பார்த்தவுடன் வசீகரிக்கும் பெண்கள்..‘இந்த’ 3 ராசியை சேர்ந்தவர்களாக இருப்பார்களாம்..

Women Of 3 Zodiac Signs Is Insanely Attractive : அனைவரும் அழகுதான் என்றாலும், ஒரு சில ராசியை சேர்ந்த பெண்கள் பார்த்துவடன் வசீகரிக்கும் அழகுடன் இருப்பார்களாம். அவர்கள் யார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Apr 6, 2025, 06:02 PM IST
  • வசீகரமான பெண்கள்!
  • இந்த 3 ராசியை சேர்ந்தவர்களாக இருப்பர்..
  • யார் யார் தெரியுமா?
பார்த்தவுடன் வசீகரிக்கும் பெண்கள்..‘இந்த’ 3 ராசியை சேர்ந்தவர்களாக இருப்பார்களாம்..

Women Of 3 Zodiac Signs Is Insanely Attractive : பெண்கள் என்றாலே அழகுதான் இல்லையா? ஆனால் நமக்குள் பல சமயங்களில் “எதுதான் அழகு?” என்ற கேள்வியும் தோன்றலாம். உண்மையை சொல்லப்போனால் அழை எந்தவொரு வட்டத்திற்குள்ளும் வைக்க முடியாது. நம் கண்களுக்கு எது பிடிக்கிறதோ, எதை நாம் அழகு என்று நினைக்கிறோமாே அதுதான் அழகு. அழகுக்கும் வசீகர்த்திற்கும் பெறும் தூரம் இருக்கிறது. காரணம், இந்த சமூகம் அழகு என்பதற்கு சில வரையறுக்களை வைத்துள்ளது. ஒரு சிலர், இந்த வரையறுக்களுக்குள் வரவில்லை என்றாலும் கூட பார்ப்பதற்கு மிகவும் வசீகரமானவர்களாகவும் பார்த்தவுடன் பிடித்து விடும் குணாதிசயம் நிரம்பியவர்களாகவும் இருப்பார்கள். அப்படி, வசீகரிக்கும் அழகும் குணாதிசயமும் மிக்க 3 பெண் ராசிக்காரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

மகரம்:

மகர ராசியை சேர்ந்தவர்கள், கவர்ச்சிக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள், சமூகத்தின் பார்வையில் சராசரி ஆளாகவும், நடுநிலையில் இருப்பவர்கள்  போல தெரிந்தாலும் ஏதோ ஒரு விஷயம் இவர்களை பார்த்தவுடன் பிடிக்க செய்துவிடும். அது அகலமான கண்களாக இருக்கலாம், அல்லது பரீச்சியமான முகமாக இருக்கலாம். அது மட்டும் கிடையாது, இவர்கள் யாரிடமும் நடிக்காமல் நேர்மையான புன்னகையுடன் இருப்பதே இவர்களை வசீகரமானவர்களாக காண்பிக்கும். இது, இவர்களின் தனித்துவமான அழகு மற்றும் குணாதிசயத்தில் ஒன்றாகும். 

இந்த ராசியை சேர்ந்தவர்கள், தான் அணியும் உடைகள் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்றும், பொறுத்தமாக இருக்க வேண்டும் என்றும் நினைப்பர். இதனால், இவர்களை முதல்முறை பார்த்தவுடன் சிலர் “அடடே, எப்படியொரு அழகு” என்று நினைத்துக்கொள்வர்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியை சேர்ந்த பெண்களை முதலில் பார்த்தவுடன் பலருக்கு மனதுக்குள் ஒருவித இனம் புரியாத பயம் ஏற்படலாம். காரணம், இவர்கள் பார்ப்பதற்கு கடிந்து பேசும் தன்மை கொண்டவர்கள் போல தெரிவர். அது மட்டுமன்றி இவர்கள் கண்களை பார்க்கும் போதே “ஏதோ மர்மம் இருக்கிறது” என நமது மனதுக்குள் தோன்றும். ஆனால் இவர்களுடன் பழகிப்பார்த்தால்தான் இவர்களின் உண்மை குணம் புரியும்.

உண்மையில் விருச்சிக ராசியை சேர்ந்த பெண்களின் கண்களை பார்ப்பவர்கள் அந்த நொடியே மயங்கி விடுவார்களாம். பிறரை வெகு விரைவில் ஈர்க்கும் தன்மை கொண்ட இவர்களுக்கு சிறிய உதடுகளும் அழகான கூந்தலும் இருக்கும். 

இவர்களில் பெரும்பாலானோர் மேக்-அப் விரும்பிகளாக இருக்க மாட்டார்கள். ஆனால், இவர்களின் சருமம் எப்போதும் மென்மையாக பளபளவென இருக்குமாம். இவர்களின் தோலும் பார்ப்பதற்கு சுத்தமாக இருக்குமாம். குணாதிசயத்திலும் மிகவும் மென்மையானவர்களாக இருக்கும் இவர்களின், ஆடை-அணிகல்களில் ஆடம்பரம் காட்ட மாட்டார்களாம். இந்த எளிமையே, இவர்களை அழகாகவும் பளிச்சென்றும் காண்பிக்கும் என கூறப்படுகிறது.

துலாம்:

துலாம் ராசியை சேர்ந்த பெண்கள், உடல் அளவிலும் மனதளவிலும் மிகவும் அழகானவர்களாக இருப்பார்களாம். இவர்களின் கண்கள், முகம், காதுகள் என அனைத்தும் பார்த்தவுடன் பிறரை ஈர்க்கும் வகையில் இருக்குமாம். அது மட்டுமன்றி, எந்த வேலை செய்தாலும் அதனை நேர்த்தியாக செய்யும் இவர்கள், கண்களாலேயே பேசும் திறன் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

அழகை விட, தனித்துவமான குணாதிசயம் பிறரை காட்டிலும் இவர்களை உயர்த்தி காட்டுவதாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, தனது அழகு குறித்து பெரிதும் அலட்டிக்கொள்ளாத இவர்கள், முக அழகை விட அக அழகை மட்டும் பார்ப்பவர்களாக இருப்பார்களாம். இந்த குணாதிசயமும் இவர்களிடத்தில் கவர்ச்சிகரமான ஒன்றாக கருதப்படுகிறது.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | சந்திரனின் இடமாற்றத்தால் இந்த 4 ராசிகளுக்கு ஏப்ரல் 8 முதல் வாழ்க்கை மாறும்!

மேலும் படிக்க | இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருங்கள் - வார ராசிபலன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News