2026 ஐபிஎல் மினி ஏலம்: எங்கே, எப்போது, எதில் பார்க்கலால்? அணிகளின் பர்ஸ் தொகை - முழு விவரம்!

2026 IPL Mini Auction: 2026 ஐபிஎல் மினி ஏலம் எங்கே, எப்போது, எதில் பார்க்கலாம் மற்றும் ஒவ்வொரு அணியிடம் உள்ள பர்ஸ் தொகை எவ்வளவு உள்ளது என்ற விவரத்தை இங்கே பார்க்கலாம்.     

Written by - R Balaji | Last Updated : Dec 15, 2025, 01:49 PM IST
  • 2026 ஐபிஎல் மினி ஏலம்
  • எங்கே, எப்போது, எதில் பார்க்கலாம்
  • முழு விவரம்
2026 ஐபிஎல் மினி ஏலம்: எங்கே, எப்போது, எதில் பார்க்கலால்? அணிகளின் பர்ஸ் தொகை - முழு விவரம்!

ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இத்தொடருக்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்து விட்டது. அதற்கு காரணம், ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்துக்கொண்ட மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 15ஆம் தேதி வெளியிட்டது. இதில் சில முக்கிய வீரர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், மினி ஏலத்தில் அவர் எந்த அணிக்கு மாற்ற உள்ளனர் என்ற எதிர்பார்ப்புதான் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதிலும் சில வீரர்கள் டிரேட் மூலம் அணிகள் மாறினர். அதுவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒரு காரணமாக உள்ளது. இந்த சூழலில், 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. இது எப்போது, எங்கு நடக்கிறது. எதில் பார்க்கலாம்? ஒவ்வொரு அணியிடமும் எவ்வளவு தொகை உள்ளது என்ற முழு விவரத்தை இங்கு தெரிந்துக்கொள்வோம்.

Add Zee News as a Preferred Source

2026 ஐபிஎல் மினி ஏலம் எப்போது?

அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் மினி ஏலம் நாளை (டிசம்பர் 16) நடைபெற இருக்கிறது.

2026 ஐபிஎல் மினி ஏலம் எங்கே?

இந்த ஆண்டு ஐபிஎல் மினி ஏலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் நடைபெறுகிறது.

2026 ஐபிஎல் மினி ஏலம் எந்த நேரத்தில் தொடங்குகிறது?

இந்திய நேரப்படி சரியாக நாளை டிசம்பர் 16 அன்று பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்குகிறது.

2026 ஐபிஎல் மினி ஏலத்தை எதில் பார்க்கலாம்?

ஐபிஎல் மினி ஏலத்தை நேரடி ஒளிப்பரப்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்கில் பார்க்க முடியும். மேலும், ஜியோ ஹாட்ஸ்டார் செயலி மற்றும் வலைதளத்தில் பார்க்கலாம்.

2026 ஐபிஎல் மினி ஏலத்திற்கு ஒவ்வொரு அணியும் எவ்வளவு தொடகையுடன் வருகிறது?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ரூ. 64.3 கோடி உள்ளது. இந்த அணியில் மொத்தம் 13 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூ. 43.4 கோடி உள்ளது. இந்த அணியில் மொத்தமாக 9 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் ரூ. 25.5 கோடி உள்ளது. இந்த அணியில் மொத்தம் 10 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் ரூ. 22.95 கோடி உள்ளது. இந்த அணியில் மொத்தம் 6 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் ரூ. 21.8 கோடி உள்ளது. இந்த அணியில் 8 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் ரூ. 16.4 கோடி உள்ளது. இந்த அணியில் 8 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ரூ. 16.05 கோடி உள்ளது. இந்த அணியில் மொத்தம் 9 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ரூ. 12.9 கோடி உள்ளது. இந்த அணியில் மொத்தம் 5 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் ரூ. 11.5 கோடி உள்ளது. இந்த அணியில் மொத்தம் 4 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ரூ. 2.75 கோடி உள்ளது. இந்த அணியில் மொத்தம் 5 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

2026 ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக போட்டி உள்ள வீரர்கள் யார் யார்?

ஐபிஎல் மினி ஏலத்தில் சில வீரர்களுக்கு அதிக போட்டி இருக்கும் என தெரிகிறது. அவர்களுக்கு அதிக தொகை வைத்திருக்கும் சிஎஸ்கே, கேகேஆர், எஸ்ஆர்ஹெச், எல்எஸ்ஜி போன்ற அணிகள் போட்டிப்போட வாய்ப்புள்ளது. லியாம் லிவிங்ஸ்டோன், கேமரூன் கிரீன், ரவி பிஷ்னோய், மதீஷா பதிரனா, ஆகாஷ் தீப் உள்ளிட்ட வீரர்களுக்கு போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் படிக்க: CSK இப்பவே பலமா இருக்கு.. இன்னும் இந்த 2 வீரர்களை எடுத்தால் போதும்! கப் கன்ஃபார்ம்

மேலும் படிக்க: 2026 ஐபிஎல் மினி ஏலம்: இந்த 5 வீரர்களுக்குதான் அதிக டிமெண்ட்.. CSK எந்த வீரரை எடுக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News