பணத்தை தண்ணி போல் செலவு செய்யும் ராசிக்காரர்கள்! யார் யார் தெரியுமா?

Zodiac Signs That Spends More Money : சில ராசியை சேர்ந்தவர்கள், பணத்தை தண்ணீர் போல செலவு செய்வார்களாம். அவர்கள் யார் யார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jul 5, 2025, 06:01 PM IST
  • அதிகமாக செலவு செய்யும் ராசிகள்
  • தண்ணி போல பணமும் கரையும்
  • யாரெல்லாம் தெரியுமா?
பணத்தை தண்ணி போல் செலவு செய்யும் ராசிக்காரர்கள்! யார் யார் தெரியுமா?

Zodiac Signs That Spends More Money : ஒரு சில ராசியை சேர்ந்தவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். ஆனால் எவ்வளவு உழைத்தாலும், இவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அவர்கள் கையில் பணம் தங்காமல் இருக்கும் நிலை ஏற்படும். ஒன்று அந்த பணத்தை தன்னைத் தாண்டி பிறருக்காக தண்டமாக செலவு செய்வர். அப்படி இல்லை என்றால், செலவு செய்வதில் கணக்கு பார்க்காமல் இருப்பர். இதனால் பணத்தை சேமிக்க முடியாத நிலைக்குச் செல்லும் அவர்கள், ஏன் தனது பணம் தங்க மாட்டேங்கிறது என்ற வேறு சந்தேகம் கொள்வர். அப்படி அடிக்கடி செலவுகளை எதிர் கொண்டு, பணத்தை தண்ணியாக கரைக்கும் ராசிகள் யார் யார் தெரியுமா?

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் இருந்தால் உடனே சென்று ஷாப்பிங் செய்ய வேண்டும் என்று தோன்றுமாம். இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட இவர்களுக்கு, புதிய பொருட்களை வாங்கி சேர்க்கும்போது அதிக அளவில் மகிழ்ச்சி ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த மகிழ்ச்சி அவர்களது மன தடுமாற்றத்தை ஏற்படுத்துவதால், தன் சேமிப்பு பணத்தை கூட இவர்கள் கரைக்க வாய்ப்பு இருக்கிறது. என்னதான் தனது பணத்தை விரையம் ஆக்கினாலும் இவர்கள் அதை நினைத்து பின்பு கவலையும் கொள்கின்றனர் என்பது குறிப்பிட்டதக்கது.

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்கள் எதிர்காலம் குறித்து புதிதாக யோசிக்காத சொர்க்கத்தை சேர்ந்தவர்களாக இருப்பார். இப்போது, இந்த நொடி, இந்த நாள் இவற்றிற்காக மட்டும் வாழ வேண்டும் என நினைக்கும் இவர்கள், நிகழ்காலத்தில் என்ன தேவைகள் இருக்கிறதோ அதை பூர்த்தி செய்வதற்காக செலவு செய்வார்கள். அதற்கே அதிக முக்கியத்துவத்தையும் கொடுப்பர். தனக்கு இப்போதையேனும் பொருள் பிடித்து விட்டது என்றால், அதனை யோசிக்காமல் வாங்கி விடுவர். ஆனால், அந்தப் பொருளுக்கான செலவு நாளை தேவையாக அவர்களுக்கு இருந்திருக்கும். இருந்த போதிலும் அதை செலவு செய்ய அவர்கள் யோசிக்கவில்லை. நாளை செலவில் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கை இருப்பதால் அவர்களை இப்படி செய்கின்றனர். 

சிம்மம்: 

தன்னை தாண்டி தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் சமுதாயத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ராசிக்காரர்கள் சிம்ம ராசிக்காரர்கள். இவர்களுக்கு பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்கிற குணம் இருக்கும். இதனாலையே பல நேரங்களில் தன் செலவு இல்லை என்றாலும் அதனை தன் மீது போட்டுக் கொள்வர். அதே நேரத்தில் ஒரு சிலருக்கு சொகுசாக இருக்கும் வாகனம் மற்றும் நகை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். அந்த பொருட்களை வாங்குவதில் ஏதேனும் சிரமம் இருந்தால், பணம் போதவில்லை என்றால் கடன் வாங்கியாவது அதை செய்து விடுவார்களாம்.

மிதுனம்: 

தன் கண்ணுக்கு பளபளவென்று இருக்கும் பொருட்கள் மீதும், தொழில்நுட்ப பொருட்கள் மீதும் மிதுன ராசிக்காரர்களுக்கு விருப்பம் ஜாஸ்தியாக இருக்கும். அதுமட்டுமன்றி, இந்த ராசியை சேர்ந்தவர்கள் தங்களை எப்போதும் அழகு படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நினைப்பார்களாம். இதன் விளைவாக இவர்கள் அடிக்கடி ஆடம்பர செலவு செய்ய நேரிடும். இந்த காரணத்தால் இவருக்கு கை பணம் தங்குவதும் கடினமான காரியமாக மாறிவிடும். கேளிக்கைக்காக இவர்கள் செலவு செய்வது சுற்றி இருப்பவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பாரபட்சம் காட்டாமல் அன்பு காட்டும் 4 ராசிகள்! யார் யார் தெரியுமா?

மேலும் படிக்க | வெற்றியை காந்தம் போல ஈர்க்கும் 5 ராசிகள்!! யார் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News