காணலாம். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். பணவரவு அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நாளை சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு அனைத்திலும் வெற்றி, பொற்காலம் ஆரம்பம்
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2025... கோடி நன்மைகளை பெறும் சில ராசிகளும்... சில பரிகாரங்களும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









