2026 டி20 மகளிர் உலக கோப்பை அட்டவணை வெளியீடு.. எப்போது, எங்கே நடக்கிறது?

2026 T20 Womens World Cup Schedule: 2026 டி20 மகளிர் உலக கோப்பையின் முழு அட்டவணையை இன்று (ஜூன் 18) ஐசிசி வெளியிட்டுள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Jun 18, 2025, 05:20 PM IST
  • 2026 டி20 மகளிர் உலக கோப்பை
  • அட்டவணை வெளியீடு
2026 டி20 மகளிர் உலக கோப்பை அட்டவணை வெளியீடு.. எப்போது, எங்கே நடக்கிறது?

2026 டி20 மகளிர் உலகக் கோப்பைக்கான முழு அட்டவணையை இன்று (ஜூன் 18) ஐசிசி வெளியிட்டுள்ளது. முதல் போட்டியாக ஜூன் 12, 2026 அன்று எட்ஜ்பாஸ்டனில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 12 அணிகள் இந்த உலக கோப்பைக்காக போட்டியிடுகின்றன.

இந்த 12 அணிகளை 2 குழுக்கலாக பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் 1ல் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், Qualifier 1 & 2. குரூப் 2வில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, Qualifier 1 & 2 அணிகள் போட்டியிடுகின்றன. இந்த இரண்டு குரூப்களிலும் லீக் சுற்றின் முடிவில், முதல் இரண்டு இடத்தை பிடித்த 4 அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறும். 

குவாலிஃபையர் 1 மற்றும் 2 என்பது ஐசிசி டி20 மகளிர் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெறும். இதன் மூலம் மீதமுள்ள 4 அணிகளை தீர்மானிப்பார்கள்.  2026 ஜூன் 12ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் ஜூலை 05ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன், ஹாம்ப்ஷயர் பவுல், ஹெடிங்லி, ஓல்ட் டிராஃபோர்ட், தி ஓவல், பிரிஸ்டல் கவுண்டி மைதானம் மற்றும் லார்ட்ஸ் மைதானங்களில் நடைபெறுகிறது.  

இந்தியாவின் போட்டிகள்

இந்தியாவுக்கு முதல் லீக் போட்டி பாகிஸ்தானுடன் ஜூன் 14ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறுகிறது. இதையடுத்து ஜூன் 17: இந்தியா vs Qualifier, ஹெடிங்லி. ஜூன் 25: இந்தியா vs Qualifier, ஓல்டு டிராஃபோர்டு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. குரூப் 1ல் இருக்கும் இந்திய அணி இந்த 3 லீக் ஆட்டங்களில் வெற்றி பெறுவதை பொருத்து, அரை இறுதி போட்டிக்கு முன்னேறும். மேலும், இத்தொடரின் இறுதி போட்டி ஜூலை 5ஆம் தேதி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

மேலும் படிங்க: என்னால் தான் இந்த விஷயம் அணியில் நடந்தது - உண்மையை சொன்ன பும்ரா!

மேலும் படிங்க: முகமது அசாருதீன் முதல் மனைவி யார்? விவாகரத்துக்குப் பிறகு அவரது வாழ்க்கை எப்படி இருக்கிறது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News