இந்த ராசிக்காரகளுக்கு பிரச்சனைகள் தீரும்.. ஆனால் இதில் கவனம் தேவை!

ஏப்ரல் 7 முதல் 13ஆம் தேதி வரை மேஷம், ரிஷபம் மற்றும் மிதுன ராசிக்காரக்ளுக்கு எப்படியான பலன்கள் இருக்கும் என்பது குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம். 

Written by - R Balaji | Last Updated : Apr 6, 2025, 08:17 PM IST
இந்த ராசிக்காரகளுக்கு பிரச்சனைகள் தீரும்.. ஆனால் இதில் கவனம் தேவை!

மேஷம்

Add Zee News as a Preferred Source

தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். லாபம் அதிகரிக்கும். இறங்கிய காரியங்களில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே இருந்த மனகசப்புகள் நீங்கும். பெற்றோர்களால் ஆதாயம் கிடைக்கும். அதேபோல் பயணத்தால் ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலையில் சக ஊழியர்களின் ஒருவரால் தொல்லை ஏற்படலாம். எனவே மற்றவர்களுடன் மிக நெருக்கமாக இருப்பதை தவிர்க்கவும். நீண்ட கால பிரச்சனைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிரச்சனைகள் இருந்தால் அதற்கான பரிசோதனை செய்வது அவசியமாகும். 

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று கால பைரவருக்கு உப்பு மிளகு வைக்க வேண்டும்.  

ரிஷபம் 

இந்த வாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல வாரமாக அமையும். வேலையில் புதிய பொறுப்புகள் வரும். பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் விஷயத்தில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும். நல்ல செய்திகள் கிட்டும். நீண்ட கால தடைகள் நீங்கும். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். மற்றவர்களால் ஆதாயம் கிடைக்கும். வார்த்தைகளில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் காட்டுவது நல்லது. குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு முல்லை மலர் மாலை சாற்றுவது நல்லது. 

மிதுனம்

இந்த வாரம் மீதுன ராசிக்காரர்களுக்கு நல்ல வாரமாக அமையும். தொழிலில் முன்னேற்றம், வேலையில் பதவி உயர்வு, புதிய கட்டிடம் கட்ட வாய்ப்புகள் உள்ளது. பழைய கடன்கள் தீரும், குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருக்கும் உடல் சம்பந்தமான பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாராத நல்ல விஷயங்கள் அனுகூலத்தை தரும். உத்யோகஸ்தர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். 

பரிகாரம்: துர்கா தேவி அம்மனுக்கு செவ்வய்க்கிழமை அன்று அரளிப்பூ மாலை சாற்றுவது நல்லது. 

மேலும் படிங்க: சந்திரன் - செவ்வாய் சேர்க்கை: மகாலட்சுமியின் அருளால் 3 ராசிகளுக்கு பணமழை தான்!

மேலும் படிங்க: இன்றைய ராசிபலன் ஏப்ரல் 6 ஞாயிறு ராம் நவமியில் அபூர்வ யோகம், இந்த 3 ராசிகளின் நல்ல நாள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News