நவகிரகங்கள் ஒன்பது இருந்தாலும் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் சொந்த வீடு உண்டு. ஆனால், நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவுக்கு ஆட்சி வீடு இல்லை. அதனால்தான் வாரத்தில் ஏழு கிரகங்களுக்கும் உரிய நாட்களில் ஒரு குறிப்பிட்ட சமயம் ராகுவுக்கும் கேதுவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், ராகு காலம் என்பதைக் கேள்விப்பட்டிருக்கலாம். கேது காலம் என்பதும் உள்ளது, ஆனால் அதை யாரும் அதிகமாக கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகு - கேது காலம்


நவகிரகங்களில் புதன் பலம் பெற்றவர் என்றால், அவரைவிடசெவ்வாய் பலம் பெற்றவர். ஏறு வரிசையில் பார்த்தால், புதன், செவ்வாய், சனி, குரு, சுக்கிரன், சூரியன் என்று சொல்வார்கள். ஆனால், ராகு கேது ஆகிய இரு கிரகங்களும், பிற ராசிகளுடன் ஒப்பிடத் தேவையில்லாத வகையில் தங்களுக்கென தனி பாதையில் இயங்குகின்றனர். பிறகு கிரகங்கள் அனைத்தும் வலமாக சுற்றினால், ராகுவும் கேதுவும் மட்டும் எதிர்திசையில் அதாவது இடப்புறமாக சுற்றுவார்கள்.


இப்படி எல்லாவிதங்களிலும் பிற ஏழு கிரகங்களில் இருந்தும் மாறுபட்டுள்ள ராகுவும் கேதுவும் தங்களுக்கென தனி நேரத்தை பெற்றவர்கள். நாள்தோறும் மூன்றே முக்கால் நாழிகை அதாவது ஒன்றரை மணி நேரம் ராகுவுக்கான காலம். அதே போல கேதுவுக்கு உண்டான காலமும் உண்டு. ஆனால், அதனை எமகண்டம் என்றே அறிகிறோம். பிற ஏழு கிரகங்களும் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று வலமாகச் சுற்றும்போது ராகுவும் கேதுவும் மேஷம், மீனம், கும்பம் என்று இடமாகச் இயங்குவார்கள்.


மேலும் படிக்க | ஆனி மாதம் அட்டகாசமாக இருக்க எந்த ராசியினர் யாருக்கு என்ன தானம் செய்ய வேண்டும்?


மோட்ச காரகர்கள்


சாயா கிரகங்களான ராகு மற்றும் கேதுவை ஞான காரகன், மோட்ச காரகன், குரூர கிரகங்கள், அசுப கிரகம், பாபக் கிரகம் என்றும் அழைப்பார்கள். ராகுவைப்போல் கொடுப்பாரில்லை; கேதுவைப்போல் கெடுப்பாரில்லை என்பார்கள். ஆனால், ராகு கொடுத்துக் கெடுக்கும். கேது கெடுத்துக் கொடுக்கும் அதாவது எதிரெதிர் குணங்களைக் கொண்ட கிரகங்களாக இருந்தாலும், அழைக்கும்போது, ராகு கேது என்று சொல்லாமல், ராகு-கேது என்று இணைத்தே சொல்கிறோம்.


ராகுவும் கேதுவும் எந்த ராசியில் வந்தாலும் அந்த ஸ்தானத்திற்கு உண்டான பலனைக் கெடுப்பார்கள். ஜாதக ரீதியாக ஒருவருக்கு பாக்கிய ஸ்தானத்தில் ராகுவோ கேதுவோ வந்தால், பூர்வ புண்ணிய பாக்கியம் ஆகிய அனுகூலப் பலன்களைக் கெடுத்துவிடுவார்.


ராகு கேது தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெற, ராகுவால் பிரச்சனையோ தோஷமோ இருப்பவர்கள், ராகுவின் அதிதேவதையான துர்க்கை அன்னையை வழிபடலாம். ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுவதும், எலுமிச்சை விளக்குப் போடுவதும் நல்லது. அதேபோல கேதுவுக்கு அதிதேவதை விநாயகர் என்பதால், கேதுவுக்கு உரிய எமகண்ட நேரத்தில் பிள்ளையாரை வணங்கி வழிபடலாம். இந்த வழிபாடுகள், ராகு கேதுவினால் ஏற்படும் தீய பலன்களைக் குறைத்துக் கொடுக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | புதாதித்ய யோகத்தால் தலைவிதியை மாற்றலாம்! உங்களை புத்திசாலியாக்கும் யோகம்...


மேலும் படிக்க | Daily Rasipalan: ஜூன் மாதம் 13: க்ரோதி ஆண்டு வைகாசி 31ம் நாளுக்கான ராசி பலன்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ