ஏபிடி வில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி எந்த அளவிற்கு நெருக்கமான நண்பர்கள் என்று நாம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று. இந்த நிலையில் விராட் கோலி தன்னிடம் சில மாதங்கள் பேசாமல் இருந்ததாகவும் தான் செய்த செயலால் அவருக்கு மன கசப்பு ஏற்பட்டதாகவும் எபிடி வில்லியர்ஸ் கூறி உள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், யூடியூப் நேரலையின் போது, அனுஷ்கா சர்ம தனது இரண்டாவது குழந்தையுடன் கர்ப்பமாக இருக்கிறார் என்ற தவறான தகவலை வெளியிட்டிருந்தார். கோலி மற்றும் அனுஷ்கா இருவரும் கர்ப்பம் குறித்த தகவலை ரகசியமாக வைத்திருந்ததால், எபிடி வில்லியர்ஸ் கூறியது ரசிகர்கள் இடையே பெரிய செய்தியாக மாறியது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தற்போது ஏபிடி வில்லியர்ஸ் பேசி உள்ளார். நாங்கள் இருவரும் ஒரே பிரச்சனையில் இருந்தோம் என்பது எனக்குத் தெரியும், ஏனென்றால் நாங்கள் அதைப் பற்றிப் பேசினோம். கடந்த ஆறு மாதங்களாக அவர் என்னுடன் தொடர்பில் இருக்கிறார். கடவுளுக்கு நன்றி, ஏனென்றால் அவர்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கும் போது நான் அதை முன்கூட்டியே அறிவித்தேன். எனவே அவர் மீண்டும் என்னிடம் பேசத் தொடங்கியபோது நான் மிகவும் நிம்மதியடைந்தேன்.
அவர் ஒரு கடினமான காலகட்டத்தில் இருந்தார். மேலும், தனது வாழ்க்கையின் சில தருணங்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்து என்னுடன் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்பினார். நான் அவருக்கு 100 சதவீதம் ஆதரிக்கிறேன். அவர் ஒரு அற்புதமான வாழ்க்கையைக் கொண்டிருந்தார், கடைசி பந்து வரை அவர் தனது கிரிக்கெட்டை அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதுதான் அவருக்கு முன்னோக்கிச் செல்லும் வழி என்றால், நான் அவருக்குப் பின்னால் இருக்கிறேன். அவருக்கு இன்னும் நிறைய வெள்ளை பந்து கிரிக்கெட் மீதமுள்ளது என்று நம்புகிறேன் என ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்தார்.
மேலும் படிங்க: இந்த 2 மாவட்டங்களில் கனமழை தொடரும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மேலும் படிங்க: கலைஞர் மகளிர் உரிமை தொகை: முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ