Yogini Ekadashi 2025: யோகினீ ஏகாதசி என்பது விஷ்ணு பகவானுக்கு உகந்த நாள் ஆகும். இது ஆனி மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தின் 11வது நாளில் வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் ஜூன் 21ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. பொதுவாகவே சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்வது வாழ்க்கையில் ஏற்றத்தை தரும். இந்த நாளில் பெருமாளை வேண்டி விரதம் இருந்தால் அதன் பலன்கள் இரு மடங்காக கிடைக்கும்.
ஏகாதசி திதியில், பக்தியுடன் விரதம் இருந்து, விஷ்ணுவை பூஜித்து வழிபடுபவர்களுக்கு, வாழ்க்கையில் சங்கடங்கள் எதுவுமே இருக்காது என்பது ஐதீகம். ஏகாதசி விரத நன்னாளில், விரதம் இருந்து பெருமாளை பூஜிப்பதுடன் ராசிக்கு ஏற்றபடி தானங்கள் செய்வதால், நினைத்தது நடக்கும். பகவான் விஷ்ணுவின் அருளால், வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். பகவான் விஷ்ணுவிற்கு மிகவும் உகந்த விரதங்களில் முக்கியமானது ஏகாதசி விரதம். ஏகாதசி நாளில் மகாவிஷ்ணுவை வழிபட்டு, விரதம் இருந்தால், அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலை பெறலாம், மண்ணில் வாழும் வரை நல்லபடியாக நம்பிக்கை.
ஏகாதசி விரதமானது பாவங்களை அழிப்பதுடன், வளமான வாழ்வையும் தந்து மங்காத பேரும், புகழையும் கொடுக்கும். ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால், மனம் தூய்மை அடைந்து, மனதில் வெறுப்பு, கோபம், குழப்பம் ஆகியவை விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். அதோடு, நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகி, வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணலாம். அதிலும் மனதை ஒருநிலைப்படுத்தி நாள் முழுவதும் விரதமிருப்பது மிகவும் விசேஷமானது.
ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால், மனம் தூய்மை அடைந்து, மனதில் வெறுப்பு, கோபம், குழப்பம் ஆகியவை விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். அதோடு, நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகி, வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணலாம். அதிலும் மனதை ஒருநிலைப்படுத்தி நாள் முழுவதும் விரதமிருப்பது மிகவும் விசேஷமானது.
யோகினீ ஏகாதசி அன்று சாதம் சாப்பிடக்கூடாது. சாதம் சாப்பிடுவது பாவம் என்று கருதப்படுகிறது. அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். யாரிடமும் சண்டை சச்சரவு செய்யக்கூடாது. கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். கருப்பு நிற உடைகளை அணியக்கூடாது. துளசி இலைகளை பறிக்கக்கூடாது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பகலில் தூங்கக் கூடாது. தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். அதேபோல் நெல்லிக்காய் சாப்பிட கூடாது
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: மகாராஜ வாழ்க்கை, அதிர்ஷ்ட பொற்காலம், பண வெற்றி இந்த ராசிகளுக்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ