)
ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் விளையாடியிருந்தாலும் மும்பையை சேர்ந்த ஆயுஷ் மாத்ரே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். தற்போது இந்திய அணி U 19 அணியின் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் இந்திய U 19 அணி ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் குறைந்த நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து U 19 அணிக்கு எதிராக வரும் ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 23ஆம் தேதி வரை விளையாட உள்ளனர். இந்நிலையில் இதற்கான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது இந்தியா U 19 அணியில் இருந்த இரண்டு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆதித்ய ராணா மற்றும் கிலான் படேல்க்கு மாற்று வீரர்களாக தீபேஷ் மற்றும் நமன் புஷ்பக் ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர்.
ஆதித்யாவிற்கு கீழ் இடுப்பு பகுதியில் வலி ஏற்படுவதாகவும், கிலானுக்கு வலது காலில் அதிக வலி ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்று வீரராக அறிமுகமான ஆயுஷ் மாத்ரே சில போட்டிகளிலேயே தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். ஐபிஎல் 2024 மெகா ஏலத்தில் விற்காமல் போனாலும் ருதுராஜ் கைக்குவாடிற்கு மாற்று வீரராக வந்து தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். சில போட்டிகளே விளையாடி இருந்தாலும் இந்த சீசனில் சென்னை அணிக்கு அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
Naman Pushpak. A young leggie who is representing Mumbai U19 and has taken 15 wickets in 5 League games in the ongoing Vinoo Mankad Trophy
s_harinder07) June 16, 2025
Now get INDIA U19 call-up for England Tour as injury replacement.
Players to Watch Out
ஆயுஷ் மாத்ரேவை தொடர்ந்து 14 வயதே ஆகும் வைபவ் சூரியவம்சி இந்திய U19 அணியில் இடம் பெற்றுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்ற வைபவ் முதல் சீசனிலேயே அவரது ஐபிஎல் சதம் அடித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் பெற்றுள்ளார். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய U 19 அணி வரும் ஜூன் 24ஆம் தேதி 50 ஓவர் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. அதனை தொடர்ந்து ஜூன் 27ஆம் தேதி ஒரு நாள் போட்டி தொடங்குகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான இந்திய U19 அணி: ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), வைபவ் சூரியவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மௌல்யராஜ்சிங் சாவ்தா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (துணை கேப்டன் & WK), ஹர்வன்ஷ் சிங் (WK), ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் ராவ்னா குஹான், ஹெனில்த் சௌஹான், ஹெனில்த் சௌஹான், முகமது எனான், அன்மோல்ஜீத் சிங், டி. தீபேஷ், நமன் புஷ்பக்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ