India National Cricket Team: ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணம் நாளையுடன் நிறைவடைய உள்ளது. ஓடிஐ தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியா இழந்துவிட்டது. தற்போது நடைபெறும் டி20ஐ தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நாளை நடைபெறும் கடைசி டி20ஐ போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை கைப்பற்றும், ஒருவேளை தோற்றாலும் தொடர் சமநிலையையே அடையும். எனவே, இந்தியா மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் எனலாம்.
Team India: தென்னாப்பிரிக்காவுடன் மோதல்
நாடு திரும்பிய பின் உடனடியாக சில வீரர்கள் டெஸ்ட் போட்டிக்கு தயாராக வேண்டும். வரும் நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. விராட் கோலி, அஸ்வின், ரோஹித் சர்மா ஆகியோரின் ஓய்வுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணி இளம் வீரர்களால் புத்துணர்ச்சி பெற்றிருக்கும் சூழலில், முதல்முறையாக கடினமான தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கின்றனர். தென்னாப்பிரிக்கா நடப்பு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.
Team India: இந்தியா ஏ vs தென்னாப்பிரிக்கா ஏ
தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட் மட்டுமின்றி ஓடிஐ மற்றும் டி20ஐ தொடர்களையும் வரும் டிசம்பர் மாதம் வரை விளையாட இருக்கிறது. தென்னாப்பிரிக்க அணியின் இந்த சுற்றுப்பயணத்திற்கு முன், தென்னாப்பிரிக்கா ஏ அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா ஏ - தென்னாப்பிரிக்க ஏ அணிகள் இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் மோதி வருகின்றனர். முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
Abhimanyu Eashwaran: அடுத்தடுத்து டக்-அவுட்
இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று தென்னாப்பிரிக்கா ஏ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஏ அணி 255 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இன்று இரண்டாம் நாளில் பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்கா ஏ அணியும் 221 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதனால், இந்தியா ஏ அணி 34 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 5 ரன்களை எடுத்திருந்தபோது அபிமன்யூ ஈஸ்வரன் செலே பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் டக்அவுட்டானார். இதேபோல், முதல் இன்னிங்ஸிலும் அவர் மோரேகி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் டக்அவுட்டானார்.
Abhimanyu Eashwaran: தேர்வுக்குழு இவரை கடந்துவிட்டது
ஏற்கெனவே, அபிமன்யூ ஈஸ்வரனை டெஸ்ட் ஸ்குவாடில் தேர்வுக்குழு தேர்வு செய்வதில்லை. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அபிமன்யூ ஈஸ்வரன் ஸ்குவாடில் இருந்தார். ஆஸ்திரேலியாவில் ரோஹித் - ஜெய்ஸ்வாலுக்கும், இங்கிலாந்தில் கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வாலுக்கும் பேக்அப்பாக இருந்தார். ஆனால், கடந்த மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர், வர இருக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் ஆகிய ஸ்குவாடில் அவருக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. இதன்மூலம், அவரை தேர்வுக்குழு கடந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
Abhimanyu Eashwaran: இனி வாய்ப்பு அரிதாகும்
அபிமன்யூ ஈஸ்வரன் முதல் தர போட்டிகளில் சதம் அடித்தே ஓராண்டுக்கும் மேல் ஆகிறது. தற்போது தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸிலும் அடுத்தடுத்து டக்அவுட்டாகியிருப்பது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இப்போதைக்கு தேர்வுக்குழு ஓபனர்களுக்கு பேக்அப்பை அறிவிக்காவிட்டாலும், வருங்காலத்தில் தேவைப்பட்டால் வேறு ஓபனர்கள் பக்கம் செல்லவே அதிக வாய்ப்புள்ளது. எனவே, 30 வயதான அபிமன்யூ ஈஸ்வரனுக்கு இனி டெஸ்டில் வாய்ப்பு கிடைப்பது அரிதாகும்.
மேலும் படிக்க | விராட் கோலி, ரோஹித் சர்மா இந்த தொடரில் விளையாடவில்லை... இந்தியா ஏ அணி அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









